முக்கியக் கருத்து
- பொல்லாத மனிதர்களிடமிருந்து தப்புவிக்கப்பட ஜெபம்.
- பொல்லாதவர்களின் தீயச்செயல் அவர்கள் மேலேயே திரும்ப ஜெபம்.
- தேவனுடைய நீதி எளிமையானவர்களை விசாரிக்கும்.
வச.1-5 - பொல்லாதவர்கள் தேவ மனிதனுக்கு வஞ்சகமாக கண்ணிகளை வைக்கிறார்கள். தங்கள் நாவின் வார்த்தைகளால் தீமையை பேசி, எண்ணங்களால் பொல்லாப்பை சிந்திக்கிறார்கள். கர்த்தர் இவற்றினின்று தன்னை பாதுகாக்கவும், விடுவிக்கவும் தாவீது ஜெபிக்கிறான். கர்த்தர் தாவீதை சவுலின் கண்ணிக்கும் அகிதோப்பேலின் வஞ்சக ஆலோசனைகளுக்கும் தப்புவித்தார். நம்மையும் நமது எதிராளிகளின் வஞ்சகத்திற்கும், விசேஷமாக பிசாசின் கண்ணிக்கும் கர்த்தர் தப்புவிப்பார் என்பது நிச்சயம்.மத்தேயு 6:13; 2 தெச.3:2; 1 தீமோத்.6:5.
வச.6-7 - தாவீது தன்னுடைய பாதுகாப்புக்காக வேண்டுகின்ற ஜெபம் தேவனுடன் தான் கோண்டுள்ள நெருக்கமான உறவினாலும், அவர் தனது இரட்சிப்பின் பெலனாக இருப்பதினாலும் வரவேண்டும் என்ற கருத்துடன் ஏறேடுக்கப்படுகிறது. தேவன் தன்னை சூழ்ந்திருப்பதால் பாதுகாப்பு கிடைக்கிறதை உறுதிப்படுத்துகிறது.
வச.8-11 - துன்மார்க்கருடைய தீவினை அவர்கள் மேலேயே திரும்பவேண்டுமேன்று தாவீது ஜெபிப்பதைப் பார்க்கிறோம். அக்கினி, நெருப்புத்தழல் படுகுழி போன்றவை தேவனுடைய கோபாக்கினையை காட்டுகிறது. தேவ ஜனத்திற்கு விரோதமாக எழும்பும் துன்மார்க்கர் இவ்விதமாக அழிக்கப்படும் நாள் வரும். தாவீதுக்கு விரோதமாக எழும்பிய சவுலும், அப்சலோமும் அழிந்தார்கள். மேசியா கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதாஸ் தானே அழிந்தான். தேவ ஜனத்தை துன்புறுத்தும் சாத்தான் கடைசியில் அக்கினிக்கடலில் தள்ளப்படுவான். ரோமர் 1:18.
வச.12,13 - கர்த்தருடைய நீதி சிறுமையும் எளிமையுமானவர்களின் வழக்கை விசாரித்து நியாயம் செய்து அவர்களை பாதுகாக்கும். செம்மையான வழிகளில் நடப்பவர்களை தமது சமூகத்தில் சமாதானமாக ஜீவிக்கச்செய்வார். அவர்களும் கர்த்தரைத் துதிப்பார்கள்.
Author: Rev. Dr. R. Samuel