சங்கீதம் 14- விளக்கவுரை

முக்கியக் கருத்து :

 - தேவன் இல்லை என்று சொல்பவன் தீமையான காரியங்களை செய்வான்.
 - தேவன் நீதிமானுக்கு அடைக்கலமாயிருந்து அவனை மகிழச்செய்வார்.

தேவன் இல்லை என்று சொல்லும் மனிதன் மதிகேடன். தேவனை விசுவாசியாதபடியினாலே அவன் ஒழுக்க நெறியற்று வாழ்ந்து, தேவ ஜனத்தைப் பட்சிக்கிறான் (வச.1-4).

மனித குலம் இயற்கையாகவே தேவனை விட்டு விலகி பாவத்தில் விழுந்துகிடப்பதை எபேசியர் 2:2,3இல் வாசிக்கிறோம்.

"அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், ... நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்' (எபேசியர் 2:2,3) 

இந்த நிலையை தேவனே இறங்கி வந்து கண்டறிந்தார் என்பதை ஆதியாகமம் 6:5 வசனத்தில் பார்க்கிறோம்,  
"உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுக்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை'  என்றும் ரோமர் 3:11,12இல் வாசிக்கிறோம்.
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைப்பண்ணுகிறார்கள்' (நீதிமொழிகள் 1:7).

கர்த்தர் நீதிமானுக்கு அடைக்கலமாக இருந்து விடுதலையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறார் (வச.5,6,7).

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download