முக்கியக் கருத்து
- இராக்காலங்களில் ஆலயத்தில் தேவ ஊழியர்களின் விசேஷ ஊழியம் ஒன்றுண்டு.
- அப்படிப்பட்ட ஊழியம் செய்பவர்களை தேவன் சீயோனிலிருந்தே ஆசீர்வதிப்பார்.
1. வச.1 - இராக்காலங்களில் தேவாலயத்தில் நிற்கும் தேவ ஊழியர்களின் விசேஷ ஊழியம் ஒன்று உண்டு.
1. பழைய ஏற்பாட்டில் ஆசாரிப்பு கூடாரத்தில் இரவில் நின்ற ஆசாரியர்கள் தேவாலயத்தை பாதுகாக்கவும், இஸ்ரவேல் மக்களுக்காக மன்றாட்டு ஜெபம் ஏறெடுக்கவும நியமிக்கப்பட்டிருந்தனர்.
2. இன்றைய நாட்களிலும் கிறிஸ்தவ சபைகளில் இரவு ஜெபங்களை நடத்தி தேவ மக்கள் சபைகளின் எழும்புதலுக்காவும், பாதுகாப்பிற்காகவும் அநேகமாயிரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் மன்றாடுகிறார்கள். எண்.1:50. இராக்கால ஊழியம் என்பது வெளிப்படையான ஊழியம் செய்ய முடியாத காலம் வரும் என்னும் மற்றொரு பொருளையும் குறிக்கிறது. யோவான் 9:4.
2. வச.2 - இந்த இராக்கால ஊழியத்தை செய்யும் ஊழியர்கள், விசுவாசிகள் தங்கள் கைகளை பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக உயர்த்துவது, கர்த்தரே தங்கள் ஜெபங்களை வாய்க்கச் செய்யவேண்டும் என்று ஒரு முழு அர்ப்பணிப்பிலும், விசுவாசத்திலும், எதிர்பார்ப்பிலும் ஸ்தோத்திரித்துடனே ஏறெடுக்கும் மன்றாட்டைக் குறிக்கிறது. 1 தீமோத்.2:8.
3. வச.3 - இவ்விதமாக மிகுந்த அர்ப்பணிப்போடு இராக்காலத்திலும் இடைவிடாமல் ஊழியம் செய்பவர்களை கர்த்தர் தேவ ராஜ்ஜியத்தின் தலைநகரமாகிய சீயோனிலிருந்தே ஆசீர்வதிப்பார். ஏசாயா 2:3, ரோமர் 11:26.
Author: Rev. Dr. R. Samuel