முக்கியக் கருத்து :
- கர்த்தர் நீதிமானை சோதித்தறிந்து பாதுகாக்கிறார்.
- கர்த்தர் துன்மார்க்கனை வெறுத்து தண்டிக்கிறார்.
கர்த்தரையே நம்பியிருக்கிற நீதிமானின் விசுவாசத்தை அச்சுறுத்தும் வகையில் துன்மார்க்கனின் தீய செயல்கள் நீதிமானுக்கு விரோதமாக பெருகுகின்றன (வச.1-3). கர்த்தர் நீதிமானை இதன் மூலம் சோதித்தறிகிறார் (வச.4).
"அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்' (1 பேதுரு 1:7).
கர்த்தர் துன்மார்க்கனின் கொடுமையை வெறுக்கிறபடியால் அவனை அழிப்பார் (வச.5,6). கர்த்தர் நீதியின் மேல் பிரியப்படுகிறவராதலால் செம்மையானவர்களை பாதுகாக்கிறார் (வச.5,7).
"கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், ... (உங்களைப் பகைக்கிறவர்கள்) வெட்கப்படுவார்கள்...அவர் (கர்த்தர்) உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; ' (ஏசாயா 66:5).
Author: Rev. Dr. R. Samuel