பவுல் பிலேமோனுக்கு எழுதிய கடிதம் என்பது, தப்பி ஓடிய அடிமை மற்றும் மரண தண்டனைக்கு தகுதியான ஒநேசிமுவை பிரதிநிதித்துவப்படுத்தியது அல்லது அவனுக்கான மன்றாட்டு. பவுல் ஒரு தகுதியற்ற ஒநேசிமுக்கான பரிந்துரையாளர் அல்லது வழக்கறிஞர். இது அவரை நம்பும் விசுவாசிகளுக்காக பரிந்துரை செய்யும் இயேசு கிறிஸ்துவை சித்தரிக்கிறது.
இந்த கடிதம் தேவனின் சத்தியங்களை வெவ்வேறு கோணங்களில் கற்றுக்கொள்ள உதவும் ஒரு பொக்கிஷம். இங்கு உறவு இயங்கியல்கள் உள்ளன: அப்போஸ்தலர்-விசுவாசி; எஜமான்-அடிமை; பவுல்-யோவன் மாற்கு. பணித்தளத்தை விட்டு வெளியேறி, பவுல் மற்றும் பர்னபாஸின் பிளவுக்குக் காரணமான மிஷனரி மீண்டும் பவுலுடன் சேர்க்கப்பட்டார். (அப். 15) பவுல் புரட்சி செய்யாமல் சமாதானம் செய்கிறார். ஒடுக்குபவர் மற்றும் ஒடுக்கப்பட்டவர் நற்செய்தியைப் பெறும்போது ஒப்புறவு நற்செய்தி ஏற்படுகிறது.
வேதாகம உலகக் கண்ணோட்டம் தனிநபர்கள், குடும்பங்கள், சமூதாயங்கள், சமூகங்கள், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நாடுகளின் மொத்த மாற்றத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. ஒடுக்குபவரும், ஒடுக்கப்பட்டவரும் ஒரே அன்பின் நற்செய்தியால் மாற்றப்படுகிறார்கள். பிலேமோனின் புத்தகமே வேதாகமத்திலுள்ள ஒரு சிறந்த உதாரணம். நற்செய்தி முதல் நூற்றாண்டு ரோமானியப் பேரரசில், ஒரு அடிமைகளின் எஜமானான பிலேமோனை மாற்றுகிறது. அவரை 'ஒடுக்குபவர்' என்று வகைப்படுத்த வேண்டும். அவரது அடிமைகளில் ஒருவனான ஒநேசிமு ‘ஒடுக்கப்பட்டவர்.’ அவரைப் பொறுத்தவரை, அவரது வாழ்க்கை நம்பிக்கையின்றி இருண்டிருந்தது. அவர் ரோம் நகருக்கு தப்பி ஓடுகிறார், ஒருவேளை தனது எஜமானரின் பணத்தை திருடிக்கொண்டு ஓடியிருக்கலாம். தேவன் அவன்மேல் கிருபையாக இருந்தார், அவன் பவுலைச் சந்திக்கச் செய்தார். அவர் அவனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஒரு சரியான உறவுக்கு அழைத்துச் சென்றார். இப்போது, நற்செய்தி ஒடுக்கப்பட்டவனை மாற்றியுள்ளது. இது வன்முறைப் புரட்சியைத் தராது, ஆனால் மன்னிப்பு, அன்பு மற்றும் ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட அழகான 'நல்லிணக்கத்தை' கிறிஸ்துவின் சரீரத்துடன் ஏற்படுத்தியது.
"‘சகேயு நின்று கர்த்தரை நேக்கி:’ ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். (லூக்கா 19: 8) சகேயு தனது தைரியமான அறிக்கையால் எருகோ ஜனக் கூட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருந்தார். பவுல் ஒநேசிமுவை, பிலேமோனிடம் சென்று, சமரசம் செய்து, அவர் தப்பி ஓடியதன் மூலம் தான் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட சொன்னார், ஒருவேளை திருடியதையும் கூட.
கொலோசெ
அப்போஸ்தலன் பவுல் இரண்டு வருடங்கள் எபேசுவில் ஒரு திருச்சபையை உருவாக்கினார். அவருடைய சீடர்கள் அந்த மையத்திலிருந்து கொலோசே போன்ற இடங்களுக்கு பரவி சென்றனர். எப்பாப்பிரா கொலோசிவில் தேவாலயத்தை நிறுவியிருக்கலாம். (கொலோசெயர் 1: 7) அங்கு அடிமைகளைக் கொண்ட பணக்காரரான பிலேமோன் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவர்.
சிறை கைதி பவுல் (பிலேமோன் 1: 1)
பால் தன்னை ஒரு கைதியாக அறிமுகப்படுத்துகிறார். ஆம், அவர் ரோமானிய சிறையிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறார். அவரது வீட்டுக்காவலை லூக்கா அப்போஸ்தலர்களின் நடபடிகள் புத்தகத்தில் விளக்குகிறார். (அப்போஸ்தலர் 28: 30-31) எனினும், அவர் தன்னை ரோமானியப் பேரரசின் கைதியாகக் கருத மறுக்கிறார், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கைதியாக இருந்தார். அவர் எப்போதும் ஒரு தெய்வீக கண்ணோட்டத்தில் பார்க்கிறார், ஏனெனில் தேவன் இறையாண்மையுள்ள ஆட்சியாளர் முழு பூமியையும் ஆளுகிறார், அனைத்து நாடுகளையும் அரசியல் சக்திகளையும் ஆளுகிறார்.
பிலேமோனின் குடும்பத்திற்கு வாழ்த்துகள்
பிலேமோன் தனது அன்பு நண்பர் என்று பவுல் எழுதுகிறார். அப்பியா அநேகமாக பிலேமோனின் மனைவி. ரோமானியப் பேரரசில், அடிமைகளை எஜமாங்களின் மனைவிகள் மேற்பார்வையிட்டார், பவுல் இந்த உரையாடலில் அவளை ஈடுபடுத்தினார். அர்க்கிப்பு அநேகமாக பிலேமோன் மற்றும் அப்பியாவின் மூத்த மகன்.
அவர்கள் வீட்டில் கூடும் சபையை பவுல் வாழ்த்துகிறார். கிறிஸ்தவர்கள் கூடி வழிபட பிரத்யேக கட்டிடங்கள் இருக்கவில்லை. அவர்கள் பல வீடுகளில் ஒரு ஆயர் அல்லது மூப்பரின் மேற்பார்வையில் கூடினர். தங்கள் வீட்டில் இத்தகைய கூட்டங்களை அனுமதிக்கக்கூடிய பணக்கார விசுவாசிகளான புதிய ஏற்பாட்டில் லீதியாள், காயு போன்றவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வீட்டு சபைகள் வேதத்தில் மற்ற இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. (ரோமர் 16: 5, கொலோசியர் 4:15)
கிருபையும் சமாதானமும்
பவுல் பொதுவாக இந்த இரண்டு சொற்களையும் தான் பல்வேறு சபைகளுக்கு எழுதிய கடிதங்களிலுள்ள தனது வாழ்த்துக்களில் பயன்படுத்துகிறார். இங்கே இது ஒரு தனிப்பட்ட ஆளான பிலேமோனுக்கானது. பவுலின் மற்ற தனிப்பட்ட கடிதங்கள் தீமோத்தேயு மற்றும் தீத்து.
கிருபையைப் பற்றிய பவுலின் புரிதல், அவரைப் போன்ற பாவிகளுக்குக் காட்டப்பட்ட கருணையாகும், பாவிகளில் பிரதானமானவன். (1 தீமோத்தேயு 1:15) தகுதியற்ற, தீமைக்குரிய மற்றும் நரகத்திற்கு தகுதியான பாவிகளுக்கு காட்டப்படும் அருள் கிருபை. சமாதானம் என்பது ஷாலோம், இது இருதயம், மனம், ஆத்துமா மற்றும் மற்றவர்களுடனான உறவில் அமைதிக்கு ஒரு விரிவான சொல்.
பிலேமோனுக்கான பவுலின் பிரார்த்தனைகள் (பிலேமோன் 1: 4-7)
பவுல் பிலேமோனுக்காக விரிவாக பிரார்த்தனை செய்திருக்கவில்லையென்றாலும் அவருடைய பிரார்த்தனை மற்றும் தேவனிடம் பரிந்து பேசுவதில் அவரது பெயரை குறிப்பிட்டுள்ளார். பவுல் தனது பிரார்த்தனைகளில் பலரை நினைவு கூர்ந்தார் என்பது அவரது கடிதங்களிலிருந்து தெளிவாக தெரிகிறது. (ரோமர் 1: 9; எபேசியர் 1:16; 1 தெசலோனிக்கேயர் 1: 2; பிலேமோன் 4)
அன்பு மற்றும் விசுவாசமுள்ள பிலேமோனுக்காக பவுல் தேவனுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறார். பிலேமோன் ஆண்டவரை நேசித்தார் மற்றும் விசுவாசம் நிறைந்த மனிதனாக இருந்தார். அவர் பரிசுத்தவான்களையும் நேசித்தார் (அனைத்து விசுவாசிகளும்). பிலேமோன் அனுபவிக்கும் ஒவ்வொரு நல்ல விஷயமும், தேவன் அருளிய அன்பளிப்பு என்று பவுல் எழுதுகிறார். பிலேமோன் குறிப்பாக ஏழைகளுக்கு கொடுப்பதில் தாராளமாக இருந்தார்.
ஒநேசிமுவின் பரிந்துரையாளராக பவுல் (பிலேமோன் 1: 8-11)
சில விஷயங்களைச் செய்ய பிலேமோனுக்குக் கட்டளையிட பவுலுக்கு உரிமை மற்றும் அதிகாரம் இருந்தது. இருப்பினும், பவுல் அந்த உரிமையைப் பயன்படுத்த மாட்டேன் என்று எழுதுகிறார், மாறாக அவரை அன்பில் முறையிடுகிறார். கொரிந்து சபையில் இருந்த விசுவாசிகளுடன் செய்ததுபோல், தேவைப்படும்போது பவுல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த தயங்கியதில்லை. (I கொரிந்தியர் 5: 4-5) பவுல் தன்னை 'வயதானவராக' விவரிக்கிறார். முதியவர்களின் வேண்டுகோள் பொதுவாக மரியாதையுடன் கருதப்படுகிறது, எனவே பரிந்துரையாளர் பவுலின் வாதத்தின் மையம் இது.
புலம்பெயர்ந்த ஒநேசிமுவின் மனந்திரும்புதல்
பவுல் ஒநேசிமுவை அவருடைய ஆவிக்குறிய மகன் என்று கூறுகிறார். எஜமான் பிலேமோனை விட்டு ஓடிப்போன ஒரு அடிமை ஒநேசிமு. ஆமாம், அவர் தனது எஜமானரின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும், ஆனாலும் கடவுளை விட்டு ஓட முடியாது. ஒநேசிமு, எந்தவொரு புலம்பெயர்ந்தோரையும் போலவே, ரோம் போன்ற ஒரு பெரிய நகரத்தில் அவர் அநாமதேயமாக இருக்க முடியும் என்று நினைத்தார். இருப்பினும், ஒநேசிமுக்காக கடவுள் வேறு திட்டங்களை வைத்திருந்தார். ஒரு வேலையைத் தேடுகையில், ஒநேசிமு பவுலுடன் ஒரு உதவியாளராக இணைகிறார், அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாகிறார். தற்செயலாக, ஒநேசிமுவின் எஜமான் பிலேமோனும் பவுலால் தேவனுக்குள் நடத்தப்பட்டார். (பிலேமோன் 1:19)
ரோமானிய சட்டம்
ரோம சட்டத்தின்படி அடிமைகள் கண்டுபிடிக்கப்படும்போது எஜமானரிடம் திருப்பி அனுப்பப்பட வேண்டும். இல்லையென்றால், அடைக்கலம் கொடுப்பவர் தண்டிக்கப்படுவார். இந்த சம்பவத்தில், பவுல் தண்டிக்கப்படலாம். ரோமானிய சட்டத்தில் மற்றொரு விதி இருந்தது: அடிமை ஒரு பொது அல்லது தனியார் கோவிலின் பலிபீடத்தின் அருகில் சென்று தஞ்சமடைந்தால், அடிமை கொல்லப்பட மாட்டார். அடிமை எஜமானரிடம் செல்லலாம் இல்லையேல் மீண்டும் விற்க்கப்பட்டு முந்தைய எஜமானுக்கு அந்த பணம் கொடுக்கப்படும்.
ஒநேசிமு கடவுளின் பலிபீடத்திற்கு வந்தார், பவுல் அவரை மீட்டு பிலேமோனுடன் சமரசம் செய்ய முன்முயற்சி எடுக்கிறார்.
பவுலின் குழந்தைகள்
பவுல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர் வழிநடத்தியவர்களை எப்போதும் தனது குழந்தைகளாகவே கருதுகிறார். பிலேமோன், தீமோத்தேயு, தீத்து, கொரிந்து விசுவாசிகள் மற்றும் கலாத்தியா விசுவாசிகள். (I கொரிந்தியர் 4: 14,17; தீத்து 1: 4; கலாத்தியர் 4:19)
பிரயோஜனமில்லாத நிலையிலிருந்து பிரயோஜனமுள்ளவனாக
பவுல், ஒநேசிமுவின் வாழ்க்கையில் நடந்த மாற்றத்தை குறிப்பாக உண்ர்த்துகிறார். முன் ஒநேசிமு லாபமற்றவன் அல்லது பிலேமோனுக்கு இழப்பை ஏற்படுத்துபவன். ஆனால், அவர் பவுலுக்கு பிரயோஜனமுள்ளவனாக ஆனார், அவன் பவுலுக்கு ஊதிய ஊழியராக அல்ல, அன்பான சகோதரராக சேவை செய்தான். எனவே, இப்போது ஒநேசிமு பவுலுக்கும், பிலேமோனுக்கும் பிரயோஜனமுள்ளவன். பிலேமோன் பவுலுக்கு என்ன உதவி செய்திருக்க முடியுமோ அதை ஒநேசிமு செய்தான். ஒநேசிமு தன்னுடன் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று பவுல் விரும்பினார், ஆனால் அவர் அதை வெளிப்படையான அனுமதி அல்லது பிலேமோனின் ஒப்புதல் இல்லாமல் செய்ய மாட்டார்.
பால் ஒநேசிமுவை அனுப்புகிறார் (பிலேமோன் 1: 12-14)
பவுல் ஒநேசிமுவை பிலேமோனிடம் திருப்பி அனுப்புகிறார், பிலேமோன் அவனைத் தன்னிடம் திருப்பி அனுப்புவார் என்று அவர் நம்பினார். ரோமானியப் பேரரசில் 60 மில்லியன் அல்லது ஆறு கோடி அடிமைகள் இருந்தனர். அதிகாரிகள் அடிமை கிளர்ச்சிக்கு அஞ்சினர், எனவே அவர்களை கடுமையான சூழ்நிலைகளில் தள்ளினர். எஜமானருக்கு அடிமைகள் மீது முழு அதிகாரம் இருந்தது, சில அடிமைகள் சிலுவையில் கூட அறையப்பட்டனர்.
பின்வரும் மூன்று காரணங்களுக்காக ஒநேசிமுவை தனது சேவையில் வைத்திருக்க பவுல் விரும்பினார்: முதலில், பிலேமோனின் சார்பாக அவருக்கு சேவை செய்ய முடியும். இரண்டாவதாக, விலங்கிடப்பட்டுள்ள ஒரு நபருக்கு, (பவுல்)முதியவருக்கு சேவை செய்வதன் மூலம் அவர் ஒரு நல்ல காரியத்தைச் செய்வார். மூன்றாவதாக, ஒநேசிமு பவுல் தேவனைச் சேவிப்பதால் அவருக்கு சேவை செய்ய முடியும் மற்றும் அதன் காரணமாக பவுல் சிறையில் இருக்கிறார். ஆயினும்கூட, பிலேமோனுக்குத் தெரியாமல் அல்லது ஒப்புதல் இல்லாமல் பவுல் ஒநேசிமுவின் சேவையை எடுக்க மாட்டார்.
பிலேமோன் இதை கட்டாயத்தால் செய்யக்கூடாது. பவுலின் பரிந்துரை அல்லது யோசனையை நிராகரிக்க பிலேமோனுக்கு முழு வாய்ப்பு இருந்தது. தேவன் மற்றும் நற்செய்தியின் மீதான அன்பின் காரணமாக, பிலேமோன் தானாக முன்வந்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
தேவனின் இறையாண்மை சித்தம்
பவுல், ஒநேசிமு ஒரு குறுகிய காலத்திற்குப் விலகிச் சென்றான் என்றும் அது கடவுளின் இறையாண்மை சித்தம் மற்றும் திட்டத்தில் ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தது என்றும் எழுதுகிறார். ஒநேசிமு தப்பித்து ஓடியிருந்தாலும், பவுல் அதை சிறிது காலம் 'விலகியிருந்தான்' மற்றும் கடவுளின் நோக்கம் வெளிப்பட்டது என்று பார்க்கிறார். ஒநேசிமுவின் பாவம் அவனை கலகம் செய்து ஓட வைத்தது, ஆனால் தேவனின் கிருபை அவனுக்கு சத்தியத்தைக் கண்டுபிடிக்க உதவியது. பவுலிடம் தேவன் இப்படி பேசவில்லை என்றாலும், அதற்கு பதிலாக, தேவனின் கரம் கிரியைசெய்தது என்று நிலைமையை ஊக்குவிக்கிறார்.
பிரியமானவானாகா மீண்டும் ஏற்றுக்கொள்ளல்
பிலேமோனின் இழப்பு அவனிடம் திரும்ப, தேவனின் மகிமைக்காக மாற்றப்பட்ட ஒநேசிமுவாக வரும்படி, ஆண்டவர் அதை அப்படி வடிவமைத்தார் என்று பவுல் எழுதுகிறார். அடிமை முறை ஒழுக்கக்கேடானது, ஆனால் சட்டங்களால் மட்டும் நிலைமையை மாற்ற முடியாது. தனிநபர்கள் மாற்றப்பட வேண்டும் மற்றும் சமூகத்திலும் அப்படி இருக்க வேண்டும். அடிமைகள் நற்செய்தியால் சகோதரர்களாக மாற்றப்படுகிறார்கள். அதற்காக ஒடுக்குபவர் மற்றும் ஒடுக்கப்பட்டவர் இருவருமே மனம் மாற வேண்டும்.
அடிமை ஒநேசிமுவை ஒரு சகோதரனாக நடத்த பிலேமோனுக்கு பவுல் எழுதுகிறார். பிறப்பு அல்லது சமூகம் அல்லது மதம் அல்லது பொருளாதாரம் அல்லது கல்வியால் உருவாக்கப்பட்ட அனைத்து வேறுபாடுகளும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க அகற்றப்பட்டன.
மீட்டு ஒப்படைப்பு மற்றும் மறுசீரமைப்பு (பிலேமோன் 1: 17-19)
பிலேமோனால் பவுல் ஒரு உடன் வேலையாளாக கருதப்பட்டால், அவர் பவுலைப் ஏற்றுக்கொள்வது போல் ஒநேசிமுவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பவுலுக்கு காட்டப்படும் அதே மரியாதையும் அன்பும் ஒநேசிமுவுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் பவுல் ஒநேசிமுக்கு ஒரு மறைவுடமாக நிற்கிறார். பிலேமோன் ஒநேசிமுக்கு எதிராக கோபமாக உணர்ந்தாலும், அவருடைய கோபம் பவுலுக்கு எதிராக இயக்கப்படுகிறது. ஒநேசிமுவிடமிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டியதை பிலேமோன் பெற, பவுல் தனது சொந்த கையெழுத்துடன், IOU அல்லது வெற்று காசோலை அல்லது QR குறியீட்டை கொடுக்கிறார்.
விரைவான கணக்கைப் பார்த்தால் மொத்தமாக: அடிமையின் விலை, மேலும் ஒநேசிமு தனது கடமையைச் செய்யாத நாட்கள் மற்றும் பிலேமோனிடமிருந்து அவன் திருடிய பணம் எல்லாம். ஆமாம், இந்தத் தொகை மிகப் பெரியதாக இருக்கும், ஆனால் பாவுல் திருப்பித் தருவதாக உறுதியளிப்பதில் தன்னையே பணயம் வைக்கிறார்.
பவுல் அன்புடன் அல்லது புத்திசாலித்தனமாக ஒரு உட்பிரிவைச் சேர்த்தார். பிலேமோன் தனது வாழ்க்கையில் பவுலுக்குக் கடன்பட்டிருக்கிறார். ஆம், பிலேமோனை இருளிலிருந்து ஒளியின் வாழ்க்கைக்கு வழிநடத்தும் கருவியாக தேவன் பவுலைப் பயன்படுத்தினார். ஒரு வழியில், பிலேமோன் தனது முழு வாழ்க்கையிலும் பவுலுக்கு கடன்பட்டிருக்கிறார்.
பவுலின் நம்பிக்கை (பிலேமோன் 1: 20-22)
‘ஒநேசிமு’ என்ற வார்த்தைக்கு மகிழ்ச்சி என்று அர்த்தம். பிலேமோன் மீண்டும் மகிழ்ச்சிக்கு (ஒநேசிமு) திரும்புகிறார் என்பதை வலியுறுத்த பவுல் வார்த்தை ஜாலத்தைப் பயன்படுத்துகிறார். பிலேமோன் பரிசுத்தவான்களின் இதயங்களைப் புதுப்பித்த ஒரு மனிதர். (பிலேமோன் 7) இப்போது பவுல், பிலேமோனிடம் தனது வரத்தைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து, ஒநேசிமுவைப் புதுப்பிக்க வலியுறுத்துகிறார். அது ஒநேசிமுவை அவருக்கு சேவை செய்ய அனுமதிப்பது. பிலேமோன் தனது எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாக செய்வார் என்று பவுல் நம்பினார்.
கொலோசெ பட்டணத்தில் பிலேமோன் போன்று அடிமைகளை வைத்திருந்த பலர் இருந்தனர். இந்த முன்மொழிவை பிலேமோன் ஏற்க வேண்டாம் என்று அவர்கள் பரிந்துரைத்திருப்பார்கள். ஒநேசிமுக்கு மன்னிப்பு என்பது அடிமைகளுக்கு நீண்ட கயிற்றை வழங்குவதாகும். மேலும் அடிமைகள் தப்பி ஓட முயற்சிப்பார்கள். பவுலின் வற்புறுத்தல் சமூகத்தில் அதே அந்தஸ்தில் உள்ள பிலேமோனின் நண்பர்களின், சகாக்களின் அழுத்தத்தை எதிர்க்குமா?
மேலும், பவுல் அவருக்கான விருந்தினர் அறையை தயார் செய்யும்படி கேட்டார், அதனால், அவர் விடுதலையானதும் அவரை ஊழியத்தின் நிம்த்தமாக சந்திக்க முடியும். பவுலின் விடுதலைக்காக பிலேமோன் பிரார்த்தனை செய்திருப்பார், அந்த ஜெபத்திற்கு தேவன் பதிலளிப்பார்.
மற்ற நண்பர்கள் பிலேமோனை வாழ்த்துகிறார்கள் (பிலேமோன் 1: 23-24)
மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன: எப்பாப்பிரா, மாற்கு மற்றும் அரிஸ்தர்க்கு. இந்த மூன்று பெயர்களும் கொலோசியர்களுக்கு எழுதிய கடிதத்தில் உள்ளன. (கொலோசெயர் 4: 10-17) இரண்டு கடிதங்களும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. தோமாவும் பவுலுடன் இருந்தார், ஆனால் பின்னர் உலகத்தின் அன்பால் ஈர்க்கப்பட்டு விசுவாசத்திலிருந்து விலகினார். (I தீமோத்தேயு 4: 10)
முடிவுரை வாழ்த்துக்கள் (பிலேமோன் 1:25)
பவுல் மீண்டும் பிலேமோனனை வாழ்த்துகிறார் அல்லது தேவ கிருபையின் ஆசீர்வாதத்தைக் கூறுகிறார்.
வரலாற்று விவரங்கள்
ஒநேசிமு பின்னர் தீமோத்தேயுவுக்குப் பிறகு எபேசுவின் ஆயராகப் பணியாற்றினார். கிபி 110 இல் ஆயராக இருந்ததாக ஆவணங்கள் உள்ளன.
சவால்
ஒநேசிமு ஒரு சிறந்த ஆலோசகரான பவுல் மூலம் பிலேமோனுடன் மீண்டும் இணைத்தார். அது அடிமை ஒநேசிமு மற்றும் பிலேமோன் இடையே மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது.
பல தம்பதிகள், விவாகரத்து கோருவதற்குப் பதிலாக, தெய்வீக ஆலோசகர்கள் மூலம் நல்லிணக்கம் செய்ய முடியும். ஒநேசிமுவின் சார்பாக பவுல் பிலேமோனுக்கு பரிந்துரை செய்தார். குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களில் உறவுகளை மீட்டெடுப்பதற்கும் அமைதியைக் கொண்டுவருவதற்கும் தேவ ஊழியர்கள் எவ்வாறு இணைக்கிறார்கள், ஆலோசனை வழங்குகிறார்கள் மற்றும் பரிந்து பேசுகிறார்கள்.
~ Rev. Dr. J. N. Manokaran