எபேசு பட்டணம்
எபேசு, அத்தேனேயிலிருந்து வந்த மக்களால் உருவான ஒரு பட்டணம், ரோம குடியரசால் ஏற்படுத்தப்பட்ட ஆளுநர் ஒருவருக்கு கீழ் அது ஆசியாவின் தலைநகரமாக இருந்தது. இந்த இடத்தில்தான் அந்நாட்களில் உள்ள அறிவாளிகள் ஒன்று கூடுவார்கள். அங்கு அநேக பேச்சாளர்கள், தத்துவ ஞானிகள் வாழ்ந்து வந்தார்கள், அவர்கள் பட்டத்தில் போதித்து வந்தார்கள். எபேசு பட்டணம் கேய்ஸ்டர் நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது, அத்துடன் அது ஒரு துறைமுகப்பட்டணமாகவும் இருந்தது. இப்பட்டணம் அந்த பிராந்தியத்தின் முக்கிய அடிப்படை வியாபாரஸ்தலமாகவும் இருந்தது. அக்காலத்தில் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இப்பட்டணத்தில் உள்ள தியானாளிள் ஆலயம் திகழ்ந்தது. இப்பட்டணம் தியானாளை வழிபட்டது – தியானாள் தேவர்களின் தாய் என்று பொருள், இவ்வாலயம் கி.மு. 480ல் கட்டப்பட்டது.
இந்த பட்டணத்தில் 50000 பேர் அமரக்கூடிய உலகிலேயே பெரிய திறந்தவெளி அரங்கம் ஒன்று இருந்தது. ரோமர்களின் காலத்தில், ரோமாபுரிக்கு அடுத்தாற்போல் இரண்டாவது பெருங் நகரமாக எபேசு கருதப்பட்டது. அந்த பட்டணத்தில் ஏறக்குறைய 250000 பேர் இருந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பட்டணம் மிகவும் அழகான பட்டணம், செழிப்பான பட்டணம், அத்துடன் ரோமப் பேரரசில் மிகவும் வலிமையான பட்டணமாக இருந்தது.
எபேசு பட்டணத்து மக்கள்
மோசக்காரர்கள் - போலிப்போதகர்கள் - வேதஅறிவிண்மை - நம்பிக்கை அன்பு இவற்றிற்கு பதில் மனித அறிவியல் சட்டம் - புனைக் கதைகள் - மூதாதையர்களின் முடிவில்லா பட்டியல் - இறுதிக்காலம் பற்றிய தவரான போதனைகள் - அறநெறியைத் திரித்துக்கூறி - வீம்புக்காரர் –சொகுசுகாரர்கள் - உள் உணர்ச்சியிலும் - பேதமையை வளர்ந்தவர்கள் - இவர்களை சதையழுகள் நோய்க்கு ஒப்பிடுகிறார். பெண்கள் சமூகத்தில் இப்போலி போதகர்களுக்கு அதிக செல்வாக்கு – பெண்கள் பாவத்திலும் இச்சையிலும் மூழ்கி இருந்தனர். உண்மையை கண்டறியும் ஆர்வம் தெளிவு இல்லை. நம்பிக்கையில் பயணற்றவர்கள். ஓயாமல் கற்றுக்கொண்டும் உண்மையை உணர்வதில்லை. தவறான போதனையால் குடும்பம் சீhகுழைந்தது. அருவருக்கத்தக்கவர்கள் - கீழ்படியாதவர்கள் - நற்செயலை செய்ய தகுதியற்றவர்கள் - நஞ்சு – போலி - சுயநல போதகர்கள் (போலி போதகர்கள்: சட்டத்தில் நிபுணர்கள் - வீண்வாதம் செய்பவர்கள் - தேவையற்றவையும் தகாதவற்றையும் பேசி குடும்பத்தை சீர்குழைப்பவர்கள்) அதனால்தான் தீத்து தீமோத்தேயு ஆகியோரை போதகர்களாக ஏற்படுத்தி அவர்களுக்கு கட்டளை கொடுக்கிறார்.
எபேசிய திருச்சபை ஆரம்பம்
பவுல் கிபி 52ல் இரண்டாம் நற்செய்தி பயணத்தில் எபேசுக்கு வந்தார் (அப்.19) மூன்று மாதங்கள் தங்கி ஜெபஆலயங்களில் பிரசங்கித்து வந்தார். மீண்டும் மூன்றாம் பயணத்தில் கிபி 53ல் வந்தார். மூன்று ஆண்டுகள் தங்கி சபையை நிறுவினார். அதற்கு முன்பே அப்பொல்லோ என்பவர் நற்செய்தி பணியாற்றி வந்தார். மிகவும் பிரயாசப்பட்டு சபையை ஏற்படுத்தினார். தாகமாய் ஜனங்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டனர். அதேவேளையில் எதிர்ப்புகளும் பலமாய் இருந்தது (அப.;20). இரு இனத்தாரிடமும் வாக்குவாதமும் மனத்தாங்கள்களும் இருந்தது. பவுலைப்பற்றி அவதூருக்களை பரப்பி வந்தனர்.
பவுல் எபேசுவுக்கு ஏறக்குறைய கி.பி. 52ல் வந்திருக்கலாம். அங்கு அவர் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஊழியம் செய்திருக்கலாம், இந்த நேரத்தில் கொரிந்தியருக்கு அவருடைய முதல் நிருபத்தை எழுதியிருக்கலாம் (1கொரிந்தியர் 16:8-9). பகல் வேலை முழுவதும், பவுல் திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருந்தான் (அப்.19:9). ஆசியாவில் வசித்த யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் யாவரும் ஆண்டவருடைய வார்த்தையை கேட்டார்கள்.
எபேசுவிலே பவுலின் தாக்கத்தால் அங்கு வாழ்ந்து வந்த வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்யும் தொழிலாளர்கள் கோபங்கொண்டார்கள். அவர்கள் தீயானாளின் கோவிலில் சொரூபங்களை செய்தனர், பவுலின் பிரசங்கத்தால் அவர்களுடைய சிறப்பாக நடைபெற்ற வியாபாரம் அற்றுப்போகும் அபாயத்திற்கு வந்ததால் அவர்கள் பயந்தார்கள். அவர்களில் தெமேத்திரியு என்னும் வெள்ளி வேலை செய்பவன் பவுலுக்கு எதிராக கலகம் பண்ணினான்.
பவுல் எபேசுவை விட்டு போகும் போது, திருச்சபை தவறான போதகத்திற்கு எதிர்த்து நிற்க உதவும்படி இளம் போதகரான தீமோத்தேயுவை அங்கேயே தங்கியிருக்கும்படி கூறினான். பவுல் ரோமாபுரியின் சிறைச்சாலையில் இருக்கும் போது இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம்.
அப்போஸ்தலன் யோவான் முதல் நூற்றாண்டின் இறுதியில் எபேசு பட்டணத்தில் ஊழியம் செய்தார் என்று அநேக அறிஞர்கள் நம்புகிறார்கள். யோவான் எபேசுவைப் பற்றி அவருடைய வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எபேசிய விசுவாசிகள் உண்மையாகவே கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள் என்று அவர்களுடைய திருச்சபைக்கு கிறிஸ்து எழுதிய கடிதத்தில் விளக்குகிறார். அவர்கள் தங்களுடைய முதலாவது அன்பை விட்டு விட்டாலும், அவர்கள் தவறான போதகத்தை தள்ளிவிட்டார்கள் அத்துடன் இயேசுவின் நாமத்திற்காக பொறுமையாக பாடு அனுபவித்தார்கள்.
எபேசு திருச்சபை தொடர்ந்து ஆதி திருச்சபை வரலாற்றில் முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. அநேக பிஷப்கள் வழி வழியாக அங்கே வாழ்ந்தார்கள், கி.பி. 431ல், இயேசுவுக்கு தெய்வீகம் மற்றும் மனிதத் தன்மைகள் என்னும் இரண்டு வேறுபட்ட தன்மைகள் இருந்தது என்று கோறின தவறான உபதேங்களை எபேசுவின் ஆலோசனை சங்கம் முறையாகக் கண்டித்தது.
நல்ல முன்மாதரியான திருச்சபை. இச்சபையைப்பற்றி அப் 19. 20. 1 மற்றும் 2 தீமோத்தேயு. 1கொரி11:16. 15:32 போன்ற இடங்களில் பவுல் மேற்கோள்காட்டுவதை காணலாம். தீமோத்தேயுதான் இச்சபையின் முதல் ஆயர். மூப்பர்களையும் மேற்பார்வையாளர்களையும் இச்சபைக்கு பவுல் ஏற்படுத்தினார்.
எபேசு திருச்சபை வளர்ச்சியும் வீழ்ச்சியும் (அன்பில்லா திருச்சபை - வெளி. 2:1-7)
“உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்@ நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக@ இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.”
கிறிஸ்தவத்தின் விசுவாசம் அன்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒரு சட்டதிட்ட விசுவாசம் அல்ல. எபேசு திருச்சபை ‘பரிசுத்தவான்கள் மேல் உள்ள அன்பினால்’ அறியப்பட்டிருந்தது (எபே. 1:15). எபேசியர் இஸ்ரவேல் ஜனங்களைப் போல் ஆதி கிறிஸ்தவ அனுபவமாகிய கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பை விட்டுவிட்டார்கள் (எபே. 2:2-5). அவர்களுடைய தாகம், உற்சாகம், மற்றும் அன்பு ஆச்சாரங்களினாலும் பெருமையினாலும் மங்கிப்போனது.
எபேசியருக்கு எழுதிய கடிதத்தின் நோக்கம்
இக்கடிதத்தை ரோம் பட்டணத்தில் சிறையில் இருக்கும்போது கிபி 62ல் எழுதியிருக்ககூடும். ஆகவே இது ஒரு சிறைகடிதம். இக்கடிதம் கடிதங்களின் ராணி என்றழைக்கப்படுகிறது. இக்கடிதம் எபேசுக்கு மட்டுமல்லாமல் ஒரு சுற்றுமடலாக கொள்ளப்படுகிறது. பிரிவினைகளை தகர்த்து ஒற்றுமைப்படுத்த எழுதினார்.
எபேசுவில் உள்ள புதிய விசுவாசிகளுக்கு பவுல் அவர்களை உற்சாகப்படுத்தும்படியாக இக்கடிதத்தை எழுதினார். அவர்கள் தேவனுடைய அன்பையும் வல்லமையையும் அறிந்துகொள்ள விரும்பினார். அத்துடன் இயேசு மரித்தார், மரணத்திலிருந்து உயிருடன் எழுந்தார் அதனால் வீழ்ந்துபோன உலகையும் வீழ்ந்துபோன மக்களையும் தேவன் பட்சமாய் மீட்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினார். அது மட்டுமல்ல, இயேசு மக்களுக்கும் தேசத்திற்கும் இடையே உள்ள தடைகளை உடைத்தெரிந்தார் அதாவது சிலுவையில் மரித்த இயேசு சகலத்தையும் ஒன்வொன்றையும் தேவனுக்குள் ஒப்புரவாக்கினார் என்றும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினார்.
பவுல் எபேசியருக்கு எழுதிய அதே இயேசு இப்போது பரலோகத்தில் வல்லமையோடு ஆளுகை செய்யும் பிதாவாகிய தேவனுடன் இருக்கிறார். அவர் பரலோகத்திலும் பூலோகத்திலும் சகல அதிகாரமுடையவராயிருக்கிறார். அவர் அவருடைய மக்கள் மூலமாக அவரது ஊழியத்தை தொடர்கிறார், அவர்களையே பவுல் அவருடைய சரீரம் என்று அழைக்கிறார். இயேசு அவர்களுக்கு தலையாக இருக்கிறார். நாம் அவருடைய சரீரம். அவருடைய சரீரமாக, விசுவாசிகள் இயேசுவை இவ்வுலகத்திற்கு பிரதிபலிக்கிறார்கள்.
எபேசியருக்கு எழுதிய கடிதம் இயேசுவை அனைவருக்கும் கர்த்தர் என்றும் நம் அனைவரையும் நேசிக்கிறார் என்றும் கூறுகிறது. இந்த அன்பினால் இயேசுவுடன் உறவு கொள்ளவும், மற்றவர்களை நேசிக்கவும், அவர்களுடன் நல்லிணக்கத்தோடு இருக்கவும் முடிகிறது. அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு, விசுவாசிகளிடையே வாழ்கிறார். தேவன் அவருடைய பிள்ளைகள் அனுபவிக்க வேண்டிய நல்ல வாழ்வு வாழவும், பரிசுத்த வாழ்வு வாழவும் அவர்களுக்கு வல்லமை அருளுகிறார்.
போதனையும் நடைமுறை ஆலோசனைகளும் - பொருளடக்கம்
பவுலின் அநேக கடிதங்களைப் போன்றே, இந்த நிருபமும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரங்கள் 1-3ல் பவுல் போதனையுடன் ஆரம்பிக்கிறார், அதிகாரங்கள் 4-6ல், அவர் போதித்த உபதேசங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடைமுறை ஆலோசனைகளை கொடுக்கிறார்.
இயேசுவுடன் அவருடைய திருச்சபை கொண்டிருக்கும் உறவை எபேசு நிருபம் முக்கியப்படுத்துகிறது. “எல்லா துரைத்தனத்திற்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும் மேலாக” (1:20) தேவன் “அவருடைய பாதத்திற்கு அனைத்ததையும் கீழ்படுத்தினார்” (1:22). இயேசு அவருடைய திருச்சபையுடன் மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். அவர் திருச்சபையை அவருடைய சரீரமாகக் கருதுகிறார், அதனால் அதை அவருடைய பிரசன்னத்தால் நிரப்புகிறார். எவர்களெல்லாம் அவர்களுடைய இரட்சிப்புக்காக அவரில் நம்பிக்கை வைக்கிறார்களோ அவர்களுடன் அவர் உறவை ஏற்படுத்துகிறார்.
Author: Rev. Dr. C. Rajasekaran