எபேசியர் 6 - விளக்கவுரை

ஆவிக்குரிய குடும்பம்: (5:22-6:4) ஆவிக்குரிய குடும்பம்தான் ஆவிக்குரிய சபை – ஆவிக்குரிய சபைதான் ஆவிக்குரிய குடும்பத்தை உருவாக்கமுடியும் - ஆவிக்குரிய குடும்பத்தை உருவாக்க குடும்பத்தில் ஒருவர் ஆவிக்குரியவர்களாக இருந்தாலும் போதும் - ஆவிக்குரியவர்கள் பிறர் நம்மிடம் எப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்க்காமல் அதேபோல் இவர்கள் வாழ்ந்து காண்பிப்பார்கள் - பவுல் ஆவிக்குரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பொருப்பையும் உறவையும் பற்றி கூறுகிறார். குடும்பம் ஒரு கலாச்சார கூட்டமைப்பு – கலாச்சாரம் கடவுளுக்கு பிரியமாயும் கடவுள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கனவன் மனைவி உறவை இயேசுவும் சபையும் என்று தூய்மைபடுத்தி கனப்படுத்தி பேசுகிறார். 
    அ. ஆவிக்குரிய மனைவி: 1. கடவுளுக்கு கீழ்படிவதுபோல் (சொந்த) கனவனுக்கு எந்தக்காரியத்திலேயும் கீழ்படியனும் 2. கனவனை தலைவனாகவும் எல்லா கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றும் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் - அவ்வண்ணமே பாவிக்க வேண்டும் 3. பயபக்தியாயிருங்கள்
    ஆ. ஆவிக்குரிய கணவன்: 1. கிறிஸ்து சபையை நேசிப்பதுபோல் நேசிக்க வேண்டும் 2. தன் மனைவி எந்தவிதத்திலும் பிழையற்றவர்களாயும் தூய்மையுள்ளவர்களாயும் மகிமையாகவும் தனக்குமட்டும் சொந்தமாக தக்க வைத்துக்கொள்ளும் திறமையும் அதிகாரமுடையவர்களாயுமிருக்க வேண்டும் 3. மனைவியை தன்சொந்த சரீரமாக பாவிக்க வேண்டும் (தனக்கு சமமாக) 4. தான் சம்hபதித்து மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் (தன் மனைவி சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிடக்கூடாது) இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள் 5. தன் மனைவியை தன் சரீர அவயவமாகவும் மாம்சத்தின் மாம்சமாகவும் எலும்பாகவும் அவள் விருப்பத்தை தன் விருப்பமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 6. மனைவியை மற்ற உறவுகளுடன் இனைத்து அல்லது ஒப்பிட்டு பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது – மனைவியுடன் மனதளவிலும் சரீர இனைப்பிலும் பிளவு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
    இ. ஆவிக்குரிய பிள்ளைகள்: பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவும் நீடித்த வாழ்வு பெறவும் பெற்றோருக்கு கர்த்தருக்குள் (நியாயமாக) கீழ்படிந்து அவர்களைக் கனம்பண்ணி கடவுளின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். (பெற்றோரின் தன்மையைப் பொறுத்து  கடவுளின் கட்டளையை நிறைவேற்ற இடமில்லை)
    ஈ. ஆவிக்குரிய பெற்றோர்கள்: 1. பிள்ளைகளைக் கோபப்படுத்தக்கூடாது 2. கடவுளுக்கு ஏற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க வேண்டும் - தங்கள் விருப்பத்தை நறைவேற்றும் ஒரு பொருளாக பிள்ளைகளை கருதி அவ்வண்ணம் நடத்தக்கூடாது. நம் விருப்பத்தையும் திட்டத்தையும் பிள்ளைகள் புரிந்துகொள்ளும்படி அவைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.


ஆவிக்குரிய உழைப்பாளிகள்: (6:5-9) உழைப்பு நம் வாழ்வில் இன்றியமையாதது – உழைக்காதவர்கள் உண்ண அருகதையல்ல – உழைப்பில் முதலாளி தொழிலாளி என இரு பிரிவினர்கள் இனைந்து செயல்படுகிறார்கள். 
    அ. ஆவிக்குரிய தொழிலாளி: 1. கடவுளுக்கு கீழ்படிவதுபோல் முதலாளிக்கு பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடு;ம் கீழ்படிய வேண்டும் 2. முதலாளி பார்பதற்காக அல்லது பார்க்கும்போது மட்டும் வேலை செய்வதோ அல்லது வேலை செய்வதுபோல் நடிக்கக்கூடாது 3. பார்க்கும் பணி கடவுள் கொடுத்தது எனவும் ஆகவே அதை மனப்ப10வமாயும் செய்யவேண்டும் 4. மனிதன் தன் வேலைக்கு ஏற்ற கூலி கொடுக்கிறானோ இல்லையோ கடவுள் பலனளிப்பார் என்னும் நம்பிக்கையுள்;ளவர்களாக இருக்க வேண்டும் 5. பார்க்கும் பணி கடவுளுக்கென்று செய்தால் அதை நல்ல மனதுடன் செய்யமுடியும்.
    ஆ. ஆவிக்குரிய முதலாளி: 1. வேலைக்காரர்களுக்கு செய்ய வேண்டியதை நியாயமாக செய்யவேண்டும் 2. வேலைக்காரர்களுக்கு செய்வதை பிச்சை போடுவதுபோல் செய்யாமல் தனக்கும் மேல் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும் 3. தொழிலாளிகளிடம் பாரபட்சம் காட்டக்கூடாது (உறவினர்கள் - நல்ல தோற்றமுடையவர்கள் - ஒழுக்கமுள்ளவர்கள் என பாகுபாடு) 4. கடுஞ்ச்சொல்லை தவிர்க்க வேண்டும் எல்லோரும் தவறு செய்பவர்களே).


ஆவிக்குரிய போராட்டம்: (6:12)  ஆவிக்குரிய வாழ்வில் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்று – போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை – போராடி வெற்றி பெற்றால்தான் அதை உண்மையாக அனுபவிக்க முடியும் அவ்வெற்றியின் மகிமையும் நமக்குத்தெரியும். இப்போராட்டம் ஆவிக்குரியவாழ்வில் உள்ள அனைவருக்கும் உரியது – போராட்டத்தை சந்தித்தவர்களின் வெற்றி தோழ்வி நமக்கு பாடமாவும் மாதரிகளாகவும் இருக்கிறது – போராட விரும்பாதவர்கள் அதை தவிர்க்கிறவர்கள் சாதனையாளர்களாக முடியாது.


ஆவிக்குரிய எதிரி: (6:11-12.16) எந்த போராட்டத்திலும் எதிரி உண்டு - ஆவிக்குரிய போராட்டத்தின் எதிரி நாம் பார்க்கும் மாமிசமும் இரத்தமுமான மனிதர்கள் அல்லது கொடூட மிருகங்கள் அல்ல அத்துடன் நாமே நமக்கு எதிரி அல்ல – போராட்டத்தில் நம்மைபற்றிய அறிவுக்கு இனையாக எதிரியைப்பற்றிய அறிவு அவசியம் - எதிரி யார் என்று தெரியாமலிருந்தால் நன்பாகளுக்குள்ளேதான் போராட்டம் வரும் - மதம் கொள்கை ஜாதி நமது எதிரிகள் அல்ல. 1. பிசாசின் தந்திரங்கள் (சூழ்ச்சிகள் - நமக்கு பின் திட்டமிடபட்டவைகள் - நாம் அசரும் போது வஞ்சகத்தோடு செய்யும் செயல்) நம்மை ஏமாற்றும் வழிகளும் வலிமைகளும் 2. துரைத்தனங்கள் (ஆட்சிபுரிவோர்) 3. அதிகாரம் செலுத்துவோர் 4. இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர் 5. நம் கண்களுக்குத் தெரியாத அசுத்த ஆவிகள் (தவரான நோக்கங்களின் தாக்கங்கள்) 6. பொல்லாங்கனின் அக்கினி ஆஸ்திரம் (தீயோனின் தீக்கனைகள்)


ஆவிக்குரிய போராட்டத்தின் இலக்கு: (6:13.15) இலக்கு இல்லாத போராட்டம் ஆகாயத்தில் சிலம்பாட்டம் சுற்றுவதுபோலாகும் - இலக்கின் மதிப்பே நம்மை போராட்டத்தில் ஈடுபடுத்தும் வலிமையாக ஊக்கமாகவம் இருக்கும். 1. எதிரியை இனம் கண்டுபிடித்து எதிர்க்க வேண்டும் - எதிரியை வளர விடக்கூடாது – எதிரியை நன்பனாக பாவிக்கக்கூடாது – எதிரியை எதிரியாக பாவிக்கவே பாவிக்க வேண்டும் 2. சகலத்தையும் செய்து முடிக்க வேண்டும் - போராட்டத்தில் முழு எதிரியையும் எதிரியின் முழுபெலத்தையும் எதிர்க்க வேண்டும் - எதிரியின் முழு அழிவையும் எதிர்பார்க்க வேண்டும். 3. எதிரியின் முழுஉருவமும் தெரியாதபடி அல்லது பழைய உருவத்தை மாற்றிவிட வேண்டும் 


ஆவிக்குரிய போராயுதங்கள்: (6:10-18) போராயுதங்கள் இல்லாமல் போருக்கு போகமுடியாது – ஆவிக்குரிய போராட்டத்தில் ஆவிக்குரிய ஆயுதங்களிலேயே ஆவிக்குரிய எதிரிகளை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறமுடியும் - ஆவிக்குரிய போராயுதங்கள் அனைத்தும் அவசியம் நமக்கு தேவையானவைகளை மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது – அனைத்து போராயுதங்களைப்பற்றிய அறிவும் அதனை பயன்படுத்தும் யுக்தியிலும் நன்கு புலமைப்பெற்றிருக்க வேண்டும் 1. ஆண்டவருடன் இனைந்து அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் பெற்றிருக்கிற வலிமை (நாம் வலிமையாக கருதுவது வலிமையாகாது – நம்முடையதும் வலிமையல்ல) 2. எதிரியை எதிர்த்து நிர்க்கும் திராணி தைரியம் - சோர்ந்து போனால் வலிமையற்றவர்களாகிடுவோம் 3. சத்தியம் (உண்மை) என்னும் கச்சை – கச்சை இருக்கமாக வைக்க உதவுகிறது – மானத்தை மறைக்கிறது –பொய் எப்போதும் தோற்று போகும் - மெய் உறங்கும் சாகாது 4. மார்கவசம் என்னும் நீதி – மார்கவசம் உடனே உயிர் போகும் நம் இருதயத்தை பாதுகாக்கிறது – புறமுதுகு காட்டி ஓட அவசியமில்லை 5. ஆயத்தம் என்னும் மிதியடி – மிதியடி நம் ஆயத்தத்தை காட்டுகிறது – நமது கால் பாதுகாக்கபடாமலிருந்தால் எதிரியை விரட்ட முடியாது – மிதியடி இல்லையேல் போராட்டத்தில் அசைவற்றவர்களாவோம் 6. நம்பிக்கையென்னும் கேடயம் - எதிரியின் தாக்குதலை சமாலிக்கவும் தான் எதிரியின் தாக்குதலில் காயப்படாமல் காக்கப்படவும் அத்துடன் எதிரியின் வேகத்திற்கேற்ப நம்மை பாதுகாத்துக்கொண்டே எதிரியை அழிக்க வேண்டும் 7. விடுதலை அல்லது மீட்பு என்னும் தலைச்சீரா – ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டு போராட்டத்தில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது – எந்தவிதமான இடைய10றுகள் கட்டுகளும் இருக்கக்கூடாது 8. கடவுள் வார்த்தை என்னும் போர்வாள் - நம்மை பாதுகாக்கும் ஆயதங்கள் எந்த அளவு அவசியமோ அதே அளவு எதிரியை தாக்கும் ஆயுதமும் அவசியம். அதுதான் எதிரியைக் கொல்லும் அழிக்கும் காயமடையசெய்யும் பலவீணப்படுத்தும் 9. ஆயத்தம் என்னும் ஜெபம் - எல்லா ஆயதங்களும் இருந்தும் நன்கு பயிற்ச்சி பெற்றும் போர்புரிய உடல் மனம் ஆகியவை ஆயத்தமாக இல்லாவிட்டால் எதிரி ஆயத்தமாயிருந்தால் நமது தோல்வி நிச்சயம் - ஆயத்தம் என்பது கட்டளைக்காக காத்திருப்பது கட்டளை பெற்றபின்பு தவிப்பதல்ல தயங்குவதல்ல துரிதமாக செயல்படுவது – மனஉறுதியுடனான ஆயத்தம் அத்துடன் பிறரையும் விழிப்போடு இருக்கசெய்தல்.


ஆவிக்குரிய விண்ணப்பங்கள்: (6:19-20) ஆவிக்குரியவர்களின் விண்ணப்பங்கள் ஆவிக்குரியதாயிருக்கும் - அவர்களுக்கு மற்ற விண்ணப்பங்களைப்பற்றிய கவலை இருக்காது. 1. நான் சங்கிலியால் கட்டப்பட்டாலும் நற்செய்தியை பேசவேண்டிய விதமாக பேச – நமது கஷ்டம் பெரிதாகும் போது அறிவு மங்கும் முறைகள் மாறும் அங்ஙனம் முறைகளும் செய்திகளும் மாறாதிருக்க வேண்டுதல் 2. என் சுயமாய் பேசாமல் அப்படி பேசினால் அதில் வலிமை தைரியம் இருக்காது ஆகவே கடவுளுடைய வார்த்தை கிடைத்து அதை பேசவும் வேண்டுதல்.


ஆவிக்குரிய அருளாசிகள்: (6:21-24) ஆவிக்குரியவர்களின் சுக துக்க செய்திகளை ஆவிக்குரியவர்கள் சுமந்து வருவார்கள் அது கேட்பவர்களின் உள்ளத்துக்கு ஊக்கமூட்டக்கூடியதாகவே இருக்கும் - கடவுளின் நம்பிக்கை அன்பு அமைதி அருள் எப்போதும் ஆவிக்குரியவர்களின் அருளாசிகளாம்.
 



Topics: Ephesians Tamil Reference Bible Rev. Dr. C. Rajasekaran

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download