ஆவிக்குரிய அரசாட்சி: (5:5) இது கடவுளின் அரசாட்சி – கிறிஸ்துவாகிய அவருடைய குமாரனின் ஆட்சி - இந்த ஆட்சியை அவருடைய பிள்ளைகளாயிருப்பர்கள் சுதந்தரித்துக்கொள்வார்கள் - அவருடைய பிள்ளைகள் அவரில்லாதவைகளுக்கு பின் செல்ல மாட்டார்கள் அதை விபச்சாரமாக கருதுவார்கள் - கடவுளைப்போல் பரிசுத்தர்களாயிருப்பார்கள் - கடவுளின் ஸ்தானத்தில் எதையும் எவரையும் வைக்கமாட்டார்கள் - மனிதர்கள் உண்டாக்கியவைகளுக்கு அடிமைகளாகாதிருப்பார்கள்.
ஆவிக்குரிய குடும்பம்: (5:22-6:4) ஆவிக்குரிய குடும்பம்தான் ஆவிக்குரிய சபை – ஆவிக்குரிய சபைதான் ஆவிக்குரிய குடும்பத்தை உருவாக்கமுடியும் - ஆவிக்குரிய குடும்பத்தை உருவாக்க குடும்பத்தில் ஒருவர் ஆவிக்குரியவர்களாக இருந்தாலும் போதும் - ஆவிக்குரியவர்கள் பிறர் நம்மிடம் எப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்க்காமல் அதேபோல் இவர்கள் வாழ்ந்து காண்பிப்பார்கள் - பவுல் ஆவிக்குரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பொருப்பையும் உறவையும் பற்றி கூறுகிறார். குடும்பம் ஒரு கலாச்சார கூட்டமைப்பு – கலாச்சாரம் கடவுளுக்கு பிரியமாயும் கடவுள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கனவன் மனைவி உறவை இயேசுவும் சபையும் என்று தூய்மைபடுத்தி கனப்படுத்தி பேசுகிறார்.
அ. ஆவிக்குரிய மனைவி: 1. கடவுளுக்கு கீழ்படிவதுபோல் (சொந்த) கனவனுக்கு எந்தக்காரியத்திலேயும் கீழ்படியனும் 2. கனவனை தலைவனாகவும் எல்லா கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றும் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் - அவ்வண்ணமே பாவிக்க வேண்டும் 3. பயபக்தியாயிருங்கள்
ஆ. ஆவிக்குரிய கணவன்: 1. கிறிஸ்து சபையை நேசிப்பதுபோல் நேசிக்க வேண்டும் 2. தன் மனைவி எந்தவிதத்திலும் பிழையற்றவர்களாயும் தூய்மையுள்ளவர்களாயும் மகிமையாகவும் தனக்குமட்டும் சொந்தமாக தக்க வைத்துக்கொள்ளும் திறமையும் அதிகாரமுடையவர்களாயுமிருக்க வேண்டும் 3. மனைவியை தன்சொந்த சரீரமாக பாவிக்க வேண்டும் (தனக்கு சமமாக) 4. தான் சம்hபதித்து மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் (தன் மனைவி சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிடக்கூடாது) இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள் 5. தன் மனைவியை தன் சரீர அவயவமாகவும் மாம்சத்தின் மாம்சமாகவும் எலும்பாகவும் அவள் விருப்பத்தை தன் விருப்பமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 6. மனைவியை மற்ற உறவுகளுடன் இனைத்து அல்லது ஒப்பிட்டு பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது – மனைவியுடன் மனதளவிலும் சரீர இனைப்பிலும் பிளவு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
இ. ஆவிக்குரிய பிள்ளைகள்: பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவும் நீடித்த வாழ்வு பெறவும் பெற்றோருக்கு கர்த்தருக்குள் (நியாயமாக) கீழ்படிந்து அவர்களைக் கனம்பண்ணி கடவுளின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். (பெற்றோரின் தன்மையைப் பொறுத்து கடவுளின் கட்டளையை நிறைவேற்ற இடமில்லை)
ஈ. ஆவிக்குரிய பெற்றோர்கள்: 1. பிள்ளைகளைக் கோபப்படுத்தக்கூடாது 2. கடவுளுக்கு ஏற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க வேண்டும் - தங்கள் விருப்பத்தை நறைவேற்றும் ஒரு பொருளாக பிள்ளைகளை கருதி அவ்வண்ணம் நடத்தக்கூடாது. நம் விருப்பத்தையும் திட்டத்தையும் பிள்ளைகள் புரிந்துகொள்ளும்படி அவைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.