எபேசியர் 4 - விளக்கவுரை

ஆவிக்குரிய ஆலோசனை: (4:1-6) ஆவிக்குரியவர்களுக்கு ஆலோசனை அவசியம். கடவுள் நமது ஆலோசனை கர்த்தராக இருக்கிறார். ஆலோசனை இல்லாத இடத்தில் ஆவிக்குரியவர்களும் சீர்கெட்டுப்போவார்கள். ஆலோசனை சொல்லுவதற்கு ஆவிக்குரியதகுதி அவசியம். பவுலுக்கு அத்தகுதி இருந்தது. அத்தகுதி அவனுடைய பாடுகளால் இழந்துவிடுவதில்லை. 1. அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரமாய் நடக்கவேண்டும் 2. மனத்தாழ்மை 3. சாந்தம் 4. நீடிய பொறுமை 5. அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கு 6. சமாதான கட்டினால் ஒற்றுமையை கா 7. ஒரே நம்பிக்கை 8. நாம் அனைவரும் ஒரே சரீரம் 9. நம் அனைவருக்கும் ஒரே ஆவி - ஒரே கர்த்தர் – ஒரே விசுவாசம் - ஒரே ஞானஸ்நானம் - ஒரே பிதா (ஆகையால் அவர் நம் எல்லார்மேலும் எல்லாரோடும் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்) 


ஆவிக்குரிய அலுவல்: (4:7-12) ஆவிக்குரிய அலுவல் கடவுள் நமக்கு அருளும் ஈவு மற்றும் கிருபை. 1. சிறைக்கு சென்று கைதிகளை விடுவித்து வரவேண்டும் 2. குறைவானதை நிறைவு செய்ய வேண்டும் 3. குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் எல்லாரும் சீராக வளர்ந்து நிறைவாகி முதிர் நிலையை அடைய வேண்டும் 4. பரிசுத்தவான்கள் சீர்பொருந்த செய்யவேண்டும் 5. சுவிசேஷ வேலையை செய்ய வேண்டும் 6. சபையானது பக்திவிருத்தி அடைய செய்ய வேண்டும்.


ஆவிக்குரிய அலுவலர்கள்: (4:13) 1. அப்போஸ்தலர்கள் (நேரடியாக கடவுளால் அனுப்பப்பட்டவர்கள்) 2. தீர்க்கதரிசிகள் (நடந்ததையும் நடக்கிறதையும் நடக்கப்போகிறதையும் கடவுள் சொன்னதை அப்படியே மாற்றாமல் யாருக்கும் பயப்படாமல் எதற்கும் ஆசைப்படாமல் சொல்பவன்) 3. சுவிசேஷகர்கள் (ஊர் ஊராக சுற்றி நற்செய்தியை அறிவிப்பவன்) 4. மேய்பர்கள் (மந்தையுடனே எப்போதும் இருந்து அதற்கு தேவையானவைகளை அதற்கேற்றவிதங்களில் கொடுப்பவன்) 5. போதகர்கள் (போதித்து ஊழியர்களை தகுதியாக்கி ஏற்படுத்துபவன்).


ஆவிக்குரிய முதிர்ச்சி: (4:14-5:21) ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தையாயிராமல் இளமையாயுமிராமல் நல்ல முதிர்ச்சியடைய வேண்டும். ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது விட வேண்டியவைகைளையும் விடாதிருக்க வேண்டியவைகளையும் பவுல் கூறுகிறார். ஆவிக்குரிய முதிர்ச்சி ஆழமான கடினமான அனுபவங்களில் ஊறுதலாகும். பவுல் பல உதாரணங்களை ஆவிக்குரிய முதிர்ச்சியாக காட்டுகிறார். 1. சாதாரன காற்று அலைகளில் அலகடிப்படும் லேசான பொருளாக இல்லாமல் அசைக்கமுடியாத கனமானதாயிருக்க வேண்டும். 2. அன்புடன் சத்தியத்தை கைக்கொண்டு வளருதல் 3. எல்லோரோடும் இனைந்து அதனதன் அளவுக்குதக்க பக்திக்கேதுவான கிரியை செய்யுதல் 4. வீணான சிந்தையிலே நடக்ககூடாது 5. புத்தியிலே அந்தகாரமாயில்லாமல் வெளிச்சமாயிருக்க வேண்டும் 6. இருதயம் கடினமாக இல்லாமல் லேசாக இலகுவாக இருக்க வேண்டும் 7. கடவுளுக்கு அந்நியமாயிருக்கும் அறியாமையை விடவேண்டும் 8. உணர்வில்லாதவர்களாயிருக்க இருக்ககூடாது 9. ஆவலாய் திட்டமிட்டு அசுத்தத்தை நடப்பிக்ககூடாது 10. காமத்தில் விகாரமாயிருக்ககூடாது (கொடூரமாய்) சாதுவாயிருக்க வேண்டும் 11. இயேசுவை கற்கும் விதத்தில் கற்றுகொள்ள வேண்டும் 12. இயேசுவிடத்தில் நேரடியாக கற்றுக்கொள்ளும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் 13. மோசம் போக்கும் பழைய வாழ்வை பழைய மனுஷனை பாவ இச்சைகளை முற்றிலும் அவிழ்த்துப்போட வேண்டும் 14. உள்ளத்தில் புதிய ஆவியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் 15. தேவனுடைய சாயலாகிய நீதியிலும் பரிசுத்தத்திலும் புதுசிருஷ்டியாக இருக்க வேண்டும் 16. படைப்புகள் அனைத்தும் (அனைத்து மனிதர்களும்) கடவுளின் சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் 17. பொய் பேசாமல் எல்லோரிடமும் மெய்யை மட்டும் பேச வேண்டும் 18. நியாயமான கோபம் கொள்ள வேண்டும் ஆனால் அது அடுத்தநாளில் இருக்ககூடாது ஏனெனில் அது பாவத்திற்கு அழைத்துச்செல்லும் 19. பிசாசை நெருங்கவிடாமல் அவனுடைய கிரியைகளுக்கு இடங்கொடாமலிருக்க வேண்டும் 20. பிறருக்குரியதை அபகரிக்காமலிருக்க (திருடாதிருக்க) வேண்டும் 21. பிறருக்கு கொடுக்கதக்கதாக கடினமாக உழைத்து சேமிக்க வேண்டும் 22. பிறர் மனம் நோகும்படியாகவும் அவர்கள் தீமை செய்ய தூண்டுதல் பெறும்படி கெட்டதை பேசக்கூடாது 23. நாம் பேசுவதை கேட்பவர்கள் பயனடையும்படி பேச வேண்டும் 24. நமது முத்திரையாக இருக்கும் பரிசுத்த ஆவி துக்கப்படாதபடி நம்மில் மகிழ்வுற்றிருப்பது நமது கடமை 25. நம் இருதயத்தை கசப்பாக்கும் கசப்பு இருக்ககூடாது 26. கெட்டதை மீண்டும் பெற முடியாத அழிவை ஏற்படுத்தும் கோபம் கூடாது 27. நம் பேச்சை கேட்பவர்கள் கோபப்படாதபடி பேசவேண்டும் 28. பிறரை சபித்து பேசக்கூடாது கெடுத்து பேசக்கூடாது 29. கெட்ட குணம் நம்மை விட்டு விலக வேண்டும் 30. கடவுளின் தயவைப்பெற நாம் பிறரிடம் தயவாக இருக்க வேண்டும் 31. மனம் இருக்கமாயிருக்க கூடாது மாறாக மனம் இலகுவாக உருகும் நிலையில் இருக்க வேண்டும் 32. கடவுள் நம்மை மன்னிப்பதுபோலவும் நம்மை எந்த அளவு மன்னிக்கிறாறோ அதே அளவு பிறரை மன்னிக்க வேண்டும் 33. கடவுளுக்கு பிரியமாக (தனித்துவமான) அவர் விரும்பக்கூடியதை செய்கிறவாகளாக இருக்க வேண்டும் 34. எச்சூழலிலும் கடவுளின் அறிவுரைப்படி நடக்க வேண்டும் 35. இயேசுவைப்போல நமது அன்பு கடவுளுக்கு சுகந்த வாசனையாகவும் காணிக்கையாகவும் ஏற்கும் பலியாகவும் இருக்க வேண்டும் 36. வேசித்தனம் (பார்பதையெல்லாம் இச்சிக்ககூடாது) 37. வாழ்வில் எல்லா பகுதியும் தூய்மையாக இருக்க வேண்டும் 38. பொருளாசை என்னும் விக்கிரகத்திற்கு இடமளிக்ககூடாது (இது இல்லாமல் என்னால் வாழமுடியும் என்னும் மனபக்குவம் வேண்டும்) 39. வம்பு – சன்டையை வளர்த்தல் 40. புத்தியீனமான பேச்சு (தேவையற்றதை தேவையற்ற நேரத்தில் தேவையற்றவர்களிடம் தவறான முறையில் பேசுவது) 41. பரியாசம் (பிறர்மனம் நோகும்படி அவர்கள் விரும்பாமல் கேலி செய்வது) 42. எல்லாவற்றிலும் கடவுளின் திட்டத்தையும் அனுமதியையும் காணவேண்டும் அப்போது கடவுளுக்கு துதியைமட்டுமே செலுத்துவோம் 43. பிறரின் வீண்பேச்சுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது அவர்களின் பயனற்ற பேச்சுக்கு நாம் விலகி நாம் மோசம் போகாமல் காத்துக்கொள்ள வேண்டும் அப்படி செய்தால் அவர்களுக்கு நாம் பங்காளிகளாகி விடுவோம் 44. அந்தகாரத்திலிருந்து வெளிச்சத்திற்கு வந்துவிட்டோம் என்னும் நினைவில் தழைத்திருந்து வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ வேண்டும் 45. ஆவியின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையின் வழியாகவும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் 46. கடவுளுக்கு பிரியமானதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி அதை கண்டுபிடித்து அதன்படி வாழவேண்டும் 47. பிறர் அறியாமல்  செய்யும் காரியங்களை வெறுக்க வேண்டும் - பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு இரகசிய வாழ்வு இருக்ககூடாது 48. கடவுளைவிட்டு பிரிக்கும் செயலைப்பற்றி கவனமாக இருக்க வேண்டும் 49. காலத்தையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதில் ஞானமாயிருக்க வேண்டும் (ஞானம் - செய்வதை செய்ய வேண்டிய நேரத்தில் விதத்தில் செய்வது) 50. கடவுளின் சித்தத்தை அறியும் அறிவில் வளர வேண்டும் - அவருடைய நினைவில் இருதயத்தில் நுழைந்து ஆராயும் நிலையை எட்டவேண்டும் 51. மதுபானம் - நமது மனம் மயங்கும் நிலையில் போககூடாது 52. கடவுளைப் பாடி துதிக்கும் மனநிலையில் பிறருக்கு புத்தி சொல்லுவதே தகும் - சகஜமான நிலையில் சங்கீதமாவும் கீர்த்தனைகளாகவும் ஞானபாட்டுகளாகவும் புத்தி சொல்ல வேண்டும் 53. நாம் தவறு செய்யும் போது கடவுளுக்கு எப்படி பயப்படுகிறோமோ அவ்வண்ணமே யாருக்கு தவறு இழைக்கிறோமோ அவர்களுக்கு பயப்பட்டு அவர்கள் கூறும் நல்ல காரியத்திற்கு கீழ்படிய வேண்டும்.
 



Topics: Ephesians Tamil Reference Bible Rev. Dr. C. Rajasekaran

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download