ஆவிக்குரிய பாடுகள்: (3:1,13) பாடுகள் நம்முடைய அழைப்பு – அழைப்பின் நிபந்தனைஇ வெற்றியின் வழிமுறைஇ இயேசு காட்டிய பாதைஇ பாடுபடுவதன் நோக்கத்திற்கு மகிமையானது. (கட்டுகள் - உபத்திரவம்) ஆவிக்குரிய பாடுகளால் ஆவிக்குரியவர்கள் சோர்ந்து போகமாட்டார்கள். காரணம் அதன் மகிமையையும் விளைவுகளையும் அறிவார்கள்.
ஆவிக்குரிய இரகசியம்: (3:2-12) ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்குரிய இரகசியம் இரகசியமல்ல. இரகசியத்தை பெற்ற வழியை மறைப்பதில்லை. இரகசியத்தைக்குறித்த தெளிவு இருக்க வேண்டும். யாருக்கு இந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டது? அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கு - இப்போது எனக்கும் சபைக்கும். ஏன் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டது? நற்செய்தியாய் ஊழியக்காரனாய் அறிவிக்க. யாருக்கு அறிவிக்க? ஆட்சிபுரிவோருக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் மற்றும் எலலோருக்கும். எது இரகசியம்? 1. பிறர் நலனுக்காகா நமக்கு தெய்வகிருபை 2. கிறிஸ்துவுக்குள் இனபாகுபாடு இல்லை 3. கடவுளின் வாரிசு (இரத்தக்கலப்பானவர்கள்) 4. இறைவாக்கிற்கு எல்லோரும் சொந்தகாரர்கள் 5. கிறிஸ்துவின் அளவற்ற செல்வம் 6. கடவுளின் அநாதி தீர்மானம் 7. அநந்த ஞானம் 8. இயேசுவைக்கொண்டு எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டது 9. விசுவாசத்தால் கடவுளிடம் சேரும் சிலாக்கியமும் தைரியமும.;
ஆவிக்குரிய அறிக்கை: (3:20-21) நமது ஆவிக்குரிய அறிவும் அனுபவமும் மிக குறைவு ஆனால் நமது பலவீன விசுவாசத்தையும் கடவுள் கணம் பண்ணுகிறார். நாம் வேண்டுவதற்கு மேல் தருகிறார் என்றால் அவர் கொடுக்க நினைத்ததை நாம் கேட்கவில்லை. கேட்காததையும் நமக்கு கொடுக்கிறார். நாம் கடவுளுக்காக செய்யும் கிரியையைவிட நமக்காக அவர் செய்யும் கிரியை அதன் வலிமை பெரியது. nஐபத்தின் விளைவு நம்முடைய பரிசுத்தம் கிரியையினாலல்ல அவருடைய மகிமைக்காகவே. கடவுளுக்கு மகிமை என்பது படழசல வழ புழன என்று சொல்லுவதில் அல்ல மாறாக தலைமுறை தலைமுறையாக கடவுள் நம்மூலமும் நமது சந்ததியார் மூலமும் மகிமைப்படும்படியான வாழ்வை அடித்தலமாக அமைக்கும்படியான வாழ்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.