முன்னுரை
மாற்றம் ஒன்றே மாறாதது: மாற்றத்தை ஏற்படுத்தாதவர்கள் சமூகத்திற்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறார்கள் அத்துடன் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை அறியாதவர்களாகிறார்கள். கடவுளின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் நிறைவாக இருந்தவர் ஒரு பெண் ஏவாள்: மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்ற எண்ணத்திற்கு மாற்றாக நல்லது என்பதை உறுதிசெய்யும் நபர் பெண்: ஏவாள். ஏதேன் தோட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் ஒரு பெண் ஏவாள். முதல் மனிதனின் தனிமையை போக்கியவர் ஒரு பெண்: ஏவாள், உலகிலும் உயிரினங்களிலும் மாற்றங்களை முதலில் ஏற்படுத்தியவர் பெண்: ஏவாள். அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்திய ஏவாளுக்கு பின்னால் கடவுள் இருந்து அந்த மாற்றங்களை அனுமதித்தார். பாவம் செய்த பின்பு அவர்கள் கடவுளைப் போல நன்மை தீமை அறியத்தக்கவர்களாய் மாறினார்கள் என்று கடவுள் அறிவிக்கிறார். ஏவாள் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் இன்று வரை உலகில் தொடர்கிறது. கடவுள் மாற்றங்களை இந்த உலகில் ஏற்படுத்த பெண்ணை உண்டாக்கினார். இன்றும் சமுதாயத்திலும், சபையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் சீரிய பாத்திரமாக பெண்களை கடவுள் பயன்படுத்திவருகிறர். தனிமனிதனின் தனிவாழ்வில் பாட்டி, தாய், தமக்கை, தாரம் என்ற உறவுகளைத் தாண்டி தோழி, உடன் உழைப்பாளி, ஆசிரியை, மருத்துவச்சி போன்ற துறைகளையும் தாண்டி, பெண் தொடாத ஒரு துறையும் இவ்வுலகில் இல்லை என்னும் நிலை உருவாக கடவுளின் அருளும் ஆற்றலும் இருக்கிறது. மாற்றங்கள் பலவற்றை பெண்கள் ஏற்படுத்திய வரலாறு வேதத்தில் இருக்கிறது.
சட்டத்தை மாற்றிய சகோதரிகள்
யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள், ஆசரிப்புக் கூடார வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக வந்து: எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார் எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினால், அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள். மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான் அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும் அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக. மேலும், நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும். சகோதரிகள் சொல்வது சரி என்று கடவுளே சொல்கிறார். பெண்கள் சரியானதை பேசுகிறவர்கள் என்பதற்கு கடவுள் ஆபிரகாமிடம் “உன் மனைவி சாராள் சொல்வதை எல்லாம் கேள்” (ஆதி.21:12) என்று சொன்னார்: “பெண் புத்தி பின் புத்தி” என்பது பழமொழிதானேயொழிய கடவுள் ஒரு அங்கீகரித்த கூற்றல்ல.
சரியான மற்றும் தேவையான பெண் உரிமைகளை உணரும் உணர்வும், கேட்கவேண்டியவர்களிடம் கேட்கும் தைரியமும், அதை நடைமுறைப்படுத்தும் முறையையும் நன்கு அறிந்தும் இருந்தார்கள் செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். உரிமைகளை எடுத்துரைக்கும் ஞானம் அந்த பெண்களிடம் இருந்தது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உறவுக்கும் சொத்துக்கும் வாரிசுகள்தான் என்பதை நிலைநாட்டினார்கள். இதனால் தகப்பனின் வாரிசு மற்றும் மாற்றியமைத்திருந்தாள் லீதியாள்.
சந்ததியை மாற்றிய மரியாள்
சந்ததிக்கு தகப்பன்தான் முழுமையான ஆதாரம் என்பதை வேதத்தில் வம்சவாளிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யூதரல்லாத பெண்கள் பெற்ற குழந்தைகளைக் குறிப்பிடும் போதுமட்டுமே மற்ற பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது (உதாரணம் மத்தேயு 1:1-16). மரியாளின் பெயரும் இப்பட்டியலில் வருகிறது. மரியாள் கடவுளின் மனித அவதாரத்தை பெற்றெடுக்கும் பாக்கியத்தை கொடுத்த கடவுளை மகிமைப்படுத்தி மகிழ்ந்தாள். அவளுடைய தாழ்மையை கடவுள் நோக்கினார் என்றும் அதனால் கடவுள் அவளைப் பெருமைப்படுத்தும் விதமாக எல்லா சந்ததிகளும் அவளை பாக்கியவதி என்பார்கள் என்று தூரதரிசனம் கண்டாள். ஆபிரகாமின் சந்ததி நட்சத்திரங்களைப் போன்றும் கடற்கரை மணல் போன்று திறளாய் இருக்கும் என்றார் கடவுள் ஆனால் கடவுளின் சந்ததியில் எல்லா சந்ததிகளும் இருக்கும். அவருடைய சந்ததியாரின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. உலமெங்கும் போய் சர்வ சிருஷ்டிகளுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன இயேசுவின் கட்டளையை ஏற்ற சீடர்கள் இன்றுவரை நற்செய்தியை அனைத்து சந்ததியர்களுக்கும் அறிவித்து அவருடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறார்கள். இயேசுவின் இரட்சிப்பை பெற்றவர்கள் அவருடைய தாயை நினைவுகூர்கிறார்கள். இயேசுவை கருவில் 10 மாதங்கள் சுமக்கும் பாக்கியத்தை பெற்றவள் என்கிறார்கள்.
ஒவ்வொரு தாயும் அவளுடைய பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தாhயாக மாறுகிறாள். மரியாளோ இயேசுவின் மூலம் இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருக்கும் தாயாகிறாள். இயேசுவை நமது மூத்த சகோதரன் என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 8:29). பிதாவின் சித்தத்தை செய்கிற ஒவ்வொருவரும் இயேசுவுக்கு தாயாகவும் இருக்கிறார்கள் (மத்தேயு 12:50). இயேசுவை சுமக்கிற ஒவ்வொருவரும் பாக்கியவான்கள்தான். அதன் முதல் பாக்கியத்தைப் ஒரு பெண் மரியாள் பெற்றாள். இயேசுவை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த மரியாளைப் போன்று நாமும் இயேசுவை நம்முடைய வாழ்வில் அறிமுகப்படுத்தும் போது நாமும் பாக்கியவான்களாகிறோம். வல்லமையுடையவர் மகிமையானவைகளை நமக்குச் செய்வார். அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடிக்கிறார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்துகிறார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிடுகிறார். நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்கிறார்.
முடிவுரை
பெண்கள் நாட்டின் கண்கள். பெண்கள் குடும்ப குத்துவிளக்கு. பெண்கள் கலாச்சாரத்தின் முகப்பு. இப்படி பெண்கள் பல்வேறு முகங்களை அதாவது பொறுப்புகளை குறிப்பாக வீட்டிலும் நாட்டிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பெரும் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களை “சும்மாதான் இருக்கிறாள்” என்றும் “ஹவுஸ் வைப்ஃ” என்று சொல்வதும் பொருந்தாத ஒன்று. வீட்டின் அசுத்தத்தை மாற்றுகிறவள் பெண். உணவுப் பொருட்களை சமைத்து ருசியுள்ள பண்டமாக மாற்றுகிறவள் பெண். அழுக்கான துணிகளை தூய்மையாக்குகிறவள் பெண். வீட்டில் உள்ள அனைவரின் உள்ளத்தையும் அறிந்து அதன் தேவைகளை பூர்த்தி செய்கிற பெண் அன்றும் இன்றும் எங்கும் மாற்றங்களை எற்படுத்துகிறாள். கடவுளுடைய திட்டத்தில எந்த வித்திலும் இரண்டாந்தரமாக இல்லாமல் ஆணுக்கு இணையாக, இசைந்து செயல்பட்டு நல்மாற்றங்களை வீடடிலும் நாட்டிலும் ஏற்பத்துகிறவள் பெண். பெண்களின் மாற்றம் அவர்களில் எற்படவும் அவர்கள் மூலம் சபைக்கும் சமூகத்திற்கும் தேவை. அவர்களுக்கு ஆதரவாக தாத்தாவாக, தகப்பனாக, தமையனாக, தோழனாக, தோள் கொடுக்கும் உறவுகளும் உரிமைகளுமாக ஆண்கள் இருக்கவேண்டும். பெண்களின் மாற்றத்தில்தான் பெண்களால் ஏற்படும் மாற்றங்கள் சாத்தியமாகும்.
Author: Rev. Dr. C. Rajasekaran