இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், டிசம்பர் 2021 இல் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் ஐந்து குடும்பங்கள் உள்ளன. குறைந்தபட்சம் அங்கிருக்கும் 12 வீடுகளுக்கு பால் அளிக்கும் பால் வியாபாரி, அந்த ஐந்துக் குடும்பங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். அங்கு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரிடம்; “நான் இந்தக் குடும்பங்களை கவனித்து வருகிறேன், மேலும் இத்தனை ஆண்டுகளாக பால் சப்ளை செய்து வருகிறேன்; பால் சப்ளை செய்யும் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, இந்த ஐந்து குடும்பங்களும் மிகவும் முன்னேறியுள்ளன. அவர்கள் நல்லவர்களாகவும் மேன்மையானவர்களாகவும் காணப்படுகிறார்கள்" என்றார். அவர் வேறொரு மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்த ஐந்து குடும்பங்களில் நற்செய்தியால் ஏற்பட்ட மாற்றங்களை அவர் காண முடிந்தது. அப்படி அவர் தனது சில அவதானிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
தூய்மை:
பொதுவாக அவர்களுடைய வீடுகள் அசுத்தமாகவும், தூய்மையற்றதாகவும், அழுக்காகவும் இருந்தன. ஆனால் நற்செய்தியைப் பெற்ற பின்னர் அவர்கள் தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் மாற்றினர்.
வீடு:
வீட்டின் நிலைமையும் மோசமானதாக இருந்தது, சுவர்களின் கூரை கவனிக்கப்படாமலும், பாழானதாகவும் இருந்தது. தற்போது, அவற்றின் மேற்கூரை மாறியது, தரைகள் சரி செய்யப்பட்டது. மாற்றத்திற்கு பின்னர் நல்ல ஒரு தோற்றத்தைக் கொண்டுள்ளது.
சமாதானம்:
முன்பெல்லாம் கணவன்மார்கள் குடித்துவிட்டு வந்து, கணவன் மனைவிக்கு இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். இப்போது, மகிழ்ச்சியும், சிரிப்பும், குதுகூலமும் இருக்கிறது.
கல்வி:
குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்கின்றனர். அவர்களின் சீருடைகள் துவைக்கப்படுகின்றன. மேலும், பள்ளியில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
நடத்தை:
முன்பெல்லாம் குழந்தைகள் கூட பால்காரரை மரியாதையோ கண்ணியமோ இல்லாமல் ‘ஏய்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவார்கள். இப்போது அவர்கள் அனைவரையும் மதித்து மரியாதையான வார்த்தைகளால் அழைக்கிறார்கள்.
ஞானம்:
இந்தக் குடும்பங்கள் அனைத்தும் ஞானத்தில் சிறந்து விளங்க ஆரம்பித்தனர். அநேகமாக, அவர்கள் சபையில் இந்த புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.
மகிமை:
ஆண்டவரின் சீஷர்கள் உலகத்திற்கு ஒளியாகவும், பூமிக்கு உப்பாகவும் உள்ளனர். அவர்களின் செயல்கள் வேறுபட்டவை, வித்தியாசமானவை, நல்லவை, மற்றவர்களை விட மிகச் சிறந்தவை. எனவே, பால்காரரைப் போல அவர்களைக் கவனிப்பவர்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துகிறார்கள். உண்மையான சீஷர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை பரலோகத் தகப்பனை நோக்கிப் பார்த்து அவரை வணங்கும்படி தூண்டுகிறார்கள் (மத்தேயு 5:13-16).
புதிய உயிரினம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இருப்பவர்கள் ஒரு புதிய சிருஷ்டி என்பது எவ்வளவு உண்மை. ஆம், பழையது வரலாறாக மாறி மறைகிறது. "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17).
என் பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்த நான் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்