இந்தியாவில் ஆண்களுக்கான அழகுப்படுத்தும் நிலையங்கள் 2018 இல் $ 643 மில்லியனில் இருந்து 2022 இல் $ 2 பில்லியனாக விரைவான வேகத்தில் வளர்ந்துள்ளது மற்றும் இந்த தசாப்தத்தின் முடிவில் சுமார் $ 3.5 பில்லியனாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் அழகுப்படுத்துதல் என்பது தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு, சவரம் செய்தல், நறுமணம் மற்றும் பிற பொருட்கள் என ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. மக்கள் ஞானத்தை விட வெளிப்புற அழகைத் தான் தேர்ந்தெடுக்கிறார்களா? லூசிபர், தூதன், அவனது பெருமை காரணமாக வீழ்ந்தான். துரதிர்ஷ்டவசமாக, அவன் ஞானத்தை விட மேட்டிமையைத் தேர்ந்தெடுத்தான். லூசிபர் சாத்தான் தன்னை அழித்ததும் இல்லாமல் உலகை அழித்துக்கொண்டே இருக்கிறான். “உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்” (எசேக்கியேல் 28:17).
வீண் பெருமை:
“செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்” (நீதிமொழிகள் 31:10). வெளிப்புற அழகு காலப்போக்கில் மறைந்துவிடும். வெளிப்புற சேர்க்கைகள் மூலம் அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டாம் என்று பேதுரு அறிவுறுத்துகிறார். அவர் மூன்று விஷயங்களை வெளியே கொண்டு வருகிறார்; “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்”, “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” (I பேதுரு 3:3-4) என்கிறார்.
கெட்ட ஞானம்:
லூசிபர் தனது பெருமையின் காரணமாக அழகு மற்றும் மேட்டிமையில் கவனம் செலுத்தினான். அகந்தை அவனது அறிவையும் ஞானத்தையும் சிதைத்தது. எனவே, அவன் மேட்டிமைக்கு முன்னுரிமை கொடுத்தான். ஞானம் விரும்பப்பட வேண்டும், தேடப்பட வேண்டும். ஞானம் விரும்பப்பட வேண்டும், தேடப்பட வேண்டும்.
விலையேறப்பெற்றது:
தேவனின் பார்வையில் விலையேறப்பெற்ற அழியாத அழகு அல்லது மங்காத அழகு பற்றிய நுண்ணறிவுகளை பேதுரு கொடுக்கிறார். மென்மையான மற்றும் அமைதியான ஆவி தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட அழகின் ரகசியம்.
மென்மையும் அமைதியும்:
இது பவுலால் ஆவியின் கனியாக பட்டியலிடப்பட்டுள்ளது (கலாத்தியர் 5:22-23). சாந்தம் என்பது பலவீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில், ஒரு நபர் மென்மையாக இருக்க, ஆவியில் வலுவாகவும், ஒழுக்கமாகவும், சுயக்கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். ஒரு பெண் விபச்சாரத்தில் சிக்கியபோது, தேவன் சாந்தமான தன்மையை வெளிப்படுத்தினார். குற்றம் சாட்டுபவர்களிடம் அவர் கோபப்படவில்லை; அவர் அமைதியாக இருந்தார் மற்றும் தரையில் எழுதினார். குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு, ஆண்டவர் அவளிடம் மிகத் தன்மையாக இனி பாவம் செய்யாதே என்று கேட்டுக் கொண்டார் (யோவான் 8:1-11). மென்மை என்பது ஆவிக்குரிய ரீதியில் பக்குவமடைந்த ஒருவரின் அமைதியான பிரதிபலிப்பாகும்.
பிரகாசிக்கும் மோசே:
முக்காடு போடுமளவு மோசேயின் முகம் பிரகாசித்தது. இதைப் மகிமையான அழகு என்று சொல்லலாம் (யாத்திராகமம் 34:29-35).
நான் தேவ அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்