இரு சக்கர மோட்டார் வாகனத்திற்கான விளம்பரத்தில் ஒரு முகப்புவரி (tagline) உள்ளது; அது என்னவென்றால் 'உங்கள் பயணம் பொல்லாத சவாரியாக (Wicked Ride)' இருக்கும். இது சாகசப் பயணம் அல்லது வசதியான சவாரி அல்லது வேகமான சவாரி என்று குறிப்பிடாமல், பொல்லாத சவாரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அக்கிரமம் இந்த உலகில் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது போலும். இதை எப்படி புரிந்து கொள்வது?
பொல்லாத சவாரி:
குற்றச்செயல்களில் ஈடுபடும் தீயவர்களுக்கு மட்டுமே நிறுவனம் வாகனத்தை விற்கப் போகிறதா என்ன அல்லது நிறுவனம் பொல்லாதவர்களை ஊக்குவித்து நிலை நிறுத்துகிறதா? குறும்பு அல்லது துன்மார்க்கத்தை அங்கீகரித்து, உயர்த்தி, பெரிதாக்குவதன் மூலம், நிறுவனம் தன்னைத் தானே கண்டனம் செய்கின்றது. "உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்" (ரோமர் 14:22). அந்த நிறுவனம் தீய சவாரி செய்பவர்களை உருவாக்கும் என்பதையும் இது குறிக்கலாம். "அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது" (ஏசாயா 59:7).
சவாரி செய்பவரின் எண்ணம்:
அந்த முகப்புவரி சவாரி செய்பவரின் நோக்கத்தை மையப்படுத்துகிறது. ஒரு வாகனம் பொதுவாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் பணியிடத்தையோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ விரைவாக அடையலாம். அவர்களின் தொழில் அல்லது பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்பதே எண்ணம். இருப்பினும், இந்த விளம்பரம் ஒவ்வொரு சவாரியின் நோக்கமும் தீமை அல்லது பொல்லாப்பு என்ற தோற்றத்தை அளிக்கிறது.
வாழ்க்கை:
பொல்லாத வாழ்க்கைக்கு இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இது போன்ற தேவையற்ற விளம்பரங்களால் இளைஞர்களின் மனங்கள் சிதைக்கப்படுகின்றன. துன்மார்க்கம் ஒரு புதிய இயல்பு ஆகிறது. உண்மையில், அக்கிரமம் கொண்டாடப்படுகிறது.
நன்மை மற்றும் மகத்துவம்:
எப்போதும் நன்மையும் மகத்துவமும் ஒன்றாகவே செல்கின்றன. எவ்வாறாயினும், பக்கச்சார்பான மதிப்புகளைக் கொண்ட உலகம், துன்மார்க்கத்தை மகத்துவத்துடன் தவறாக இணைக்கிறது. எந்தவொரு வடிவத்திலும் அல்லது தீமையின் தோற்றத்திலும் இருந்து விலகி அல்லது ஓடுமாறு பவுல் அறிவுறுத்துகிறார். "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:22). "ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்" (நீதிமொழிகள் 14:16).
நன்மையை உறுதியாகப் பிடித்துக்கொள்:
"எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:21). வீழ்ச்சியுற்ற உலகில், ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு நபரை தீமை செய்ய தூண்டுகிறது, ஆனால் வேதம் ஒரு நபரை முழுமையடையச் செய்கிறது மற்றும் நன்மை செய்ய ஒரு விசுவாசியை சித்தப்படுத்துகிறது. "அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:17).
தேவனால் அங்கீகரிக்கப்பட்டது:
உத்தமன் சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவன் என தேவனே யோபு குறித்து சாட்சிக் கொடுத்தார். ஆம், "ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி" (யோபு 28:28).
நான் நன்மையைப் பற்றிக்கொண்டு தீமையை விட்டு விலகுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்