சண்டையின் விதிகளை மாற்றுவதன் மூலம் பெலிஸ்தியர்கள் ஒரு சவாலை முன்வைத்தனர். ஆம், ஒவ்வொரு தேசத்தின் பிரதிநிதிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். பெலிஸ்தியர்களின் சாம்பியனான ராட்சத கோலியாத் பிரதிநிதியாக முன்வைக்கப்பட்டு இஸ்ரவேலர்களிடமிருந்து பிரதிநிதியைக் கோரினான் (1 சாமுவேல் 17:1-11).
சவுல் தன்னை விடுவித்துக் கொள்ளல்:
அந்த காலக்கட்டத்தில் இஸ்ரவேலிலேயே மிக உயரமான மனிதன் சவுல் ராஜா (1 சாமுவேல் 9:2). கோலியாத்துடன் சண்டையிடுவதற்கான மிக நேர்த்தியான உடல்வாகு கொண்டவனாக அவன் இருந்தான். இருப்பினும், சவுல் சண்டையிட வேறொரு நபரைக் தேடிக்கொண்டிருந்தான். கோலியாத்தோ காலையிலும் மாலையிலும் நாற்பது நாள் வந்துவந்து சவால் விடுத்தான் (1 சாமுவேல் 17:16).
யோனத்தானை ஏன் அனுப்பவில்லை?
கோலியாத்துடன் சண்டையிட இஸ்ரவேலின் பிரதிநிதியாக சவுல் தன் மகன் யோனத்தானைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். யோனத்தான் தனக்குப் பிறகு ஒரு வெற்றிகரமான ராஜாவாக வர வேண்டும் என்று சவுல் விரும்பியதால், ஒரு ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால், சவுல் மற்றும் யோனத்தான் இருவரும் பின்னர் பெலிஸ்தியர்களுடன் போரிட்டு கில்போவா மலையில் மடிகின்றனர் (1 சாமுவேல் 31).
திறமையான போர்வீரன்:
யோனத்தான் ஒரு அனுபவமிக்க போர்வீரன். அவன் இஸ்ரவேலின் முதல் ஆட்சேர்ப்பு இராணுவத்தின் இணை தளபதியாக இருந்தான் (1 சாமுவேல் 13:2). சவுலும் யோனத்தானும் மட்டுமே பட்டயங்களை வைத்திருந்தனர், மற்றவர்கள் போர் ஆயுதங்களுக்குப் பதிலாக விவசாய உபகரணங்களுடன் சண்டையிட வேண்டியிருந்தது (1 சாமுவேல் 13:22).
நல் அனுபவசாலியான வெற்றியாளன்:
யோனத்தானும் அவனோடு கூட ஆயுதம் ஏந்தியவனும் பெலிஸ்தியர்களின் தாணையத்திற்கு தைரியமாகச் சென்றனர். அவர்கள் அக்கூட்டத்தினரைத் தாக்கினார்கள், அப்போது பெலிஸ்தியர்களிடையே தேவனால் ஒரு பயங்கரம் உண்டாயிற்று; அவர்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள். யோனத்தான் மூலம் பெலிஸ்தியர்கள் மீது தேவன் மாபெரும் வெற்றியை இஸ்ரவேலுக்கு கொடுத்தார் (1 சாமுவேல் 14).
அபிஷேகம் பெற்ற தாவீது:
தாவீது வருங்கால ராஜாவாக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டான். பெத்லகேமில் நடந்த இரகசிய விழாவில் சவுலுக்குப் பிறகு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேல் தீர்க்கதரிசி அபிஷேகம் செய்தார் (1 சாமுவேல் 16:13).
பொல்லாத ஆவி சவுலை துன்புறுத்துதல்:
சாமுவேலால் தாவீது அபிஷேகம் பண்ணப்பட்டான்; கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கிய அதே நேரத்தில், ஒரு பொல்லாத ஆவி சவுலை துன்புறுத்தியது (1 சாமுவேல் 16:13-14). அப்பொழுது தாவீது இசையை வாசிக்கவும் சவுலை அமைதிப்படுத்தவும் அழைக்கப்பட்டான்.
தாவீது இஸ்ரவேலுக்கு அறிமுகமாகுதல்:
தாவீதை இஸ்ரவேல் தேசத்திற்கு அறிமுகப்படுத்த தேவன் ஒரு யுத்த சூழ்நிலையை ஏற்பாடு செய்தார். பின்னர் தேவன் தாவீதின் மூலம் வெற்றியைக் கொடுத்தார். இஸ்ரவேலின் மிகப் பெரிய மற்றும் மிகவும் பிரியமான ராஜாவாக ஆவதற்கு தேவன் தாவீதை துன்பத்தின் சூளையில் உருவாக்கினார்.
என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனின் நோக்கத்தை நான் அறிந்து செயல்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்