சேவை என்ற வார்த்தையானது ஒரு அரசாங்கத் துறை மற்றும் அதன் சேவையையும் மற்றும் ஒரு மதத் தலைவர், ஒரு பிரசங்கியார் அல்லது ஒரு போதகரின் ஊழியம், செயல்பாடுகள் பற்றிக் குறிக்கும். தேவனின் ஆசீர்வாதங்கள் மனிதர்களுக்கு சேவையாகவும் கிடைக்கின்றன.
மீட்பின் ஊழியம்:
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்தபோது, அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் இறந்துவிட்டார்கள். அவர்கள் தேவனுடன் தொடர்பு கொள்ளும் நல்லுறவை இழந்து தங்களை மறைத்துக் கொண்டனர். முதல் ஜோடியின் அனைத்து சந்ததியினரும் ஆவிக்குரிய குருடர்களாகவும், மரித்தவர்களாகவும் மற்றும் இருளிலும் வாழ்கின்றனர். பரிசுத்த தேவன் குற்றமற்ற இரத்தத்தை மீட்பிற்காக சிந்த வேண்டும் என்று கோருகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் மரித்து உலகத்தின் பாவத்தை நீக்கி விட்டார் (யோவான் 1:29).
ஒப்புரவாக்குதலின் ஊழியம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பின் செயல் என்பது, எந்த நபராவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது அந்நபர் புதிய சிருஷ்டியாகுகிறார்; எல்லாம் புதியதாக மாறுகிறது. இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். ஆக மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார் (கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:18) என பவுல் எழுதுகிறார்.
மனதைப் புதுப்பிக்கும் ஊழியம்:
சபையின் நோக்கம் மக்களின் மனதைப் புதுப்பிப்பதாகும், அதாவது உலகக் கண்ணோட்டத்தை மாற்றுவதாகும். ஒருவரின் மனம் புதுப்பிக்கப்படும்போதுதான், அவர் உலகின் மரபுகள் மற்றும் போக்குகளைப் பின்பற்றுவதை நிராகரிக்க அல்லது ஒதுக்க முடியும். அதற்கு பதிலாக, அவர் தேவ சித்தம், திட்டம் மற்றும் நோக்கம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது, இது நல்லதாகவும், சரியானதாகவும் மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைகின்றது (ரோமர் 12:2).
மகிழ்ச்சியுடனான ஊழியம்:
தொலைந்து போனது மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய மூன்று உவமைகள் கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியிலும் முடிகிறது (லூக்கா 15). கன்னிகைகள், மேய்ப்பன், தந்தையும் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பிதாவின் முன்னிலையில் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் (லூக்கா எழுதிய சுவிசேஷம் 15:7).
மறுசீரமைப்பு ஊழியம்:
தேவனுடன் ஒப்புரவாகும் போது, அவர்களுக்குள்ளே தெய்வீக குணங்கள் மீட்டெடுக்கப்படுகிறது மற்றும் வழங்கப்படுகிறது (2 பேதுரு 1:4). இது உலகில் நன்மை செய்வதன் மூலம் பலனளிக்க வேண்டும். அப்போது உலகிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பாளர்களாக உருவாக்குகிறது.
புனரமைப்புக்கான ஊழியம்:
விசுவாசிகளின் ஊழியம் மீண்டும் கட்டுவது, அடித்தளங்களை உயர்த்துவது, பழுதுபார்ப்பது மற்றும் மீட்டெடுப்பது ஆகும். உனது நகரங்கள் பல ஆண்டுகளுக்கு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய நகரங்கள் கட்டப்படும். இந்நகரங்களின் அஸ்திபாரங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கும். நீ, “வேலிகளை கட்டுகிற ஒருவன்” என்று அழைக்கப்படுவாய். நீ, “சாலைகளையும் வீடுகளையும் கட்டுபவன்” என்றும் அழைக்கப்படுவாய் (ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 58:12) என்பதாக ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகிறார்.
தேவனின் உலக ஆசீர்வாதங்களுக்காக நான் ஊழியம் செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்