ஹெல்மெட் அணியாததால் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம். பிடிப்பட்ட நபரோ போலீஸ் அதிகாரியிடம் அந்த பரபரப்பான சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் மற்றவர்களை காட்டினார். அதற்கு போலீசார் ஹெல்மெட் அணிய வேண்டியது சாலைவிதி, நீங்கள் அணியாமல் சட்டத்தை மீறிவிட்டீர்கள், அதற்கு தண்டனை உண்டு, வீணாக மற்றவர்களை காட்ட வேண்டாம் என்றார். “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்" (ரோமர் 14:12) என்று பவுல் எழுதுகிறார். ஆக, மற்றவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்ற வாதங்கள் எந்த நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
பரிசேயர் ஆவி:
"நான் அவர்களைப் போல் இல்லை" என்பது பலர் பயன்படுத்தும் கூற்று. மற்றவர்களை ஒப்பிடுவது மனித குணம். ஒரு பரிசேயர் தன்னை உயர்ந்தவராகவும், ஒரு சாதாரண மனிதனை தாழ்ந்தவராகவும் கருதினார் (லூக்கா 18: 9-14). ஆனால் ஏனோ அப்படிப்பட்டவர்கள் தங்களைவிட சிறந்தவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.
பெருமை:
அப்படிப்பட்டவர்களிடம் தங்கள் குறைகளையோ தவறுகளையோ பாவங்களையோ ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்ளும் மனத்தாழ்மை இருக்காது. ஒரு நபரின் ஆவிக்குரிய பெருமை தேவன் தனது சொந்த நிபந்தனைகளின்படி பதிலளிக்க வேண்டும் என்று கோருகிறது.
பாக்கியம்:
சிலர் தங்களை சட்டங்களை காட்டிலும் மேலானவர்கள் என்று கருதுவதால், சட்டங்களை மீறுவதற்கான உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சட்டங்கள் சாதாரண மனிதர்களுக்கானது, தங்களுக்கு எல்லாம் பொருந்தாது என்பது போன்று நடந்து கொள்கிறார்கள்.
அற்ப மனப்பான்மை:
சாதாரண மனிதனைப் பற்றி பரிசேயர் தாழ்ந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார். இந்த வகையான மக்கள் மற்றவர்களை மோசமாக நடத்துகிறார்கள் மற்றும் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். இத்தகைய ஆணவக்காரர்கள் மற்றவர்களை இழிவான பெயர்களால் அல்லது மிருகங்களின் பெயர்களால் (நாய்) அழைக்கிறார்கள்.
அனுமானம்:
தாங்கள் பரிபூரணமானவர்கள் என்று தங்களை தாங்களே எண்ணிக் கொள்கிறார்கள். மேலும் தேவன் ஏதோ அவர்களின் ஜெபங்களைக் கேட்கவும் அதன்படி செய்யவும் கடமைப்பட்டிருக்கிறார் என எண்ணுகிறார்கள். இது விசுவாசம் அல்ல, ஒரு பெருமிதமான அனுமானம்.
தவறான முக்கியத்துவம்:
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே" (மத்தேயு 23:23). ஆனால் அவர்கள் சடங்குகளுக்கும் மரபுகளுக்குமே முக்கியத்துவம் அளித்தனர்.
தேவனின் சிறப்பு:
பல சமயங்களில், மற்றவர்களின் தலைவிதியை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். பேதுரு கூட யோவானின் எதிர்காலத்தைப் பற்றி அறிய விரும்பினார். அப்போது கர்த்தராகிய இயேசு அவரிடம் ‘உன் சொந்த காரியத்தில் கவனம் செலுத்து' என்று சொல்ல வேண்டியிருந்தது (யோவான் 21:21-22).
தேவனின் கட்டளைகள்:
மனத்தாழ்மையுடன் அனைத்து சீஷர்களும் தங்களைத் தாங்களே அவருடைய வேதம் என்னும் வெளிச்சத்திலும், அவருடைய நியமனங்களிலும் மற்றும் பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறாரா என்று சோதித்துக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களுடன் ஒப்பிடும் ஆரோக்கியமற்ற பழக்கம் எனக்கு உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்