தொற்றுநோய் காலங்களில், தற்கொலைகள் குறித்து பல சோகமான செய்திகள் வருகின்றன. சமீபத்தில் வெறும் முப்பத்தி நான்கே வயதுடைய பாலிவுட் பிரபலம் தன் தொழிலின் உச்சத்தில் இருக்கும்போதே
தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு சம்பவம், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண், இரண்டு மாத காலமாக பள்ளி இல்லாமல் தனது பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்க்கொள்ள ஒரு பயம்,
அவள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெற்று வீட்டிற்கு வந்தவள் தற்கொலை செய்து கொண்டாள். அவள் இறந்த சில மணி நேரத்தில், அனைத்து மாணவர்களுக்கும் பாஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்
என்றும், தேர்வுகள் ரத்து என்றும் அரசு அறிவித்தது.
குறைந்தபட்சம், தற்கொலைக்குத் தூண்டும் இரண்டு விஷயங்கள்; ஒன்று விரக்தி மற்றொன்று மனச்சோர்வு. எரேமியா தீர்க்கத்தரிசி பாபிலோனியர்கள் எருசலேமை இரக்கமின்றி
அழித்ததைக் கண்டு புலம்பல் அதிகாரத்தில் “என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று" (புலம்பல் 3:18) என்று எழுதியுள்ளார்.
முதலில் சகிப்புத்தன்மை அழிந்தது, இரண்டாவதாக நம்பிக்கை அல்லது கனவு சிதைந்தது. மனிதனின் சகிப்புத்தன்மையின் வரம்பு ஓரளவுக்குதான் உள்ளது.
ஆனால் இது நபருக்கு நபர் மாறுபடும். சிலர் வலுவான விருப்பமுடையவர்களாகவும், உறுதியான இதயமுள்ளவர்களாகவும் மற்றும் கடினமான எண்ணம்
கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்; ஆதலால் அவர்களால் எவ்வளவு பெரிய அழுத்தம் வந்தாலும் தாங்கிக் கொண்டு அதை விட்டு வெளியிலும் வந்துவிடுகிறார்கள்.
மற்றவர்களால் அப்படி வர முடிவதில்லை. மிகச் சிறியளவில் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் தீர்மானங்கள் உடைந்து தங்கள் முடிவை தாங்களே எடுக்கின்றனர்.
இவையனைத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதி உள்ளது. அது என்னவெனில்; மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல்
வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல்,
சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரிந்தியர் 10:13). இந்த சத்தியத்தை நம்பாதவர்களுக்கு,
அத்தகைய உத்தரவாதம் இல்லை.
இப்படி ஒரு கடினமான பாதகமான சூழ்நிலையின் மத்தியிலும் தேவ நம்பிக்கை ஆற்றலையும் வலிமையையும் மற்றும் சகிப்புத்தன்மையையும் வழங்குகிறது.
நம்பிக்கை என்பது எதிர்காலத்தின் மீதான விசுவாசம். அப்படியானால் எதிர்காலத்தைப் பற்றிய உத்தரவாதம் என்ன? சிலருக்கு அது அவர்களின் சொந்த திறமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை;
மற்றும் சிலருக்கு அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களாக இருக்கலாம்; இன்னும் சிலருக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் மீதோ அல்லது
அரசாங்கத்தில் ஆளுகின்ற நபர்கள் மீதாகவும் இருக்கலாம். ஒரு நபர் தனது அனைத்து சாத்தியமான உதவிகளையும் பெற்றுத் தீர்ந்த பின்பு அந்நபருக்கான நம்பிக்கை முழுவதும் அற்றுப் போகின்றது.
ஆதலால் எதிர்காலம் இருண்டதாகவும் வெறுமையாகவும் மாறுகிறது. சொல்லமுடியாத ஒரு பயம் அத்தகையவர்களைப் பிடிக்கிறது, அப்போது தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட அவநம்பிக்கையான
செயல்களைச் செய்ய அவர்களின் நம்பிக்கையற்றத் தன்மை வழிநடத்துகிறது. ஆம், மீண்டும் சொல்ல வேண்டுமானால், தேவனை நோக்கிப்பார்க்கும் முகங்கள் பிரகாசத்தையும், நித்தியத்திற்கான
நம்பிக்கையையும் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி அவர்கள் முகங்களும் வெட்கப்பட்டும் போவதில்லை(சங்கீதம் 34:5).
எல்லா சூழ்நிலைகளையும் தாங்க எனக்கு உதவும் நித்திய நம்பிக்கை என்னிடம் இருக்கிறதா? என சிந்திப்போம்.