ஆமானுக்கான எச்சரிக்கை

தேவன் பொல்லாதவர்களுக்கும் கிருபையளிக்கிறார். அவர்கள் மனந்திரும்பவும், தீய வழிகளிலிருந்து திரும்பவும் அவர் வாய்ப்பளிக்கிறார்.  அரண்மனையின் மற்ற அதிகாரிகள் செய்ததைப் போல மொர்தெகாய் தனக்கு மரியாதை செய்யாததால் ஆமான் வருத்தப்பட்டான்.  ஆத்திரக்கார ஆமான் ஒரு கொடுரமானவனும் பொல்லாதவனுமானவன் அதுமட்டுமன்றி, அவன் செல்வாக்கு மிக்கவனும் ஆற்றல் வாய்ந்தவனுமாயிருந்தான். மொர்தெகாயைத்  தண்டிப்பதற்குப் பதிலாக, அவன்  இனரீதியான விவரங்களைச் சேகரித்து ,  ராஜ்யத்தின் 127 மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்க முடிவு செய்தான்  (எஸ்தர் 3: 2,6).  ஆமான் யூதர்களை ‘உள்நாட்டு எதிரிகள்’ என்றும்  அவர்களை சகித்துக் கொள்ளக்கூடாது என்பதான தன் கருத்தை முன் வைத்தான்.  அவனது திட்டம் மிகச்சிறப்பாக இருந்தது மட்டுமன்றி,  அகாஸ்வேரு பேரரசரின் ஒப்புதலின் முத்திரையைப் பெற்றான்,  அதற்கான ஆணையையும்  பெற்றுக் கொண்டான் (எஸ்தர் 3: 8-10).

தேவன் ஆமானின் முட்டாள்தனத்தைப் பற்றி எச்சரித்தார்.  ஒருநாள் காலையில் அவன் ராஜாவின் இடத்திற்கு சென்றபோது, ​​தூக்கம் கலைந்ததால் ராஜா பழைய ஆவணங்களைப் படித்துக்கொண்டிருந்தார், அப்போது ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானா மற்றும் தேரேசும் ராஜாவை படுகொலைச் செய்ய முயற்சித்தபோது மொர்தெகாய் அதை தடுக்க அரசரிடம் அறிவித்து செய்த நற்செயலுக்காக அவனுக்கு எந்த வெகுமதியும்  அளிக்கப்படவில்லை என்பதை ஆவணத்தின் மூலம் வாசித்தறிந்தான் அரசன் (எஸ்தர் 6: 1-11).  யூதர்களை அழிக்கும் பொல்லாத சதியைத் தூண்டிய ஆமானிடம் ராஜா உடனடியாக மொர்தெகாயை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வர கட்டளையிட்டான்.

சோர்வுற்ற ஆமான் அவனுடைய வீட்டிற்குச் சென்றபோது, ​​அவனது மனைவி சிரேஷ்,  மொர்தெகாயுடன் சண்டையிடுவது ஆபத்தான விஷயம் என்று எச்சரித்தாள்  (எஸ்தர் 6:13). ஆனாலும், ஆமான் மனந்திரும்பவில்லை.  யூதர்கள் கொல்லப்படவேண்டும் என்பதிலும், மொர்தெகாய்க்காக தான் எழுப்பிய தூக்கு மேடையில் தூக்கிலிடப்பட்டதையும் பார்த்தாலன்றி தன்னால் ஓய்வெடுக்க முடியாது என்று நினைத்தான் (எஸ்தர் 5:14).

முதலாவதாக, ஆமானுக்கு சுயமாக எழுந்த தான் என்ற ஆணவம் இருந்தது, அது வெற்று நிறைந்த ஒரு பெரிய பலூன் போன்றது, வெறும் காற்று.  அவன் தன்னைப் பற்றி பெரிதாக நினைத்துக் கொண்டான், ஆதலால் அனைவரிடமிருந்தும் மரியாதை பெற தகுதியுடையவன் என எண்ணினான்.  அவனது உலகில், அவனுக்கு 

முன் வணங்காத எவரும் இருக்கக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

இரண்டாவதாக, அவனுக்கு ஒரு மேன்மையான எண்ணமும் அல்லது பெருமையும் இருந்தது.  அவன் யூதர்களை செயலற்றவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும், எந்த கண்ணியத்திற்கும் தகுதியற்றவர்கள் என்றும் கருதினான். பொதுவாக கொடுங்கோலர்கள்  வாழ்க்கை அப்படிதான்.

 மூன்றாவதாக, அவனது இதயம் ஒரு நபரை தீய, கேவலமான மற்றும் வன்முறையாளராக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த எதிர்மறை உணர்ச்சியால் ‘வெறுப்பு’ நிறைந்ததாகக் காணப்பட்டது.  

நான்காவதாக, அவன் மனது பழிவாங்கும் மனப்பான்மையால் நிரம்பியிருந்தது.  பழிவாங்குதலில் அவனது வலிமை, சக்தி, செல்வாக்கு மற்றும் அதிகாரம் ஆகியவற்றைக் காட்ட நினைத்தான்.  மொர்தெகாயைக் கொல்வது ஒரு பூச்சியைக் கொல்வது போன்று நினைத்தான். முழு யூத தேசமும் அழிக்கப்பட வேண்டும் என்று அவன் விரும்பினான்.

பரிசுத்த ஆவியின் எச்சரிக்கையை நான் உணர்கிறேனா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download