ராம் கிடாமூல் தனது "மை சில்க் ரோடு" என்ற புத்தகத்தில், தனது குழந்தைகளை கிறிஸ்தவ விழுமியங்களில் வளர்ப்பது பற்றி எழுதுகிறார். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து திரும்ப வந்த பிறகு மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், குழந்தைகள் மூன்று விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்; அது என்னவென்றால் சோகம், துயரம், மற்றும் மகிழ்ச்சி. ஒரு குழந்தை இந்த மூன்றை வெளிப்படுத்தும் போது, குழந்தைகள் சரியான மதிப்புகள், சரியான தெரிவுகள் மற்றும் சரியான நடத்தை ஆகியவற்றைக் கற்பிக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் நடக்க வேண்டிய வழியில் செல்ல பயிற்றுவிக்கும்படி வேதாகமம் அறிவுறுத்துகிறது. அத்தகைய குழந்தைகள் வயதாகிவிட்டாலும் சரியான மற்றும் நேர்மையான “பாதையை விட்டு விலக மாட்டார்கள். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6).
சோகம்:
உலகம் அபூரணமானது, அநியாயம் நிறைந்தது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைச் சுற்றி அவர்களுக்கு வருத்தம் தரும் நிகழ்வுகள் ஏற்படும். ஐடா ஸ்கடருக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போனது, பிரசவத்தின்போது அவர்கள் இறந்தது எல்லாம் பரிதாபமாக இருந்தது. அந்த சோகம் பாரமாக மாறியது, இது பின்னர் பெண் மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் இந்தியப் பெண்களுக்கு உதவும் ஒரு தரிசனத்தை வடிவமைத்தது. அதுபோல தேவன் குழந்தைகளுக்கு ஒரு பாரத்தையும், தரிசனத்தையும் கொடுத்து அவர்களை சமுதாயத்தில் மாற்றத்தின் முகவர்களாக மாற்ற முடியும்.
துயரம்:
குழந்தைகள், எல்லாம் நேர்த்தியாய் செய்யக் கூடியவர்கள் அல்ல. அவர்கள் தவறு செய்யலாம், மூடத்தனங்களைச் செய்யலாம், முட்டாள்தனமான செயல்களைச் செய்யலாம். பிள்ளைகள் மனத்தாழ்மையுடன் இருக்கவும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், மனந்திரும்பவும், சிறப்பாகச் செய்ய உறுதியாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மைக்கு வெளிப்படைத்தன்மை அடிப்படையானது. குழந்தைகள் தங்கள் கெட்ட செயல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் மனந்திரும்பவும் பாவங்களை விட்டுவிட்டு தேவனோடு ஒப்புரவாகவும் கற்றுக்கொள்கிறார்கள். தவறுகளை நியாயப்படுத்துவது, சரியென வாதிடுவது அல்லது மறைப்பது நல்லதல்ல அல்லது சரியானது அல்ல, ஆனால் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு செயல்களைச் செய்வது நல்லது என்பதை குழந்தைகள் அறிந்துகொள்வார்கள். நீதிமொழிகள் 28:13ல் கூறுவது போல், “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28: 13).
மகிழ்ச்சி:
குழந்தைகளை மகிழ்வித்ததைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும். யாராவது துன்பப்படும்போது அல்லது காயப்படும்போது ஒரு குழந்தை மகிழ்ச்சியடையலாம், அது முட்டாள்தனம் அல்லது பொறாமை மனப்பான்மையாகி விடும். அத்தகைய அணுகுமுறையில் திருத்தம் தேவை. அவர்களைச் சுற்றி நடக்கும் மகிழ்ச்சியான காரியங்களுக்கு நன்றியுணர்வு வெளிப்படுத்தப்பட வேண்டும், தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும். மனநிறைவும் தெய்வபக்தியும் ஒரு குழந்தையை மகிழ்விக்கின்றன.
உறங்கும் முன் காணப்படும் குடும்ப ஜெபத்தில் குழந்தைகளை விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள செய்வதும் ஜெபிக்க வைப்பதும் ஊக்குவிக்கப்பட்டால் அவர்களுக்கு அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
வாழ்க்கையில் சரியான மற்றும் நேர்மையான விழுமியங்களை உள்வாங்க நான் என் குழந்தைகளுக்கு உதவுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்