சிலர் சூரியன் அல்லது சந்திரன், ஏரிகள் அல்லது மலைகள் அல்லது பெருங்கடல்கள் அல்லது ஆறுகள், தேவதைகள் அல்லது ராட்சதர்கள் அல்லது டிராகன்களிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகின்றனர். மானுடவியல் ஆய்வுகள், பல்வேறு மக்கள் குழுக்கள் தாங்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்காக, புகழ்பெற்ற புராணக் கடந்த காலங்களைக் கோருகின்றதாக தெரிவிக்கின்றன. இது கோத்திரம் பெருமை, சாதிப் பெருமை, இனப் பெருமை, மொழிப் பெருமை, பண்பாட்டுப் பெருமிதம் போன்ற வீண் பெருமைகளின் விளைவே. இருப்பினும், கிறிஸ்துவின் பெயரால் அவமதிக்கப்பட்டால், அவமானப்படுத்தப்பட்டால் அல்லது துன்புறுத்தப்பட்டால் அவர்கள் பாக்கியவான்கள் மற்றும் அவர்கள் மீது தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் தங்கியிருப்பதாக பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 4:14).
ஒரு மனிதன்:
எல்லா மனிதர்களும் ஆதாமிலிருந்து படைக்கப்பட்டவர்கள். வேறு எந்த மூலத்திலிருந்தும் வந்தவர்கள் என்ற கட்டுக்கதை என்பது எந்த அடிப்படையும் இல்லாத மனித கற்பனை. பரிணாமக் கோட்பாடு கூட ஒரு ‘அறிவியல் கட்டுக்கதை’ அல்லது உண்மையைக் காட்டிலும் ஊகமாகும்.
சமமாக உருவாக்கப்பட்டவர்கள்:
எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள். சாதி அல்லது வர்க்கம், இனம் அல்லது தேசியம் அல்லது வேறு எந்த அடிப்படையிலும் படிநிலை இல்லை. தேவனின் பார்வையில் அனைவரும் சமம்.
சம பாவிகள்:
எல்லா மனிதர்களும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்துவிட்டனர் (ரோமர் 3:23). முதலில் , மனிதர்கள் பாவத்தை மரபுரிமையாக பெற்றிருக்கிறார்கள். இரண்டாவது , யாருமே நேர்த்தியானவர்கள் அல்ல என்பதால் அவர்கள் பாவம் செய்தார்கள். மூன்றாவது , பிறருக்கு செய்ய வேண்டிய நல்லதை செய்யாமல் பாவம் செய்கிறார்கள்.
கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்தார்:
எல்லா மனிதர்களும் பாவிகள் மற்றும் தண்டனையாக நித்திய மரணத்திற்கு தகுதியானவர்கள். இருப்பினும், தேவன் தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார், பாவத்தின் சுமையைத் தாங்கவும், கல்வாரி சிலுவையில் மரித்து, விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பை வழங்கவும் உயிர்த்தெழுந்தார்.
வீண் பெருமை:
துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் பாவிகள் என்ற உண்மையை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் பெருமை மற்றும் கட்டுக்கதையின் அடிப்படையில் தங்கள் சொந்த மகத்துவத்தை வடிவமைக்கிறார்கள். பெருமையும் கட்டுக்கதையும் மக்களை அழிவுக்கு அழைத்துச் செல்லும். தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் புகழ், அந்தஸ்து மற்றும் வீண் புகழைப் பின்தொடர்கின்றன.
மகிமையுள்ள ஆவி:
தங்கள் இதயக் கதவைத் தட்டுவதைக் கேட்கிறவர்களிடத்தில் தேவன் வந்து வசிப்பதாக வாக்களித்திருக்கிறார் (வெளிப்படுத்துதல் 3:20). அவர்கள் பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாறுகிறார்கள், இதனால் மகிமையுள்ள ஆவி அவர்கள் மீது தங்கியிருக்கிறது (1 கொரிந்தியர் 6:19-20).
மகிமையுள்ள ஆவி என் மீது தங்கியிருப்பதை நான் உணர்ந்து அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்