வீண் வாதங்கள்
ஒரு முட்டாள் கழுதை பிடிவாதமாகச் சொன்னது: "புல் நீல நிறமானது." புத்திசாலியான புலி வருத்தமும், கோபமும், எரிச்சலும் அடைந்து, "புல் பச்சை நிறமானது" என்று கத்தியது. பல சுற்றுக் கூச்சலுக்குப் பிறகு, விஷயம் காடுகளின் ராஜாவான சிங்கத்திற்குச் சென்றது. கழுதை அரசன் சிங்கத்திடம் சொன்னது: “ஐயா, புல் நீல நிறமானது. புலி என்னுடன் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது.” சிங்கம் ஆம், புல் நீல நிறமானது என்று ஐந்து வருட மௌனம் புலிக்கு தண்டனையாக வழங்கப்பட்டது.
புலி: "நீங்கள் என்னை தண்டித்துவிட்டீர்கள், ஆனாலும் புல் பச்சையானதுதான்."
சிங்கம் பதிலளித்தது: "உண்மை என்னவென்றால் புல் பச்சை நிறம்தான். தண்டனை புல்லின் நிறத்தைப் பற்றியது அல்ல. ஒரு புத்திசாலியான புலி முட்டாள் கழுதையுடனான வாக்குவாதத்தில் தனது நேரத்தையும் எனது பொன்னான நேரத்தையும் வீணடித்ததற்க்காக.
இத்தகைய முட்டாள்தனமான, சிறுபிள்ளைத்தனமான மற்றும் மதிகெட்ட வாதங்களைப் பற்றி வேதம் எச்சரிக்கிறது.
1) எந்த மாற்றமும் இல்லை: பன்றிகளைப் போல நடந்துகொள்பவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் முன் முத்துக்களை வைக்க வேண்டாம் என்று ஆண்டவர் இயேசு எச்சரித்தார். (மத்தேயு 7:6) முட்டாள்கள் அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் தங்கள் சொந்த கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளுக்குத் திரும்புகிறார்கள். ஒரு முட்டாள் அதன் வாந்திபண்ணினதைதி தின்னத் திரும்பும் நாய்க்கு ஒப்பிடப்படுகிறான். (நீதிமொழிகள் 26:11)
2) ஆணவ வாதங்கள்:
வாதங்களை விரும்புபவர்கள் பெருமையுடையவர்கள். முட்டாள்தனமான ஆணவ வார்த்தைகளால் தங்கள் மேன்மையை நிலைநிறுத்த முயல்கிறார்கள். (2 பேதுரு 2:18)
3) தவறான அடையாளம்:
வாதங்களில், ஞானமுள்ளவர்களும் உண்மையைப் பேசுபவர்களும் எதிர் எதிர் முனைகளில் இருக்கிறார்கள். பார்வையாளர்களைப் பொருத்தமட்டில் இருவரும் முட்டாள்கள் என்று முடிவு செய்வார்கள். "மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்." (நீதிமொழிகள் 26:4)
4) வெற்று பாத்திரங்கள்:
ஒரு பழமொழி உண்டு: “குறைகுடம் கூத்தாடும்.” காரணம், நிதர்சனம், சத்தியம் தெரியாமல் வாக்குவாதங்களின் போது அலறுவார்கள். “ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.” (நீதிமொழிகள் 29:9)
5) பயனற்ற பேச்சு:
யோபின் நண்பர்கள், யோபு சொல்வதைக் கேட்பதற்கு முன்பே, அவர் தவறு செய்தார் என்று முடிவு செய்துவிட்டார்கள். எனவே எலிப்பாஸ் சொன்னான்: "பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ? " (யோபு 15:3)
6) தவிர்க்கவும்:
“புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.” (தீத்து 3:9; 1 தீமோத்தேயு 4:7)
நான் என் நேரத்தையும் ஆற்றலையும் ஆக்கப்பூர்வமற்ற விவாதங்களில் வீணாக்குகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran