இரண்டு வகையான துக்கங்கள்

இரண்டு வகையான துக்கங்கள்:
"தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது" (2 கொரிந்தியர் 7:10). தெய்வீக கவலை மற்றும் உலக கவலை என வேதாகமத்தில், இரண்டுக்கும் உதாரணங்கள் உள்ளன.

பார்வோன் - ஒரு பிடிவாதமான கலகக்காரன்:
பார்வோன் வாதைகளைக் கண்டதும், தான் ஒரு பாவி என்று சொல்லி மனம் வருந்தினான்.  ஆனால் வாதைகள் முடிந்ததும், அவன் தனது பழைய கலக புத்திக்கு திரும்பினான் (யாத்திராகமம் 9:27). அவனுடைய மூத்த மகன் இறந்துவிட்டான்;  அறுநூறு ரதங்கள் கொண்ட தனது படையை செங்கடலில் மூழ்கடிக்கச் செய்தான்.

பிலேயாம் - இரட்டை எண்ணம் கொண்டவன்:
பிலேயாம் உண்மையான தேவனையும், இஸ்ரவேலை ஆசீர்வதிக்கவும் முடிவெடுத்தான்; ஆனாலும் மோவாபின் ராஜாவுக்கு பொல்லாத அறிவுரைகளை வழங்கி இஸ்ரவேலுக்கு எதிராக வேலை செய்தான் (எண்: 22:34)

ஆகான் - சந்தேகமான மனந்திரும்புதல்:
எரிகோ நகரத்திலிருந்து தேவனுக்கு சொந்தமானதைத் திருடியதாக ஆகான் ஒப்புக்கொண்டான்.  அவனுடைய துக்கம் தெய்வீக துக்கம் அல்ல என்பதால் அவன் தண்டிக்கப்பட்டான் மற்றும் கல்லெறிந்து கொல்லப்பட்டான் (யோசுவா 7:20).

சவுல் – நேர்மையற்ற மனந்திரும்புதல்:
அவன் ஒரு தாழ்மையான நபராகத் தொடங்கினாலும்.  ஒரு ராஜாவாக, பெருமை அவனது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.  அவன் போதகர்/தீர்க்கதரிசி போன்றோரின் பணியையும் தன்மீது ஏற்றுக்கொண்டான்.  அவன் மனந்திரும்பி சாமுவேலிடம் ஒப்புக்கொண்டான், ஆனால் அது வெறும் பாசாங்குதான் (1 சாமுவேல் 15:24).

யூதாஸ் - விரக்தியில் வருந்துதல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்ததற்காக அவன் செய்த தவறுக்கு மனந்திரும்பினான். ஆனால்,  யார் இந்த குற்றத்தைச் செய்ய அவனைத் தூண்டினார்களோ, இழுத்தார்களோ அந்த மூப்பர்களிடத்திலும் பிரதான ஆசாரியர்களிடத்திலும் போய் நின்றான் (மத்தேயு 27:4). அவனுடைய மனந்திரும்புதல் ஒரு பாசாங்குத்தனமாக இருந்தது, ஏனெனில் அவனது வருத்தம் என்னவென்றால், பணம் சம்பாதிப்பதற்கான அவனது தலைசிறந்த திட்டம் தோற்றுப்போனதே, கர்த்தராகிய இயேசு தப்பிப்பது நிறைவேறவில்லையே.

யோபு - ஒரு தெய்வீக மனந்திரும்புதல்:
அவன் நீதிமான் என்று சான்றளிக்கப்பட்டான்.  ஒரு மனிதனாக அவன் தன் வீழ்ந்த இயல்பைப் புரிந்து கொண்டான், அவனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாகப் பேசினான் (யோபு 42:5-6).

தாவீது - தாமதமான மனந்திரும்புதல்:
தாவீது பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தான், அதை மறைக்க, அவளின் கணவனும், தனது விசுவாசமுமான படை அதிகாரி உரியாவைக் கொன்றான்.  நாத்தான் தீர்க்கதரிசி கண்டித்த போது, ​​அவன் வருந்தினான் மற்றும் மன்னிப்பு கோரி ஒப்புக்கொண்டான் (2 சாமுவேல் 12:13).

ஊதாரி மைந்தன்– சரியான சரணடதைல்:
ஊதாரி மகனைப் பற்றிய உவமையில், வழிதவறுதலையும் உலகியல் தன்மையையும் தேர்ந்தெடுத்த இளைய மகன் மனந்திரும்பி வீடு திரும்புகிறான்.  அவன் தேவனிடமும் தந்தையிடமும் தன் தப்பிதங்களை, குற்றங்களை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்தான் (லூக்கா 15:18).

என்னுடைய ஆவிக்குரிய பழக்கமாக தெய்வீக துக்கமும் மனந்திரும்புதலும் உள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download