சமூக ஊடகங்களில் ட்விட்டர் ஒரு சுவாரஸ்யமான மற்றும் பிரபலமான ஒன்று. வேதாகமம் இந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமான ட்விட்டர் பற்றி ஏதேனும் தெரிவிக்கிறதா? "ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே, ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும் (பிரசங்கி 10:20). பறவைகள் என்பது ட்விட்டர். ட்விட்டர் செய்திகள் 280 எழுத்துக்குள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளன.
வரையறுக்கப்பட்ட சொற்களுக்குள் தகவல்களை பகிர்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும்? கர்த்தர் ஆபகூக்கு பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக்கடந்தோடுகிறவன் வாசிக்கும்படி பலகைகளிலே தீர்க்கமாக வரை (ஆபகூக் 2:2) என்றார். இப்போது ஆபகூக் தீர்க்கத்ததரிசி ஒரு நபர் ஓடும்போது படிக்கும்படியாகவோ அல்லது செய்தியைப் படித்துக்கொண்டே ஓடும்படியாகவோ அவர் எழுத வேண்டியிருந்தது. நாம் நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும்போது பெரிய பெரிய எழுத்துக்களுடன் விளம்பர பலகைகளைக் காண முடியும். ஒரு பயணி வேகமாகச் செல்லும் போதும் அதை படிக்கும் படியாகவும் அவற்றைப் புரிந்துக் கொள்ளும் படியாகவும் குறுகிய செய்திகளாக இருக்கும். இதைப் போல தான் ஆபகூக்கும் தேவனுடைய வார்த்தையை குறுகிய அல்லது சிறிய செய்திகளாக அதாவது விரைவாக கடப்பவர்களும் ஓடுபவர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் விளம்பர பலகையில் எழுதுவது போல் எழுத வேண்டும். இது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்.
ஆபகூக்கில் உள்ள இந்த வசனத்திற்கு மற்றொரு விளக்கம் என்னவெனில் ஒரு நபர் அது ஆணோ பெண்ணோ இந்த செய்தியைப் படித்து விட்டால் உடனடியாக செயல்பாட்டில் இறங்கி விட வேண்டும். அந்த குறும் செய்தியும் ஒரு மனிதரை உடனடியாக தங்கள் சொகுசான அல்லது அமைதியான சூழலை விட்டு எழ செய்யும், அதுமட்டுமன்றி செயல்பட நிர்பந்திக்கும். ஆபகூக் வாசகர்களை செயலற்ற பார்வையாளராக வைக்காமல் பங்களிப்பாளர்களாக மாற்ற வைக்கிறது.
இதன் சாரம்சம் என்னவெனில், நம்முடைய நற்செய்தி பணிக்கான தகவல் என்பது அல்லது சத்தியத்தை பகிர்வது என்பது ட்விட்டர் செய்திகளைப் போல இருக்க வேண்டும். அவை இரட்டை விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தங்கள் அநுதின அலுவல்கள் தொழில் மற்றும் பணியின் மத்தியிலும் கேட்கவோ அல்லது பார்க்கவோ அல்லது படிக்கவோ இயல வேண்டும். அப்படி செய்திகளைக் கேட்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அமைதியாகவோ, செயலற்றவர்களாகவோ அல்லது பொறுப்பற்றவர்களாகவோ இருக்கக்கூடாது; அதற்கு பதிலாக உடனடியாக செயல்பட, முடிவுகளை எடுக்க, நல்லதைச் செய்ய, உலகத்தை மாற்றியமைக்க மற்றும் சவாலிட வேண்டும்.
சுவிசேஷ நற்செய்தியை அறிவிக்க என்னுடைய ‘ட்விட்டர் திறனை’ உபயோகித்திருக்கேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்