தொடுதல்

‘தொட்டுப் போ’, ‘தொடர்பில் இரு’, ‘ஆழத்தை தொடு', 'உச்சத்தை தொடு', 'டச் பேஸ் ',  ‘டச் பேட்’, ‘டச் ஸ்கிரீன்’; அனைத்தும் நமக்கு நன்கு தெரிந்த சொற்கள் மற்றும் கருத்துகள்.  தொடுதல் என்பது ஒரு நபரை உணர உதவும் ஒரு உணர்வு.  டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தொடுதலின் மூலம் மின்னணு சாதனங்களை இயக்க முடிகின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்து ஊழியம் செய்த நாட்களில், ​​ஒரு பெண் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆடையின் ஓரத்தைத் தொட்டு, பன்னிரண்டு வருட பெரும்பாடு நோயில் இருந்து குணமடைந்தாள்.

1) எளிமையான தொடுதல்:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பல்வேறு இடங்களுக்குச் சென்றபோது கூட்டம் கூடியது. "திரளான ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்து அவரை நெருக்கியது" , என்று மாற்கு பதிவு செய்துள்ளார் (மாற்கு 5:24). சாதாரணமாகவோ, கூட்டம் திரண்டதாலோ, கூட்டத்தால் தள்ளப்பட்டோ அல்லது எப்படியோ பலர்  அவரைத் தொட்டனர். சிலர் அவர் மீது விழுந்தார்கள்.  ஆர்வத்தினால் சிலர் அவரைத் தொட்டிருக்கலாம்.  இந்த தொடுதலை ஒரு சடங்கு என்றும் அழைக்கலாம்.

2) மூட நம்பிக்கையின் தொடுதல்:

கூட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் ஒரு பெண் இருந்தாள்.  அவள் தன் சுகவீனத்திற்காக நிறைய செலவு செய்திருந்தாள், அவளை பார்வையிட்ட மருத்துவர்கள் யாராலும் அவளை குணப்படுத்த முடியவில்லை.  உண்மையைச் சொல்ல போனால் அவளின்  சிகிச்சைக்கு பின்னர்தான் அவளின் நிலை மோசமானது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, ​​தான் குணமடைவேன் என்ற நம்பிக்கை கிடைத்தது.  எனவே தான் அவள் அக்கூட்டத்தில் இருந்தாள்.  அவள் மனதில் ஒரு எண்ணம் இருந்தது: "நான் அவருடைய ஆடையை மட்டும் தொட்டாலே நான் குணமடைவேன் " என்பதாக  (மத்தேயு 9:21).  அவளுக்கு ஒரு வகையான ‘மூடநம்பிக்கையும்’ இருந்தது, அது ஆடையின் சணல் (அநேகமாக வசனம் அதில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கலாம்) அவளை குணமாக்கும்.  தொட்டாள்,  உடனடியாக குணமடைந்தாள்.  இப்போது இயேசு ‘என்னைத் தொட்டது யார்’ என்று கேட்கிறார்.  அந்த கேள்வியால் சீடர்கள் வியந்தனர்.  ஏனெனில்; “அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி, திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே", என்றார்கள்

(மாற்கு 5:31). அந்தப் பெண்ணைக் குணமாக்கும்போது அவரை விட்டு ஒரு வல்லமை கடந்து சென்றதை ஆண்டவர் உணர்ந்தார். 

3) புனிதமான தொடுதல்:

அவள் தயக்கத்துடன் முன் வந்து, அவள் தானாகவே அவரை தொட்டதாக கூறினாள்.  அவர் அவளைப் பார்த்து: "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார் (லூக்கா 8:48). அவளுடைய குணப்படுத்துதல் ‘தொடுதலால்’ அல்ல, அவளுடைய விசுவாசத்தினால் என்று இயேசுகிறிஸ்து வலியுறுத்தினார்.  அவளுக்கு பலவீனம் இருந்தபோதிலும், ஆண்டவர் அவளுடைய விசுவாசத்தை உணர்ந்து அவளை குணப்படுத்தினார்.  நம்பிக்கையான தொடுதல் மறுசீரமைப்பிற்கான வல்லமையை அளிக்கிறது (லூக்கா 8:46).  விசுவாசமற்ற தொடுதல், குணமளிக்காது.

விசுவாசத்தின் தொடுதலை நான் அனுபவித்திருக்கிறேனா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download