கொடுக்கலாமா அல்லது கொடுக்க வேண்டாமா?

நாம் ‘தசமபாகம்’ கொடுக்க வேண்டுமா? என்று பலர் கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்வியை முன்வைப்பவர்கள் போதகர்களும் விசுவாசிகளும் தான். ஒரு சிலருக்கு, இது பழைய ஏற்பாட்டு பிரமாணம், ஆதலால் அதைக் கற்பிக்கவோ வலியுறுத்தவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ தேவையில்லை என நினைக்கிறார்கள்.

ஆபிரகாம்:

மோசேயின் நியாயப்பிரமாணத்தால் ‘தசமபாகம்’ கட்டளையிடப்பட்டது அல்லது நியமிக்கப்பட்டது என்ற தவறான அனுமானம் உள்ளது.  உண்மையில், இது அதற்கு முன்பே நடந்ததுள்ளது.  ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு  தசமபாகம் கொடுத்தான். மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் (எபிரேயர் 7: 9, 10).

யாக்கோபு:

ஏசாவிடமிருந்து தப்பித்து லாபானின் இடத்திற்குச் செல்லும் வழியில் யாக்கோபு ஒரு இரவு வனாந்தரத்தில் தங்கியிருந்தபோது; அவன் ஒரு கனவு கண்டான்.  பின்னர், தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லி அந்த இடத்தில் வைத்து ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டான் (ஆதியாகமம் 28:22). இது இன்னும் ஒரு சட்டமாக இயற்றப்படவில்லை.

பிரமாணம்:

பிதாவாகிய தேவன் லேவிக்கு அவன் சகோதரரோடே எந்த பங்கும் சுதந்தரமும் இல்லை என்றும் அவர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்வதின் மூலம் தேவபிள்ளைகள் அளிக்கும் தசமபாகக் காணிக்கையே அவர்களின் வெகுமதி என்று கட்டளையிட்டுள்ளார். தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம் (உபாகமம் 10:9). பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுக்கு தசமபாகம் அளித்தது மட்டுமன்றி, இஸ்ரவேல் தேசத்து மக்கள் அரசாங்கத்திற்கும் ஏழைகளுக்கும் தசமபாகம் கொடுத்திருக்கிறார்கள் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.  லேவியர்களும் மக்களிடமிருந்து பெற்ற தசமபாகத்திலிருந்து தேவனுக்கு தங்கள் தசமபாகத்தை செலுத்த வேண்டும் (எண்ணாகமம் 18:26).

நீதி:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீதியைப் பற்றி கற்பித்தார்.  யூத மதத்தின் மதத் தலைவர்களை விட தம்முடைய சீஷர்கள் நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். எனவே சீஷர்களிடம்; 'வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'

(மத்தேயு 5:20) என்று கூறினார். அது என்னவென்றால் இயேசுவின் சீஷர்கள் பரிசேயர்களைக் காட்டிலும் கொடுப்பதில் 'உற்சாகமாக கொடுப்பவர்களாக' அதாவது

 பத்து சதவீதத்திற்கு பதிலாக பதினொரு சதவீதமாக கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

கொடுப்பது என்பது நாம் தேவனுக்கு நமக்குச் செய்ததற்காக நன்றி தெரிவிப்பதைக் குறிக்கும்.  தாராளமாக இருப்பது சீஷர்களுக்கு புதிய இயல்பு. ஆனாலும் மகிழ்ச்சியுடன் கொடுப்பவராக இருப்பதன் மூலம் பரிசேயர்களின் நீதியை விட சிறப்பாக செய்தவர்களாகிறோம் (II கொரிந்தியர் 9: 6-7).

நான் தாராளமாகவும் உற்சாகமாகவும் கொடுப்பவரா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download