ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்த ஒரு பொறியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பத்து மாத மகளை பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி தோல்வியடைந்தது, மேலும் ஒரு குழு உறுப்பினர் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார், ட்ரோல் செய்யப்பட்டார் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அணி உறுப்பினருக்கு தனது அணி 200 சதவீதம் ஆதரவு தெரிவிப்பதாக விராட் கூறினார் (நவம்பர் 11, 2021 என்டிடிவி செய்தி). "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று" (மத்தேயு 5:28).
1) எண்ணங்கள்:
ஒரு படித்த பொறியாளர் மனதில் வெறுப்பு நிறைந்திருக்கலாம். பொதுவாக ஒரு கருத்து உண்டு, காதலுக்கு கண்ணில்லை என்பதாக; ஆனால் உண்மையில் வெறுப்புக்குதான் கண்ணில்லை எப்படியென்றால் எண்ணங்கள் உன்னதமானவையாக அல்லது தகுதியானவையாக அல்லது நல்லவையாக இல்லாதபோது. மாறாக, அது பொல்லாதது மற்றும் பயனற்றது.
2) நோக்கங்கள்:
இது நோவாவின் நாட்களைப் போன்றது: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்று கர்த்தர் கண்டார்” (ஆதியாகமம் 6:5).
3) ஊக்குவித்தல்:
இந்த இளைஞனின் உந்துதல் வெறுப்பாக இருந்தது. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவதற்குப் பதிலாக, மற்றவர்களை தீய நோக்கத்துடனும், குற்றவியல் துன்மார்க்கத்துடனும், இயற்கைக்கு மாறான மிருகத்தனத்துடனும் வெறுப்பது என்பது தவறானதாகும் (மாற்கு 12:31).
4) வெளிப்பாடு (தொடர்பு):
அந்த இளைஞனுக்கு தனது தீய எண்ணம் அல்லது வெற்று அச்சுறுத்தல் பற்றிய செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட தைரியம் கொண்டிருந்தான். அது வைரலானது/பிரபலமானது. துரதிர்ஷ்டவசமாக, இன்றைய சமூக ஊடகங்களில் இந்த நபரைப் பின்தொடர்பவர்கள் மேலும் அவன் செய்தியை லைக் செய்து இன்னும் பலருக்கு அனுப்பி இருப்பார்கள், செய்தி தீயாய் பரவியது எனலாம்.
5) செயல்படுத்தல்:
இந்த அச்சுறுத்தல் அல்லது உள்நோக்கம் கொண்ட செய்தி பைத்தியக்காரத்தனமான நபர்களால் மேற்கொள்ளப்படலாம். ஆனால் இந்தச் செய்தியானது, நல்ல சிந்தித்து தண்டனை பயமின்றி வெளிப்படுத்தப்பட்டது.
தேவ பயம், சத்திய அறிவு, தேவன் அல்லது பிறர் மீது அன்பு இல்லாத போது; அப்படியானவர்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களில் தோன்றுவார்கள், அவர்கள் தேசத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அழிப்பார்கள். தேவபயம், அன்பு, உண்மை, மனந்திரும்புதல், நீதி மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை சத்தமாகவும் தைரியமாகவும் திருச்சபை வெளிப்படுத்தட்டும்.
நான் என் தீய எண்ணங்களை நினைத்து வருந்துகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran