1. மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்கள்
லூக்கா 2:8-12,15-17 மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரி யிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்... மேய்ப்பர்கள் தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
2. நட்சத்திரத்தைக் கண்ட சாஸ்திரிகள்
மத்தேயு 2:10(1-12) அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
3. உன்னதத்தில் பாடிய தேவதூதர்கள்
லூக்கா 2:13,14 உடனே பரம சேனையின் திரள் அந்த தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
4. இரட்சணியத்தைக் கண்ட சிமியோன்
லூக்கா 2:29-35 சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார்... அவன் இயேசுவை தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து: உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
5. மீட்புக்காக எதிர்ப்பார்த்திருந்த அன்னாள்
லூக்கா 2:36-38 84 வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழந்து எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்
Author: Rev. M. Arul Doss