மத்தேயு 2:1-12

2:1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2:2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
2:3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
2:4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
2:5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
2:6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
2:7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
2:8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
2:9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
2:10 அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
2:11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
2:12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.




Related Topics



குழந்தைகள் படுகொலை-Rev. Dr. J .N. மனோகரன்

குழந்தைகள் படுகொலை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு; பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகளை (மதிப்பீடு 6 முதல் 144000 வரை) கொன்று...
Read More




யூதாவின் செங்கோல்-Rev. Dr. J .N. மனோகரன்

மேசியா பெண்ணின் வித்தாக வருவார் என்று ஏதேன் தோட்டத்தில் முதல் மனித தம்பதிகளுக்கு ஒரு மீட்பரை தேவன் வாக்குத்தத்தம் அளித்தார் (ஆதியாகமம் 3:15)....
Read More



ஏரோது , ராஜாவின் , நாட்களில் , யூதேயாவிலுள்ள , பெத்லகேமிலே , இயேசு , பிறந்தபொழுது , கிழக்கிலிருந்து , சாஸ்திரிகள் , எருசலேமுக்கு , வந்து , , மத்தேயு 2:1 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 2 TAMIL BIBLE , மத்தேயு 2 IN TAMIL , மத்தேயு 2 1 IN TAMIL , மத்தேயு 2 1 IN TAMIL BIBLE , மத்தேயு 2 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 2 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 2 TAMIL BIBLE , Matthew 2 IN TAMIL , Matthew 2 1 IN TAMIL , Matthew 2 1 IN TAMIL BIBLE . Matthew 2 IN ENGLISH ,