1. இருதயத்தை நிரப்பின பெசலெயேல்
(சகலவித வேலைகளைச் செய்ய ஞானத்தினால்)
யாத்திராகமம் 35:30-35 கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து... அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார் விசித்திர, விநோதமான வேலைகளை செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்.
2. இருதயத்தை நேராக்கின யோசபாத்
(தேவனை தேடுவதற்கு)
2நாளாகமம் 19:1-11 ஞானதிருஷ்டிக்காரன் யெகூ யோசபாத்தை நோக்கி: நீர் விக்கிரக தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நோக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்தில் காணப்பட்டது உண்டு என்றான்.
3. இருதயத்தை பக்குவப்படுத்தின எஸ்றா
(கர்த்தருடைய வேதத்தை ஆராயும்படி)
எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் உபதேசிக் கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
4. இருதயத்தை ஊற்றிய அன்னாள்
(குழந்தை பாக்கியம் பெற)
1சாமுவேல் 1:15 அன்னாள்: என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
சங்கீதம் 62:8 அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
புலம்பல் 2:19 ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தை ஊற்றிவிடு
5. இருதயத்தை திறந்த லீதியாள்
(பவுல் வார்த்தைகளை கவனிக்கும்படி)
அப்போஸ்தலர் 16:14 தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும் படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
Author: Rev. M. Arul Doss