நாடும், வீடும் ஒழுங்கும் கிரமுமாக இருப்பதற்கு சட்டம் அவசியம், சட்டம் என்பது மனிதர்களை அழிப்பதற்காக அல்ல அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே கொடுக்கப்படுகிறது, சட்டத்தின் மூலமாத்தான் எது தவறு, எது சரி என நாம் அறிந்து கொள்ள இயலும், வேதாகமத்தில் வரும் சட்டதிட்டங்களுக்கு இன்னொரு பெயர் "நியாயப்பிரமாணம்" என்பதாகும்
அப்பிரமாணாம் பழைய ஏற்பாட்டில் மோசேயின் மூலமாக அம்மக்களை வழி நடத்துவதற்காக அன்று கொடுக்கப்பட்டது
அன்றும் இன்றும் என்றும் அச் சட்டதிட்டங்களின்படி யாராலும் நடக்க முடியாது அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக எழுதியிருக்கிறார் "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை"(Rom3:10)
அச்சட்ட திட்டத்தின் படி நடக்க முடியாத மனிதனுக்கு பெயர்தான் "பாவி" என்பதாகும்
இன்னொரு இடத்தில் எல்லோரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகி எனவும் பவுல் குறிப்பிடுகிறார்
ஆகவே அவரின் கூற்றுப்படி
கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத எவரும் பாவிகளே பலியினால் அல்ல கிருபையினால் கிடைக்கின்ற மீட்பு நமக்கு கிடைத்த சிலாக்கியம்
பாவத்தைப் போக்க பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆலயத்திலே ஆடு, மாடுகளை பலி செலுத்தி வந்த முறை இருந்தது
இன்றோ கிறிஸ்து இயேசு சிலுவையில் நமக்காக தன்னை பலியாக கொடுத்ததின் மூலம் அப்பலிகளுக்கும், வழிபாட்டு முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது
இன்று நாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாக, விடுதலை யாக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் இது நமக்கு கிடைத்திருக்கிற எவ்வளவு பெரிய பாக்கியம்
அன்று பாவப்பிரமாணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்தபடியினால் நியாயப்பிரமாணத்தின் சட்டதிட்ட வாழ்க்கையை யாராலும் வாழ முடியவில்லை
ஆகவே அன்று ஆசாரியர்களும், மக்களும் ஆலயத்திலே தங்களுக்காக பலி செலுத்த வேண்டிய நிலை இருந்தது
இன்றோ நாம் இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்திற்குள் நாம் கிருபையினால், விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்
நியாயப்பிரமாணம் எனும் சட்ட திட்டத்தினால் வரும் சாபத்திலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை விடுதலை யாக்கிவிட்டார்
அவரின் அன்பின் வலிமையைக் கொண்டு நாம் கிருபையினால் குற்ற மனசாட்சியின்றி நீதிமானாய் வாழ்வதற்கு திட நம்பிக்கையும், பெலனையும் கொடுத்திருக்கிறார்
சிந்திப்போம் நாம் இன்று நியாப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டு அன்பின் பிரமாணத்திற்க்குள்ளாய் இருக்கிறோம்
இந்த இரட்சிப்பு நம்முடைய சுய கிரியைகளில் உண்டானதல்ல இறைவனின் இர(க்க)த்தத்தினாலே உண்டானது
அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் எவரும் நித்திய மீட்பின் பங்காளர்களாக இருக்கிறோம்
நமக்காய் ஜீவனைக் கொடுத்து மீட்ட அவரை என்னவென்று சொல்வது வாழ்நாளெல்லாம் அவரை வாழ்த்திக் கொண்டே இருப்போம் ஆராதிப்போம்
(Gal 2:16, Rom 3:20, Rom 6:14, Gal 3:13,Epe 2:8,9)
கவிமுகில் சுரேஷ்
தர்மபுரி