இயல்பாகவே மனிதர்கள் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களை குறித்து ஆராயவும் சிந்திக்கவும் விரும்புவார்கள். எதிர்காலம் என்பது நம் அனைவருக்கும் ஒரு மர்மமான விஷயம்,எனினும், வேதம் நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முந்தைய நாட்களை அடையாளம் காண உதவும் பொதுவான தகவல்களைத் தருகிறது. நடக்கப்போகும் விஷயங்களின் முழுமையான பட்டியலை பவுல் கொடுக்கிறார். ஒரு தினசரி செய்தித்தாளை வைத்து பவுல் பட்டியலிடும் ஒவ்வொரு பாவத்தையும் எளிதாக வகைப்படுத்த முடியும்.
“மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்,நன்றியறியாதவர்களாயும்,பரிசுத்தமில்லாதவர்களாயும்,சுபாவ அன்பில்லாதவர்களாயும்,இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்;இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்." (II தீமோத்தேயு 3: 1-9)
1. தற்பிரியர்:
செல்ஃபி' (SelfieCulture) கலாச்சாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். போலந்து நாட்டில் ஒரு குன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற தம்பதியினர் கீழே விழுந்து இறந்து போனார்ள்.அமெரிக்காவில்,ஒரு பெண் தனதுசெல்ஃபியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அடுத்த சில நொடிகளில் விபத்தில் உயிரிழந்தார்.இந்த புதிய தலைமுறை தனது சொந்த உடலை ஆராதிக்கும் தலைமுறையாகும்.அவர்களின் சொந்த உடல் அவர்களின் விக்கிரகமாக மாறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒப்பனை பொருட்கள், ஒப்பனை அறுவை சிகிச்சை, ஒப்பனை பல் மருத்துவம், பச்சைகுத்தும் கூடங்கள்,அழகு நிலையங்கள் போன்றவை இந்த தலைமுறையின் ஆவேசத்தை காட்டுகிறது.
இந்த தலைமுறை 'நான் மட்டும்’ (Me only) தலைமுறை என்றும் அழைக்கப்படுகிறது. இன்று பெரும்பான்மையானவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் சிறு குடும்பங்களில் பிறந்தவர்கள். பெற்றோர்கள் தங்கள் அன்பையும், பரிசுகளையும் அவர்கள் மீது பொழிகிறார்கள். அவர்கள் தங்கள் மீது வெறித்தனமாகவும் மற்றும் அனைத்து விஷயங்கள் மீதும் பேராசை உடையவர்கள். அவர்களால் எதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.
2. பணப்பிரியர்:
பணம் முக்கியத்துவம் வாய்ந்தது, வாழ்வின் நோக்கம், மனிதனின் கடைத்தொகை அனைத்து மதிப்புகளும் பணத்திற்கு அடிபணிந்தவை. சாத்தான் மிகவும் புத்திசாலி, அவன் பணத்தை மாற்று பொருளாக நிலைநிறுத்தினான் அல்லது அவன் பணத்தில் தன்னை வெளிப்படுத்தினான். எனவே, மக்கள் சாத்தானை பணத்தின் வடிவில் வழிபடுகிறார்கள். கர்த்தர் அன்பினால் உருவகப்படுத்தப்படுகிறார். மக்கள் பணத்தை விரும்புகிறார்கள், பணத்தின் மீது ஆசை படுகிறார்கள் மற்றும் பணத்தில் வாழ்க்கையின் நோக்கத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரையும் மக்களையும் நேசிப்பது மற்றும் பணத்தையும் பொருட்களையும் பயன்படுத்துவதையும் வேதாகம கோட்பாடு தலைகீழாக மாற்றுகிறது. பணம் மற்றும் கருவிகள் மக்களை விட முக்கியமாக கருதப்படுகிறது. சாலை விபத்தில், (SUV)சொகுசு கார்களின் வெறித்தனமான உரிமையாளர்கள் அதிக வாகன நெரிசலுக்கு மத்தியில் தங்கள் வாகனங்களில் உரசியவர்களைக் கொலை செய்கிறார்கள்.
3. அகந்தையுள்ளவர்கள்:
உடைமைகளின் பெருமை, பதவிகளின் பெருமை, கவுரவத்தின் பெருமை, அதிகாரத்தின் பெருமை, வழிமுறையின் அடிப்படையில் பெருமை, சாதி, குலம் மற்றும் வர்க்கத்தின் பெருமை. ‘மனத்தாழ்மை’ இன்று ஒரு கெட்ட வார்த்தையாக கருதப்படுகிறது. தாழ்மையான மக்கள் கேலி செய்யப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பெருமை - வெறுப்பையும், வன்முறையையும் உருவாக்குகிறது. குடும்ப உறவுகள் உட்பட அனைத்து உறவுகளையும் பெருமை சீர்குலைக்கிறது. பெருமை மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் முயல்கிறது. இது சண்டைகள் மற்றும் போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது.
4. வீம்புக்காரர்:
பொதுவிடங்களில் சுய முக்கியத்துவம் ஒரு பொருட்டாகிவிட்டது. அனைவரும் தங்கள் கார்களின்மேல் சிவப்பு விளக்கு வைத்திருக்க விரும்புகிறார்கள், அவர்களுடன் கருப்பு பூனைபடைகளும், அவர்களுக்கு சேவை செய்ய ஊழியர்களும் பிரத்தியேக சலுகைகளையும் கோருகிறார்கள். மக்கள் தங்கள் வாழ்வில் மரியாதை கொடுப்பதில்லை ஆனால் அனைவரிடமும் மரியாதை கோருகிறார்கள். எளிதாக, ஒரு நெடுங்கதை அல்லது திரைப்படத்தால் ஒரு சமூகம் பாதிக்கப்படுகிறது, அந்த உணர்வு வன்முறைக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தலைவியின் கணவரை அவமரியாதை செய்ததற்காக ஒரு வாலிபரின் இடது கை வெட்டப்பட்டது.
5. தூஷிக்கிறவர்கள்:
குழந்தைகள் தங்கள் வீடுகளில் கூட வாய்மொழி, உடல் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். பள்ளிகள் மற்றும் பூங்காக்கள் அல்லது விளையாட்டு மைதானங்கள் போன்ற பொது இடங்கள் இனி பாதுகாப்பானவை அல்ல. ரயில், பேருந்து மற்றும் விமானங்களில் பயணம் செய்வது கூட பெண்களுக்கு ஒரு கனவாகிவிட்டது. குடும்பத்தில் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் கதை. மேலாளர்கள் தங்கள் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். சமூக ஊடக பதிவுகள் மிகவும் தவறானவைகளாக உள்ளது. எந்தவொரு கருத்து வேறுபாடும் வெட்கக்கேடான துஷ்பிரயோகத்தால் எதிர்க்கப்படுகிறது.
6. கீழ்ப்படியாதவர்கள்:
கீழ்ப்படிதல் பலவீனத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அனைத்து அதிகாரங்களுக்கும் எதிரான கிளர்ச்சி இன்று தெளிவாக தெரிகிறது. பெற்றோர்கள் மதிக்கப்படுவதில்லை அல்லது கவனிக்கப்படுவதில்லை. குழந்தைகள் பெற்றோரை கவனித்துக்கொள்ள அரசு சட்டம் இயற்ற வேண்டும். ஆசிரியர்கள் கேலி, அவமானம் செய்யப்பட்டு தாக்கப்படுகிறார்கள். சதுரங்கப் பலகையில் சிப்பாய்கள் போன்று காவல்துறையினர் பார்க்கப்படுகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தை உருவாக்குபவர்கள் கோமாளிகள் மற்றும் குரங்குகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
7. நன்றியறியாதவர்கள்:
நன்றியுணர்வு என்பது காணாமல் போன நல்லொழுக்கம். 'நன்றி' என்று சொல்வது வெட்கக்கேடானதாக கருதப்படுகிறது. இது சாதி அமைப்பில் வேர்களைக் கொண்ட கடமை, மனநிலை. கீழ் ஜாதியினர் துணி துவைப்பது அல்லது முடி வெட்டுவது போன்ற சில கடமைகளை செய்ய கடமைப்பட்டுள்ளனர். அந்த சேவைக்காக, உயர் சாதியினர் 'நன்றி' சொல்லக் கூட கடமைப்படவில்லை. சமீபத்தில், ஒரு நண்பர் டிக்கெட் வழங்கியதற்காக ரயில்வே முன்பதிவு எழுத்தருக்கு நன்றி கூறினார். அங்கு காத்திருந்த ஒரு நபர் என் நண்பருக்கு ரயில்வே எழுத்தர், அரசாங்கத்திடமிருந்து ஊதியம் பெறுவதால், நன்றி தெரிவிக்க தேவையில்லை என்று கடிந்துகொன்டார்.
8. பரிசுத்தமில்லாதவர்:
இயற்கைக்கு மாறான, தகுதியற்ற, சட்டவிரோதமான விஷயங்கள் நவீன மற்றும் மாற்று வாழ்க்கைமுறையாகக் கருதப்படுகின்றன. ஒரு திரைப்படத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தன் கணவன் அக்கம் பக்கத்தில் சிறுவனாக மறுபிறவி எடுத்ததாகவும், அந்த மைனர் பையனுடன் உடலுறவில் ஈடுபடுகிறாள். இது போன்ற புனிதமற்ற சிந்தனை மக்களால் ரசிக்கப்படுகிறது மற்றும் எழுத்தாளர்கள், பாடல் இசையமைப்பாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட கலைஞர்களால் உருவாக்கப்படுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண சூழலில் பாலியல் புனிதமானது மற்றும் பரிசுத்தமானது. இருப்பினும், பாலியல் உறவானது ஒரு விற்பனை பொருளாகிவிட்டது, 'ஹூக்-அப்' கலாச்சாரத்தில் வெறும் மனநிறைவுக்கான பொருளாகிவிட்டது. நன்மைகளுக்கான நண்பர்கள் (friends for benefits) என்பது புனிதமில்லாத சகவாசமாகும், இது ஊடகங்களால் மரியாதைக்குரியதாக சித்தறிக்கப்படுகிறது.
9. சுபாவ அன்பில்லாதவர்கள்:
மக்கள் இதயமற்றவர்களாக மாறிவிட்டனர். ஒரு தாய் தன் குழந்தையை எப்படி மறக்க முடியும்? கருக்கலைப்பு ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது. பிறக்காத அப்பாவி குழந்தையின் இரத்தம் சிந்துவது குற்றமாக கருதப்படவில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை கைவிடுகிறார்கள். விவாகரத்தில் முடிவடையும் வாழ்க்கைத் துணை மீது அவர்களுக்குள்ள வெறுப்பு அவர்களின் குழந்தைகளின் மீதான அன்பை விட அதிகமாக உள்ளது. பிச்சைக்கார மாஃபியா குழந்தைகளை ஊனப்படுத்தப்படுகின்றனர். புதையலுக்காக, குழந்தை பலி செய்யப்படுகிறது. அற்ப பண ஆதாயத்திற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.
10. இணங்காதவர்கள்:
மக்கள் திருப்தி அடையவதில்லை. வரதட்சணைப் பேய்களை சமாதானப்படுத்த இயலவில்லை. கணவர் 'கடவுள்களை' சமாதானப்படுத்தவோ அல்லது மாமியாரை சமாதானப்படுத்தவோ முடியாத நிலையில், மரணம் ஒன்றே வழி என்று ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் இருந்து செய்திகள் வருகின்றன. போதிய வரதட்சணை கொண்டுவராததற்காக எத்தனை பெண்கள் இறக்கிறார்கள்? தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் திருப்தி இல்லை. அவர்கள் மாதம் ரூ. 50 அதிகம் கிடைத்தால் விரைவாக வேறு வேலைக்கு மாறுகின்றனர். வணிகர்கள் தங்கள் லாபத்தில் திருப்தி அடையவில்லை, செல்வத்தைப் பெறுவதற்கு அவர்கள் நியாயமான அல்லது தவறான; சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான வழிகளைத் தேடுகிறார்கள்.
11. அவதூறு செய்கிறவர்கள்:
பொய்யான குற்றச்சாட்டுகள், வதந்திகள் மற்றும் அவதூறுகள் மிகவும் இயல்பானவையாகிவிட்டன. உண்மையில் இது சமூக ஊடகங்களால் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நடத்தை(Character) படுகொலை என்பது பலரின் அன்றாட வழக்கம். தங்கள் சொந்த மனைவி அல்லது அறிமுகமானவர்களின் உருவமாற்ற (morphing) படங்களுடன் முகநூல் பதிவுகள் மனிதர்களின் ஊழல் தன்மையை விளக்குகிறது. பிரபலங்கள் பற்றிய வதந்திகள் பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வழக்கமாக உள்ளன. மக்கள் அதைப் படித்து மகிழ்கிறார்கள்.
12. இச்சையடக்கமில்லாதவர்கள்:
தடை அல்லது சுய கட்டுப்பாடு இல்லை. மக்கள் மிகவும் ஆக்ரோஷமாக மாறிவிட்டனர். துன்புறுத்துதலால் பெண்களுக்கு தினசரி ஆபத்து உள்ளது. ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு இல்லை. வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்திற்காக மற்றவர்களைத் தாக்குவது தினசரி செய்தியாகிவிட்டது. வரிசையில் பின்தொடர ஒருவரை கோரியதற்காக; அல்லது பானம் வழங்காததற்ககோரியதற்காக அல்லது மாணவர்கள் நியாயமற்ற வழிமுறைகளை பின்பற்றவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்க்காக துப்பாக்கியால் சுடுதல் போன்றவை.
13. கொடுமையுள்ளவர்கள்:
மக்கள் மற்றவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறார்கள். வீட்டு வன்முறையில் கொடூரம், வேலைக்காரர்களைத் தாக்குவது, பொது ஊழியர்களைத் தாக்குவது போன்றவை தினசரி செய்திகள். ஒரு நோயாளி இறந்தால் மருத்துவமனைகள் சூறையாடப்படுகின்றன, மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள் மற்றும் செவிலியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டிகள் கூட ரசிகர்களின் பார்வையாளர்களிடையே கொடூரத்தை வெளிப்படுத்தும். கலவரம் மற்றும் பயங்கரவாதம் மனிதர்களுக்குள் இருக்கும் மிக மோசமான கொடூரத்தை வெளிப்படுத்துகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ராகிங் செய்வது கொடுமையான செய்தி. கவுரவக் கொலை மற்றொரு திகில் கதை. ஒரு பத்திரிகையாளரின் தலை துண்டிக்கப்படுவது கொடூரத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு.
14. நல்லதை பகைக்கிறவர்கள்:
தீய மக்கள் தீமையை அங்கீகரிக்கிறார்கள். வெறுப்பு தேசபக்தி என விளக்கப்படுகிறது. பாரபட்சம் குடும்பம் சார்ந்த நபராக கொண்டாடப்படுகிறது. ஊழல் ஒரு சலுகையாக கருதப்படுகிறது. மிகைப்படுத்தல், தவறான பிரச்சாரம், சாதாரணமாக அங்கீகரிக்கப்படுகிறது. தீய விஷயங்கள் கூட நல்லவை என்று முத்திரை குத்தப்படுகின்றன. குற்றங்கள், பாவங்கள், தீய செயல்கள் தங்களால் செய்யப்பட்டால் நியாயமானவை ஆனால் மற்றவர்கள் செய்தால் கண்டிக்கப்படுகிறது. சில தீமைகளை அங்கீகரிப்பதன் மூலம், மக்கள் நல்லதை விரும்புவதில்லை.
15. துரோகிகள்:
சமுதாயத்தில் நம்பிக்கை இல்லை. ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன. உத்தரவாத பொருட்கள் பெயருக்காக மட்டுமே உள்ளன. விளம்பரங்கள் பொறிகளாக உள்ளன. இலாபத்திற்காக சமையல் எண்ணெயில், உணவில் கலப்படம் பொதுவானதாக உள்ளது. விரைவான லாபம் ஈட்ட கோழிப் பண்ணைகளில் ஆன்டி-பயோடிக் கொடுக்கப்படுகிறது. திருமணத்திற்குள், உடன்பிறப்புகள், உறவினர்கள் மற்றும் பொது சேவையில் துரோகம் என்பது நாளுக்கு நாள் நடக்கிறது.
16. துணிகரமுள்ளவர்கள்:
மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். இளைஞர்களுக்கு பொருளின் விலை தெரியும், ஆனால் மதிப்பு அல்லது செய்விலை தெரியாது. உணவு உள்ளிட்ட பொருட்களின் விரயம் மிகவும் பொதுவானதாக உள்ளது விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிபூர்வமான பதில் அளித்தல் சமூகத்தில் தெளிவாகத் தெரிகிறது. பொறுப்பற்ற இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். முந்தைய தலைமுறையினர் நல்லவர்களாக இருப்பதை மதித்தனர். இளைய தலைமுறை சுதந்திரத்தை மதிக்கிறது, இது இழிவடைந்து பொறுப்பற்ற தன்மையை உருவாக்கும்.
17. இறுமாப்புள்ளவர்கள்:
இது ஆணவத்திற்கு ஒத்ததாகும். மக்கள் தாங்கள் தகுதியானவர்கள் மற்றும் சில விஷயங்களுக்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று கருதுகின்றனர். ஒரு (SUV) சொகுசு கார் உரிமையாளர் சுங்கச்சாவடி பணியாளரை சுங்கப்பணம் கேட்டதற்கு சுட்டுக்கொன்றார். உணவில் போதுமான உப்பு போடாததற்காக ஒரு கணவன் மனைவியைக் கொன்றான். இவைகளே இறுமாப்புள்ள மக்களின் உதாரணங்கள்.
18. தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்:
பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை முன்னுரிமையில் உள்ளது. ஐபிஎல், ரியாலிட்டி ஷோக்கள், பிக் பாஸ் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு பலர் முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்கள் இவற்றில் வெறி கொண்டுள்ளனர், கடவுளைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை. அவர்களின் கணக்கில், நடைமுறை நோக்கங்களுக்காக கடவுள் இல்லை. தகவல் சகாப்தம் பொழுதுபோக்கு சகாப்தமாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து உபகரணங்களும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து வருகின்றன.
19.தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்:
போலி ஆன்மிகம் இன்று உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது. மதத்தின் வெளிப்புற நடைமுறைகள் குற்றமனசாட்சி இல்லாமல் பாராட்டப்படுகின்றன. ஒரு தூய சைவ கணவன் தன் மனைவியின் கொலைகாரன். வரிகளைத் தவிர்ப்பது, கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பது, பின்னர் மதத் தலங்களில் அநாமதேயமாக பெரிய அளவில் நன்கொடை அளிப்பது மெய்ந்நிகழ்வு. இந்த உலகத்திலும் வரவிருக்கும் உலகிலும் தங்களுக்கு நன்மை செய்ய கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
20.பாவங்களால் சுமை மற்றும் பல்வேறு உணர்வுகளால் வழிதவறிய பலவீனமான பெண்களைப் பிடிப்பவர்கள்:
பல இயக்கங்களில் இந்த கலாச்சாரப் போக்கு காணப்படுகிறது. இந்த மத இயக்கங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன ஆனால் அதிகாரம் அளிப்பதில்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மதத் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஏமாறும் பெண்களை மூளை சலவை செய்து, அவர்களை சிறைபிடித்து, தாங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய நிர்பந்திக்கிறார்கள்.
21.எப்பொழுதும் கற்று கொண்டிருந்தும் சத்தியத்தின் அறிவை அடைய முடியாத நிலை:
கீழ்ப்படிதலுக்கு வேண்டிய உண்மையை அறிய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் ஆர்வத்திற்காக அறிய விரும்புகிறார்கள், ஆனால் மனம்திரும்ப அல்ல. அவர்கள் தங்கள் பாவமான வாழ்க்கை முறைக்கு வசதியானதை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். உண்மை காயப்படுத்துவதால் அவர்கள் அதை எதிர்ப்பார்கள். எகிப்திய மந்திரவாதிகள் யந்நேயும் யம்பிரேயும், மோசேயை எதிர்த்தது போல, இந்த மனிதர்களும் சத்தியத்தை எதிர்க்கிறார்கள்.
22. கெட்டுப்போன மனம்:
இந்த மக்களின் மனம் தூய்மையானதும் நல்லதும் புனிதமானதும் அல்ல. அது கெட்டுப்போய்விட்டது, எனவே அவர்களின் தேர்வுகள், முடிவுகள் மற்றும் செயல்களும் கெட்டுப்போனது. மனம் வளைந்து நெளிந்து உள்ளது. அவர்களின் எண்ணங்கள், காரணங்கள் மற்றும் வாதங்கள் ஊழல் நிறைந்தவை. அவர்களின் நினைவு எதிர்மறை எண்ணங்கள் மற்றும் அனுபவங்களால் நிரம்பியுள்ளது ஆனால் நல்லவற்றை எளிதாக மறந்துவிடுகிறது.
23. விசுவாசத்தில் தகுதியற்றவர்கள்:
தேவன் இருக்கிறார் என்றும் அவரிடம் வருபவர்களுக்கு பலன் அளிக்கப்படுகிறது என்றும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. (எபிரெயர் 11: 6) எனவே, அவர்கள் தேவனிடம் வருவதற்கும் அவருடைய இரக்கத்தைப் பெறுவதற்கும் தகுதியற்றவர்கள். ஏனென்றால் இவை அனைத்தையும் பாவங்களாக அவர்கள் கருதவில்லை அதனால் அவர்கள் தகுதியற்றவர்கள். அவர்களின் ஒழுக்கக்கேடான மனம் அவர்களின் குற்ற மனசாட்சியை சமாதானப்படுத்துகிறது. எனவே, அவர்களுக்கு மன்னிப்பு தேவையில்லை, இதனால் இரட்சகரை நிராகரிக்கிறார்கள்.
பவுலின் பரிந்துரை
கடைசி நாட்களில் ஒழுக்கக்கேடு நிறைந்த உலகின் ஒரு மாதிரியை பவுல் வழங்குகிறார், தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தி இரண்டு உயிர் பிழைப்பு கருவிகளை வழங்குகிறார். முதலாவது, பவுல் தான் தீமோத்தேயுவின் உதாரணம், முன்மாதிரி மற்றும் பயிற்சியாளர். தீமோத்தேயுவிற்க்கு ஒரு அற்புதமான முன்மாதிரி உள்ளது. கற்பித்தல், வாழ்க்கை முறை, நோக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை ஆகிய குணங்கள் பின்பற்றத்தக்கவை. உலகில், துன்புறுத்தல் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்பதை பவுல் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டுகிறார். "உண்மையில், கிறிஸ்து இயேசுவில் தெய்வீக வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள்." (II தீமோத்தேயு 3:12) பவுல் துன்பங்கள், வேதனைகள் மற்றும் வலிகளைச் சகித்ததால், தீமோத்தேயு ஒரு நல்ல சிப்பாயைப் போல சகித்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது, பரிசுத்த வேதம். "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது." (II தீமோத்தேயு 3: 16,17) வேதாகமம் போதனை, திருத்தம் மற்றும் ஒரு நபரை நல்ல செயல்களுக்கு முழுமையான மற்றும் ஆயத்தமாக்குவதற்கான பயிற்சியை வழங்குகிறது. கடைசி நாட்களில் கிறிஸ்தவர்கள் மிரட்டப்படுவதோ அல்லது அதிகமாகப் பயப்படவோ தேவையில்லை. மாறாக, கடைசி நாட்களில், கிறிஸ்தவர்கள் வேதத்தில் பயிற்சி பெற்றிருந்தால், ஒரு முழுமையான வாழ்க்கையை வாழலாம், நல்ல செயல்களைச் செய்யலாம்.
கர்த்தரின் வார்த்தையைப் பிடித்து கொல்வது மட்டுமே கடைசி நாட்களில், பயங்கரமான காலங்களுக்கு மத்தியில், கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
Author: Rev. Dr. J.N. Manokaran