“ நேசம் வா”? என சாந்தா வரவேற்றதைத் தொடர்ந்து, “*ஸ்தோத்திரம் ஆன்டி! வாங்க!? உற்சாகமில்லாமல் வரவேற்றாள் கவிதா!
“என்னக்கா செளக்கியம்தானா? ஏன் கவிதா டல்லாயிருக்கிறாள்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் நேசம்.
“நீயே சொல்லு! பி.எஸ்.சி. கடைசி வருஷம்ல்ல இது. இப்பப் போயி 'லெந்து நாட்கள் வந்திருச்சு நான் உபவாசம் இருக்கணும்னு” அடம் பண்றா! அதெல்லா வேண்டாம்ன்னு சொன்னேன். அதுதான் அப்படி உம்முன்னு இருக்கா!' முறையிட்டாள் சாந்தா.
எதற்கு இத்த உபவாசம்? நேசம்மாவின் கேள்விக்கு சாந்தாவே பதில் சொன்னாள்.
லெந்து நாட்களென்றால் சுத்திகரிக்கும் நாட்களாம். அதோட அவளுக்குப் பிஸிக்ஸ் எடுக்கிற புரபஸர் மனந்திரும்பணுமாம். இவ ஃபஸ்ட் கிளாஸிலே. பாஸ் பண்ணணுமாம். அதற்காக உபவாசிக்கப் போறாளாம். இவ என்ன பாவம் பண்ணிட்டா சுத்திகரிக்கிறதுக்கு. எவரோ ஒருத்தர் மனந்திரும்ப இவ ஏன் உபவாசிக்கணும்? பொது இடத்திலெல்லாம் நற்செய்திக் கூட்டம் நடக்குது வானொலி ஊழியம், பத்திரிகை ஊழியம் எல்லாம் நடக்குது, ஏதாவது ஒன்றின் மூலமா இயேசுவை ஏற்றுக் கொள்வார்கள். அவருக்காக நீ ஜெபம் பண்ணாப் போதும்ன்னு சொல்றேன். நல்லா முயற்சி எடுத்துப் படிச்சா ஃபஸ்ட் கிளாஸ் வந்துட்டுப் போகுது இதுக்குப் போயி உபவாசம் அது, இதுன்னு உடம்பைக் கெடுக்கணுமா?” சாந்தா நீட்டி முழங்கினாள்.
“அக்கா! உபவாசத்தினால் ஆகாதது எதுவுமில்லை. 84 வயதான அன்னாள் தேவாலயத்திலே இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்ததால் தேவகுமாரனை தரிசிக்கும். பாக்கியம் பெற்றாள். உபவாசித்து ஜெபித்ததால் கொர்நேலியு தேவதரிசனம் பெற்றார். தானியேல் எதிர்காலத்தைக் குறித்து தரிசனம் கண்டார். நினிவேயின் மக்கள் அழிவினின்று தப்பினர். அழிவுக்கு நியமிக்கப்பட்ட யூதமக்கள் அழிவினின்று தப்பினர், யூதமக்கள் கொலை செய்யப்பட வேண்டிய நாள், கொண்டாடும் திருவிழா. நாளாகியது!: சாந்தாவின் பேச்சிற்கிடையே குறுக்கிட்டாள் கவிதா.
“யோசபாத்திற்கு விரோதமாக படையெடுத்து வந்த அம்மோன், மோவாப், சேயீர் மலைக்குடிகள் தாங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு மடிந்து, யோசபாத்திற்கு வெற்றியைக்கொணர்ந்தது, யோசபாத்தின் தலைமையில் யூதர்கள் மேற்கொண்ட உபவாசமே.
பிசாசை விரட்ட வேண்டுமென்றால் உபவாசிக்க வேண்டும் என்று தம் சீடர்களிடம் இயேசு சொன்னாரே! இயேசுவே நமக்கு முன்மாதிரியாக உபவாசம் செய்திருக்கிறாரே!?
“ஆமாம் .கவிதா! பிசாசை விரட்ட உபவாசிக்க வேண்டும். வட இந்தியாவில் பீஹார் மாநிலம் என்று நினைக்கிறேன். பெயர் எனக்கு மறந்துவிட்டது. .ஒரு பின்தங்கிய மலைக்கிராமத்தில் ஒரு மந்திரவாதி அந்த கிராமமக்களை அடிமைப்படுத்தி “தானே கடவுள் எனக்கூறி அவர்களை ஆட்டுவித்து வந்தான். வடஇத்திய ஊழியத்திற்குச் சென்ற மிஷனரி சகோதரர்கள் அந்த. கிராமமக்களுக்கு இயேசப்பாவை அறிவிக்க ஆவல் கொண்டு கிராமத்திற்குச் சென்றனர். இவர்களால் செல்ல முடியவில்லை. எதிர்க்காற்று வீசியது. சைக்கிள் பங்க்சர் ஆகியது. மறுநாள் நன்கு ஜெபித்து விட்டுச் சென்றனர். எதிர்க்காற்று மிகக் கடுமையாக வீசியது. சைக்கிள் பங்க்சர் ஆக, கிராம எல்கை வரை சென்றனர் உள்ளே நுழைய முடியாமல் திரும்பினார்கள். 3 ம் நாள் உபவாசித்து ஜெபித்தார்கள். உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியையும் படைத்துச் சென்றனர். சுழல் காற்றுவீசியது. ஆனால் இவர்களை தடுக்கமுடியவில்லை. கிராமத்திற்குள் நுழைந்தனர். மரத்தடியில் கண்மூடி அமர்ந்திருந்த மந்திரவாதியைக்கண்டனர். தேவனின் குரல் ஒலித்ததைத் தம் ஆத்மீகத்தில் உணர்ந்த இருவரும் மந்திரவாதியின் குடுமியை இறுகப் பிடித்துக் கொண்டு இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையையும், ஸ்தோத்திர பலியையும் ஏறெடுத்த வண்ணம் இருந்தனர். மந்திரவாதி துள்ளினான். துடித்தான். இவர்கள் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தான் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் துடிதுடித்து மடிந்தான். அவன்தன் உயிரை, பிசாசின் வல்லமையால் குடுமியில் வைத்திருந்தான். எனவே தான் யாராலும் அவனைக் கொல்ல முடியவில்லை. மிஷனரிகளின் உபவாச ஜெபத்தால், இயேசுவின் வல்லமை இறங்க, மந்திரவாதி மரித்தான். கிராமம் முழுவதுமே இரட்சிக்கப்பட்டது.
இந்தக் காலத்திலா நடந்தது? ஆச்சரியமா இருக்கே!” மூக்கில் விரல் வைத்தாள் சாந்தா.
ஆண்டி! எவ்வளவு, பெரிய வெற்றி? எத்தனை ஆத்துமாக்கள் மீட்கப்பட்டனர்? என்றவள் தொடர்ந்தாள், காலேஜ் பிஸிக்ஸ் புரபஸர் நல்ல அறிவாளி. ரொம்ப நல்லா சொல்லித்தருவார். நல்ல குணம் திறமைசாலி எல்லோரையும் தன்கருத்தை ஏற்க வைத்துவிடும் பேச்சுத்திறன், ஆனால் “கடவுள் இல்லை? என்ற கொள்கையில் ஊறி உதித்துப் போனவர், அவர் மட்டும் பாதை திரும்பிட்டா... நிறைய மாணவ மாணவியர்களை! இயேசுநாதர் பக்கம் திருப்பிவிடுவார். சவுல்...பவுலான வரலாறுதான். அதுதான் ஆன்டி. நான் ஆத்திரப்படுகிறேன், அவர் திருந்துவதற்காக நான் உபவாசிக்கக் கூடாதா? சிறிது நிறுத்தினாள். மீண்டும் நான் பஸ்ட் கிளாஸ் வாங்கணும். நான் நன்கு படிப்பதோடு உபவாசித்தால் நல்லதுதானே!” என்றாள் .
ஆமாடா கவிதா! குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும். உபவாசம் கர்த்தரிடமிருந்து ஜெயம் வாங்கித்தரும்”? என பதிலிறுத்தவள், சாந்தாவின் பக்கம் திரும்பி, அக்கா! பாவம் என்றால் கொலை, கொள்ளை போன்றவற்றை மட்டுமே நினைக்கிறீர்கள் என எண்ணுகிறேன். வேதம் சொல்லுகிறது, நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமற் போவது பாவமாயிருக்கும் என்றும், பட்சாதாபம் பாராட்டுதல் பாவம்” என்றும், “தீய நோக்கம், மேட்டிமையான பார்வை, மாய்மாலம், அகந்தை பிறரை அவமதித்தல் சாபம், பொய், பெருமை ஆகியவை கொண்ட பேச்சு ஆகிய இவை அணைத்தும் பாவம் என்றும் திருமறை கூறுகிறது. விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே என பவுல் கூறுகிறார். நம்மைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் தம் தவறுகள் நமக்குப் புலப்படும். நமக்குப் பாவமில்லை என்போமானால் தம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம்.”
நேசம் நீ சொல்வதின்படி பார்த்தால் இந்த உலகில் யாருமே வாழ முடியாது?” தீர்க்கமாகச் சொன்னாள் சாந்தா.
ஆன்டி!. இயேசப்பா விரும்பியபடிதான் வாழணும்ன்னு ஆசைப்படுறேன் ஆனால் சிலசமயம் தவறி விடுகிறேன் ஆன்டி!
தவறுவது மனித இயல்புதான். தவறுன்னு தெரிஞ்சப்புறம் திருத்திக்கிறதுதான் மனிதத்தன்மை. சாந்தாக்கா! போனமாதம், நான் என்னுடன் பணியாற்றுபவர்களுடன், என் உடன்பிறவா தங்கையொருத்தியின். திருமணத்திற்குச் சென்றிருந்தேன் வேனில் திரும்பும் போது, எல்லோரும். பேசிச்சிரித்தபடி வந்தோம். ஒரே அரட்டைக்கச்சேரி. கேலியும், கிண்டலும் மிகுந்திருந்தது. நானும் பள்ளியில் படிக்கும் பருவத்திலிருப்பதைப் போன்ற உணர்வுடன் பேசி மகிழ்ந்தேன்”? பேச்சிடையே குறுக்கிட்டாள் சாந்தா.
“பேசுவது சிரிப்பது கூட பாவம்”? என்று கூறிவிடுவாய் போலிருக்கிறதே!
இல்லையக்கா! பேசுவதும் பாவமல்ல! சிரிப்பதும் பாவமல்ல! மகிழ்ச்சியோடு இருப்பதும் பாவமல்ல! எந்த வேளையில் எதைச் செய்யவேண்டுமோ, அந்த வேளையில் அதைச் செய்ய வேண்டும். பலர் பயணம் செய்த வேனில் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொண்டது போலிருந்தது. அதே நேரம்... ஆலயத்தில் முழு இரவு ஜெபம் நடப்பது எனக்குத் தெரியும். ஏன் நான் என் நேரத்தை தேவனோடு செலவிட்டிருக்கக் கூடாது?
வேனில் எப்படி முழங்கால்படியிட்டு ஜெபிக்க முடியும்? அது பைத்தியக்காரத்தனம் அல்லவா?”
முழங்கால் படியிட்டுத்தான் ஜெபிக்க வேண்டு என்ற கட்டாயமில்லை! பொதுவாக நான் பயணம் செய்யும் வேளைகளில் ஸ்தோத்திரம் கூறி, மனதிற்குள் ஜெபித்தும் கொண்டேதான் செல்வேன் என்னுடன் வருபவர்கள் யாரும் அதை அறியமாட்டார்கள், தேவன் மட்டுமே அறிவார். அவசியமான காரியங்களை மட்டுமே என்னுடன் வருபவர்களுடன் பேசுவேன். என்னுடன் பேசினால் பதில் தருவேன். கூடுமானவரை ஜெபத்தில் நேரத்தை செலவிட கண்ணை மூடி தூங்குவது போல் இருந்துவிட்டால் அடுத்தவர் குறுக்கீடு இருக்காது. அன்று வீணே பொழுது போக்கிவிட்டு, ஆலயத்திற்கு வந்து முழங்கால் படியிட்டால் ஜெபிக்கவே முடியவில்லை. வீட்டிற்குச் சென்ற பின்னும் மறுநாளும் நிம்மதியில்லை. அன்று என் வேதாகமத்தை எடுத்து எபே 5 – 4 சிவப்புக் குறியிட்டு, தேதி குறித்து வைத்தேன். கண்ணீரோடு தேவனிடம் அறிக்கையிட்டேன். “வீண் பேச்சில் நேரத்தை செலவு செய்யமாட்டேன்”? என்று ஒப்புக்கொடுத்தேன். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். தேவனோடு நெருங்க, நம் மனச்சாட்சி கூர்மையாகும் தேவசத்தம் கேட்கும். வேதமும் ஜெபமும் தேவசித்தம் செய்ய வல்லமை நல்கும்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர் கவிதாவும், சாந்தாவும்.
மணிச் சத்தத்தைத் தொடர்ந்து “*பால்”* என பால்காரன் குரல் கொடுக்கவே, கவிதா! பால் வாங்கி போடும்மா!? என சாந்தா கூறவும், கவிதா எழுந்து சென்றாள்.
“அக்கா! நான் சொல்றேன்னு கோவிச்சிக்காதீங்க... எத்தனையோ வாலிபப் பிள்ளைகள் வழி விலகிப் போகும் போது, உங்க பிள்ளை தேவ பாதையைத் தெரிந்து கொள்வதை தடை செய்யாதீங்கக்கா! நல்ல ஆரோக்கியமுள்ள அவள், வாரத்தில் ஒரு நேரம் உபவாசம் இருந்தால் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டாள். நீங்களும்கூட “ஞாயிற்றுக் கிழமை ஆலயம் சென்றால் போதும். ஆலய சந்தா காணிக்கை செலுத்தினால் போதும்” என்று வாழாமல் கொஞ்சம் சிரத்தை எடுத்து உத்தமக் கிறிஸ்தவப் பெண்ணா வாழ முயற்சி செய்யுங்கள்! இரண்டாம் வருகைக்கான தீர்க்க தரிசனங்களெல்லாம் நிறைவேறி வரும். இக்காலத்தில் கடவுளின் வருகை எப்பொழுது இருக்குமோ? நாமறியோம். அனலுமின்றி, குளிருமின்றி வாழ்ந்தால் தேவன் நம்மை வாந்தி பண்ணிப் போடுவார்?” நேசத்தின் சொற்கள். தீர்க்கமாக வந்தன.
சாந்தாவின் விழிகளில் ஒரு பய உணர்வு படத்தது..
நேசம் அடிக்கடி வா. உன் தொடர்பும் ஆலோசனையும் எனக்கு நல்லதென நினைக்கிறேன்.
ரொம்ப சந்தோஷம்க்கா!
சாந்தாவின் மனமாறுதலுக்காக ஜெபித்து வந்த தன் ஜெபம் கேட்கப்பட்டதையுணர்ந்த நேசத்தின் இதயம் நன்றியின் தூபத்தை இறைவனுக்கு ஏறெடுத்தது.
இந்தக் கதை உதய கீதம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.