சத்தியம் வாழ வேண்டும்

டிங் டாங்:”என பதினோரு முறை ஒலித்தது அந்த சுவர் கடிகாரம்... மனப் போராட்டத்தினால் உறக்கம் வராமல் படுத்திருந்த சுசீலாவின் செவிகளில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது... விருட்டென்று எழுந்தவள், வேகமாகக் கதவைத் திறந்தாள். களைத்துப் போய் நின்றிருந்த டேவிட் உள்ளே. வந்து சோபாவில் அமர்ந்தார்.

அவர் அருகில் வந்தவள் என்ன ஆச்சு? என மெல்லக் கேட்டாள். அவள். முகத்தில் காணப்பட்டது. கவலையா? ஆவலா? எனக் கண்டு கொள்ள முடியவில்லை.

“இந்த டேவிட் எடுத்த: எந்தக் காரியம் தோல்வியானது? இன்னும் 3 நாளில் ஆர்டர் வந்துவிடும். நீ யாரிடமும் மூச்சுவிட்டு" விடாதே!  உற்சாகமாகப் பேசினார்.

அவளிடம் மகிழ்ச்சி காணப்படவில்லை. . “எனக்கென்னவோ பயமாயிருக்குங்க! அந்தப் பொண்ணு பாவம், இப்பத்தான் கணவனை இழந்து தவிச்சிக்கிட்டிருக்கு” மெல்லப் பேச்செடுத்தாள்.

சும்மா கெட. எனக்குத் தெரியும் எல்லாம். என் தங்கச்சி நல்லாயிருக்கிறது, உனக்குப் பிடிக்காதே? பொரிந்து தள்ளினார்.

மற்றவர்களை வதைத்து நாம வாழணும்னு நெனைச்சா தெய்வத்துக்கே பொறுக்காதுங்க!? 

சுசீலா! அவர் அலறல் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையையும் எழுப்பி விட்டது .

“போயிடு! என் கோபத்தைக் கிளராதே. இது சம்பந்தமா யாரிடமாவது நீ மூச்சுவிட்ட... நான் பொல்லாதவனாயிடுவேன்.. ஜாக்கிரதை! கர்ணகடூரமாக ஒலித்தது அவர் குரல். கலங்கிய கண்களைத் துடைத்தபடி உறக்கத்திலிருந்து அழுதுகொண்டே எழுந்த தன் பாலகனைத் தூங்க வைக்கப் போய்விட்டாள்.

மூன்றாம் நாள் வந்தது. தலைமையாசிரியராகிய டேவிட் நிலைகொள்ளாமல் தவித்தார். வகுப்பறைகளைச் சுற்றிப் பார்க்கக்கூடப் போகவில்லை. வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார், தன் அலுவலகத்திலிருந்தபடியே.

அவர் ஆவலாக எதிர்பார்த்து நின்ற அஞ்சல்காரரும். வந்தார். கவரைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அடக்க முடியாத ஆவலுடன் பிரித்தவர் அதிர்ச்சி அடைந்தார். அவரால் நம்ப முடியவில்லை. அவர் எத்தனை நாட்களாக அலைந்தார்? யார் யாரையெல்லாம் பார்த்து, எப்படியெல்லாம் பேசி, தன் வழிக்கு அனைவரையும் சரிக்கட்டி இருந்தார். “இது எப்படி உடைந்தது? யார் கெடுத்தது? அவர் மூளை வேலை செய்தது.

ஜெயசீலன் அவன்தான் செய்திருக்க வேண்டும்”. ஆத்திரம் ஆவேசமாக உருவெடுத்தது. “அவனைக் கவனித்துக் கொள்கிறேன் மனதிற்குள் கறுவினார்.

மதியம் அலுவலக அறையிலிருந்தார். வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டுத் திரும்பிய ஜெயசிலனைப் பார்த்து,

“என்ன. சார்!:. டீச்சரை நைட்டே வண்டியேத்தி விட்டுட்டு, நீங்க மட்டும் காலையிலே வந்தீங்களாக்கும்? எக்களிப்புடன் கேட்ட அவரை நிமிர்ந்து பார்த்தார் ஜெயசீலன். 

“என்ன சொன்னீங்க?”

“பெர்சியா டீச்சரத்தான் சொல்றேன். கிடைக்க வேண்டியது கிடைச்சிட்டா “சப்போட்” டெல்லாம் நல்லா செய்ய வேண்டியதுதானே! தீக்கங்குகளாக சுட்ட வார்த்தைகள் ஜெயசீலனை துடித்தெழ வைத்தது.

“என்னடா சொன்ன?” கையை ஓங்கியபடி தலைமை யாசிரியரை நெருங்கிய அந்த வேளையில் விளையாட்டு ஆசிரியர் ஆனந்தன் ஓடிவந்து ஜெயசீலனை பிடித்துக் கொண்டார்.

“சார்! பொறுமை இழக்காதீங்க! அமைதிப்படுத்தினார். ஆசிரியர், ஆசிரியைகள் ஒருசிலர் அங்கு விரைந்தனர். ஒரு சிலர் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்தனர்.

பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு சார்! இவன். என்ன சொல்லிட்டான்... தெரியுமா? தங்கைக்கும், தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத மிருகம் சார். இவன் நினைச்சது. நடக்கலைன்னா... அதுக்கு என்னைப் பார்த்து இப்படியா சார் பழி போடறது? வார்த்தைகள் உணர்ச்சிப் பிழம்புகளாக வெளிவந்தன.

எல்லோருக்கும் தெரிந்ததுதானே சார்! நீங்களும் மரியாதைக் குறைவா பேசாதீங்க, நீங்க வாங்க சார் வகுப்புக்கு' ' பிரபாகரன் கையைப் பிடித்து இழுத்தார்.

மரியாதை என்ன சார் வேண்டிருக்கு. பெர்சியா டீச்சர் இந்த ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்ணியதிலிருந்து ஸ்கூலுக்கு வர்ற முதல் ஆள் அவங்கதான். காலை ஜெபம். நடத்தறதுல இருந்து, ஆபீஸ் வேலை (எழுத்து வேலை) களையெல்லாம் முகம் கோணாமல் செய்து தர்றாங்க! கொஞ்சங்கூட நன்றியில்லாதவர் சார் இவர். *பெர்சியா டீச்சரைப் போல உண்டா? என்ன அறிவு? என்ன திறமை?” என்றெல்லாம் புகழ்ந்த இதே வாய் பெர்சியா டீச்சருக்குப் பாடம் நடத்தத் தெரியலை. இந்தப் பெரிய ஸ்கூலுக்கு அவங்க லாயக்கில்லை!” என்றெல்லாம் நிர்வாகிகிட்டேயும், மேலிடத்தில் எல்லார்கிட்டேயும் போய் பரப்பி, டீச்சரை அந்த இடத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டு...”” ஜெயசீலனின் ஆத்திரமான பேச்சினிடையே குறுக்கிட்டார் டேவிட்,

சார்! அனாவசியமா பழி போடாதீங்க. உங்களால் நிரூபிக்க முடியுமா? ”கோபமாகக் கேட்டார் டேவிட்.

“*நிரூபிச்சிட்டா!”* ஆத்திரம் அடங்காமலேயே பதில் சொன்னார் ஜெயசீலன்.

மாணவ மாணவிகளும் கூட்டம் கூட ஆரம்பிக்கவும் சில ஆசிரிய ஆசிரியைகள் கூட்டத்தைக் கலைத்து வகுப்புகளுக்கு அனுப்பினர்.

நீங்க வாங்க சார்!*' என்று ஜெயசீலனை ஆனந்தன் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்.

தன் வகுப்பறையில் அமர்ந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். பெர்சியா. மெர்சி அவளைத் தேற்றினாள்.

“அழாதே பெர்சி! வினை விதைச்சா வினைதான் அறுப்பான். கொஞ்சங்கூட ஈவு இரக்கமில்லாத மனுஷன். “இப்பத்தான். கணவனை இழந்து கலங்கித் தவித்துக் கொண்டிருக்கா... அவளைப் போயி அவ புருஷன் பணியிடத்துக்கே மாற்றலாமா?” என்ற எண்ணமே இல்லை. அதுதான் உணர்வில்லைன்னாலும்... பட்டிக் காடாச்சே மூன்று சிறு பிள்ளைகளை வச்சிட்டு எப்படி அவ தனியா வசிப்பா? ஏதாவது மீட்டிங்ன்னா டவுனுக்கு வந்துட்டுத் திரும்ப அந்த இடத்திற்கு மாலை 6-30 மணிக்கு மேல பஸ் இல்லையேங்கற அறிவு கூட இல்லை!

“நான். ஜெயசீலன் சார்கிட்டே ஒண்ணுமே சொல்லலை. இந்த விஷயம் கேள்விப்படவும், நான் எங்க அம்மாவை கூட்டிக்கிட்டு நிர்வாகிகிட்டப் போயி விபரமாச் சொல்லி, என்னை மாறுதல் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன்... இவர்...? தேம்பினாள் பெர்சியா.

“அழாதே! அனாதைகளுக்கு ஆண்டவனே துணை!? கண்ணீரைத் துடைத்தாள் மெர்ஹி!

“பெர்சியா டீச்சர் திறமையில்லாதவங்களா சார்? ஐூம் தாம் வகுப்பில் அவங்க செக்ஷன்தான் ரொம்ப நல்லாயிருக்கு. இந்த மனுஷன் போயி பெர்சியா டீச்சர் லேட்டா ஸ்கூலுக்கு வர்றாங்க. ஒழுங்கா பாடம் நடத்தறதில்லை. அவங்க இருந்தா... ஸ்கூல் முன்னேற்றம் பாதிக்கப்படும்?” அப்படின்னு எல்லார்கிட்டேயும் சொல்லி, இவர் தங்கையை இங்க அப்பாயிண்ட்மென்ட் பண்ணிட்டு, டீச்சரை அவங்க ஹஸ்பெண்ட் வேலை பார்த்த பட்டிக்காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ண ஒழுங்கு பண்ணியிருக்கார் சார்?” ஆத்திரம் அடங்காமலேயே
பேசினார் ஜெயசீலன்.

இதெல்லாம் எப்படி சார் உங்களுக்குத் தெரியும்? அப்பாவித்தனமாகக் கேட்டார், ஆனந்தன்.

“பெர்சியா டீச்சர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. உடன் பிறந்த தங்கைக்காக, உடன் பிறவா தங்கையை நசுக்கத் துடிக்கிறானே... இவன் சகாக்கள் பீற்றிக் கொண்டிருந்ததை தற்செயலாகக் கேட்டேன். உடனே யார் யாரையெல்லாம் பார்க்க வேண்டுமோ அவங்களையெல்லாம் பார்த்தேன். உண்மையை எடுத்துச் சொன்னேன். டிரான்ஸ்பர் ஆர்டர் நின்னு போச்சு! 

“சார்! காலையில போஸ்ட்மேன் கவரை கொடுத்தார் சார். அதைப் படிச்சதிலிருந்து நம்ம பாஸ் முகம் இஞ்சி தின்ன... அது:.. மாதிரியே இருந்தது. என்னடா விஷயம்னு யோசித்தேன். இப்பத்தான் சார் புரியுது."?

“இவர் தங்கை வேலையை நான் கெடுக்கலை. இங்க இருந்து காலை 7 மணிக்கு அந்த இடத்திற்கு பஸ் போகுது. மாலை 14 மணிக்கு அங்கிருந்து வர பஸ் இருக்கு. இவர் தங்கைக்கு பிள்ளையா, குட்டியா... போயிட்டு வர வேண்டியதுதானே! இவரைக் கலந்து கொண்டு, அந்த இடத்தில் இவர் தங்கையை அப்பாயிண்ட்மென்ட் பண்ண முடிவு செய்வோம் என்று பேசிக்கொண்டார்கள். அதுதான் கடிதமாக இருக்கும்” என்றவர் “மிஸ்டர் ஆனந்தன் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? திறமையில்லாதவங்களாம் பெர்சியா டீச்சர். அதனால. ஹெச்.எம். போஸ்ட் அவரோட தங்கைக்காம். சின்ன ஸ்கூலோ, பெரிய ஸ்கூலோ ஹெச். எம்.மா இருக்க திறமை வேண்டாமா? முன்னுக்குப்பின் முரணான பேச்சு, இதுக்கும் நாலு பேர் தலையாட்றாங்களே சார்!” வேதனையோடு சிரித்தார் ஜெயசீலன்.

“நல்லவர்களை கெட்டவர்கள் என்றும், கெட்டவர்களை நல்லவர்களென்றும் வதந்தி பரப்பி விட்டுவிட்டு சுயலாபம் தேடுகிறவர்கள் நிறைய இருக்காங்க. அவங்க சொல்றதையும் அநேகர் நம்புறாங்களே சார்”?

“ஒருநாள் பொய் வதந்திகள் மறைய உண்மை வரும். முகிலுண்ட முழுநிலவு அப்படியே மறைந்துவிடுமா? சில மணித்துளிகளில் முகில் விலக முழுநிலா அழகாகத் தெரிவதில்லையா??

அழகா பேசுறீங்க சார்! அருமையா செயல்படுறீங்க சார்!” 

ஆனந்த்! என் திறமை என்ன இருக்கு? எல்லாம் கடவுள் கிருபைதானே சத்தியம். இயேசு கிறிஸ்துவை உள்ளத்திலும், இல்லத்திலும் தலைவராகக் கொண்டு சத்திய வாக்காகிய வேத வசனத்தை நேசித்து, வாசித்து, அதன்படி சத்திய வாழ்க்கை நடத்தி வருபவர்கள்தான் வெற்றி வாகை சூடுவது நிச்சயம் மிசஸ்- மெர்சியா கடவுள் பக்தியுள்ளவர்கள், அதோடு உண்மையா உழைக்கிறாங்க. அதனால் கடவுள் அவர்களைக் கஷ்டப்பட விடமாட்டார்.

ஏன் சார் இவர் ஆலயத்திற்குப் போயிட்டா என்ன பக்திமானா காட்சி தர்றார்? கோயில்லாம் நடத்துவாராமே சார்?”

அதற்கெல்லாம் ஒண்ணும் குறைவில்லை. "பசுத்தோல் போர்த்திய புலிகள்” திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாத படிக்கு தன்னைக் காத்துக்கொள்கிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” என்று திருமறை கூறுவதை காற்றிலே பறக்க விட்டு விடுகிறார்கள்? ஒரு பெருமூச்சோடு நிறுத்தியவர் என்னதான் பொய்மைப் புயல் வீசினாலும், உண்மை என்ற கோபுரத்தை அது வீழ்த்த முடியாது”? என்றார்.

ஆமாம் சார்? அதனால்தான் நம் தேசத் தந்தை காந்திஜி “சத்தியமே வெல்லும்” என ஆனந்தன் கூற,

சத்தியமே உங்களை விடுதலையாக்கும் என திருமறை கூறுவது சத்தியமே என ஜெயசீலன் செப்ப. “டாண், டாண்” என அதை ஆமோதிப்பது போல் ஒலித்தது பள்ளி ஆரம்பிப்பதற்கான இரண்டாம் மணி. அவரவர் வகுப்பிற்கு அனைவரும் விரைந்தனர். 

இந்தக் கதை  உதய கீதம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Udhaya Geetham - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download