திருடனும் வாழைப்பழமும்

ஒரு ஏழை மனிதன் வாழைப்பழங்களைத் திருடியதில்  பிடிபடுகிறான்.  சிலர் அவனைப் பிடித்து தண்டிக்க விரும்பினர்.  வாழைபழத் தோட்டத்தின் உரிமையாளர் அத்திருடனை விட்டுவிட்டு அனைவரையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னார். இப்போது அந்த எஜமானன் அத்திருடனிடம் 'ஏன் வாழைப்பழத்தை திருடினாய்' என்று கேட்டார்.  'என் இரண்டு பிள்ளைகள் பட்டினியாக இருக்கின்றனர், அதனால் தான் இப்பழங்களை திருடி அவர்களுக்கு உணவளிக்க விரும்பினேன்' என்று திருடினவன் கூறினான்.“திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள் (நீதிமொழிகள் 6:30) என்று வேதாகமம் கூறுகிறது.

அந்த எஜமானன் ஒரு நல்ல மனிதர், அவர் உடனடியாக சில வாழைப்பழங்களைக் கொடுத்து, விரைவாகச் சென்று பட்டினியாக இருக்கும் குழந்தைகளுக்கு உணவளித்து விட்டு திரும்பிவா, நான் உனக்கு என் தோட்டத்தில் வேலைத் தருகிறேன் என்றார்.  அவன் திரும்பி வந்ததும்,தோட்டத்தில்  முழுமையாக பழுத்த பழங்களும், ஒரே நாளில் அழுகக்கூடிய வாழைப்பழங்களும் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிட்டு வரும்படி அனுப்பினார். அவன் எட்டு வாழைப்பழங்களை எடுத்துக் கொண்டு வந்ததும், அந்த எஜமானன் உடனடியாக சென்று பட்டினி கிடக்கும் எட்டு குழந்தைகளைக் கண்டுபிடித்து இப்பழங்களை அளித்து விட்டு வரும்படி கூறினார். இப்படியாக  ஒவ்வொரு நாளும், அந்த எஜமானன் சில ஏழைக் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை அளித்தார். பின்நாட்களில் 'அத்திருடன்' அந்த எஜமானரின் மேலாளர்  ஆனான். ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளிப்பதற்காகவே  மட்டுமே அவர் வாழைப்பழத்தை வளர்த்து வாங்குகிறார்.

இந்த தொற்று காலத்தில், கடினமான காலங்களை கடந்து செல்லும் பலர் உள்ளனர்.  நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ளும் குடும்பங்கள், படிக்கும் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை, வீட்டிற்கும் வாடகை செலுத்த வேண்டும், மேலும் உணவு பற்றாக்குறை…இப்படி போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது. சிலர் தங்கள் தேவைகள் சந்திக்கப்பட திருடுகிறார்கள், சிலர் பிச்சை எடுக்கிறார்கள். அப்படி சிலரை சந்திக்கும் போது உதவி செய்பவர்கள் அதிர்ஷடசாலிகள் எனலாம்,  நம் வட்டாரங்களில் அல்லது நம் அருகாமையில் அப்படிப்பட்ட ஏழைகள் இருந்தால் நாம் அவர்களுக்கு உதவ நம் கைகளை நீட்ட வேண்டும்.   உண்மையில்,  ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் (நீதிமொழிகள் 19:17). 9 ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் (சங்கீதம் 112:9).

நான் ஏழைகளுக்கும் தேவையிலுள்ளோருக்கும் தாராளமாக வழங்குபவனா/ளா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download