தொடர் - 11
ஆராதனைக்காக அவசரஅவசரமாக சமையலில் ஈடுபட்டிருந்த மேரி, “மேரி” என்ற அன்பான அழைப்யைக் கேட்டுத் திரும்பினாள். தனராஜ் நின்றிருந்தார். ஒரே ஆச்சரியம் அவளுக்கு கர்ண கடூரமாக ஒலிக்கும் அவர் குரலில் இவ்வளவு அன்பா?
“நான் உன்னை ரொம்ப வேதனைப்படுத்திட்டேன். ஒரு மனுசனாவே நான் நடந்துக்கலே என்ன... மன்னிச்சிடு மேரி? அவர் குரலில் உண்மையான வருத்தம் தோய்ந்திருந்தது கண்கள் கலங்கியிருந்தன. தனராஜின் வார்த்தைகளால் துடித்துபோனாள் மேரி, தனராஜின்வாயை தன் கரத்தால் பொத்தினாள் “அப்படியெல்லாம் சொல்லாதீங்க” அவள் கண்களிலிருந்தும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
தன் கணவர் மனம்மாற வேண்டுமென இரவு பகலாக கண்ணீர் வடித்து கதறி, இறைவன் பாதத்தில் காத்திருந்து ஜெபித்தாளே, அந்தக்கண்ணீர் விதைப்புக்கு தன் கணவன் மனம்மாறி கெம்பீர அறுவடை கிடைத்துள்ளது. அல்லவா? வந்த அறுவடையைக் கண்ட ஆனந்தக் கண்ணீர்! அவள் உள்ளம் பொங்கிப் பொங்கி வழிந்தது அவளே பேசினாள். இதுவரை ஊமையாய் ஒடுங்கிப்போயிருந்தவள் உற்சாகமாய் பேசினாள்.
சீக்கிரம் புறப்படுங்க! சர்ச்சுக்கு போயிட்டு வருவோம் !'' தலையை அசைத்தவர், சமயலறையை விட்டு வெளியேறினார். வறட்டு கர்வம் பாராட்டி திரிந்தவர், இன்று தன் மனைவியிடம் மன்னிப்புக்கேட்ட செயலை அவரே எண்ணிப்பார்த்தார். ஆச்சரியமாக இருந்தது, கவிதாவின் அறைக்குச் சென்றார். அவள் சுதாவின் மகனுக்கு உடை மாற்றிக்கொண்டிருந்தாள்”? தன் பிள்ளையை கொஞ்ச வேண்டியவள் தங்கையின் பிள்ளையை கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்'? என எண்ணினார், முத்து முத்தாகக் கண்ணீர் உருண்டது, திடீரென நிமிர்ந்தவள் கண்ணீரோடு நிற்கும் தன் தந்தையைக் கண்டான் அவள் உள்ளம் பதறியது.
அப்பா! ஏப்பா ஏப்பா அழறீங்க' ”
நீ ரொம்ப ரொம்ப உயர்ந்தவம்மா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.”” வார்த்தைகள் உளறின.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா. நான் உங்கள் மகள் தானேப்பா !*' என்றவள் அப்பாவின் மனக்குமுறலை மாற்ற எண்ணினாள் குழந்தையை தூக்கி வந்து **தாத்தாவைப்பாருடா குழந்தை மாதிரி அழறார்'' என்றாள் தன் தாத்தாவிடம் தாவினான் பேரன் கொஞ்சம் இவனை வைத்திருங்கள் நானும் புறப்படுகிறோன். என்றபடி குழந்தையைத் தந்தையிடம் கொடுத்தனுப்பியவள், தன்னறையில் முழங்காலிட்டு தேவனைத் துதித்தாள்.
“அப்பா
ஆராதனை முடியவும், வாலிபர் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது பாடல்கள் பாடினர். செய்தி கொடுக்க வந்த சகோதரன் வர சிறிது தாமதமாகவே போதகரம்மா கவிதாவை ஒரு தனிப்பாடல் பாடும்படி கூறவே,, சகோதரிகளும் வற்புறுத்தவே பாடல் பாட எழுந்தாள். பாட ஆரம்பித்தாள். செய்தி கொடுக்க வந்த சகோதரனும் வந்து சேர்ந்தார்.
மாயையான இவ்வுலகில்
மயங்கித் திரிந்த போதையெனை
மன்னனே நீர் தேடினீரோ
மாதென்னைக் கண்டு எடுத்தீரோ... மாயை
நல் மேய்பனே நீர் தான் அன்றோ
நாடிடும் ஆடுகள் உந்தன் பாதை
நானோ உம்மை விட்டுத் தப்பியதால்
குழியில் வீழ்ந்தேன்
கூர் முட்கள்தான் பாய்ந்தனவே
குருதி சிந்திட கலங்கினேன்
பொய்யான உலகை
உணர்ந்தேன் ... மாயை
மானிடரின் அன்பும் பொய்
மயக்கிடும் அழகும் மாயையன்றோ?
வாழ்வினில் நான் உணர்ந்தேன்
வேதனைத் தீயினில் வீழ்ந்தேனே
தாய் மறந்தாலுமே நான் மறவேன் என்றே
சொன்ன உன் சொல் கேட்டேன்
உன் பாதம் பற்றிக்
கொண்டேன் ... மாயை
கறையான பாவங்களைப் போக்கிட
கதியின்றிக் கலங்கினேன்
கறையற்ற எந்தன் இரத்தம் எல்லாம்
உன் பாவம் அனைத்தும் போக்கும் மென்றார்
ஆனத்தக் கண்ணீர் தான் அணைமீறிப் பொங்கிட
ஆண்டவர் பாதமதை
அன்புடன் அணைத்துக் கொண்டேன் ... மாயை
கவிதா அமர்ந்தாள் சகோதரன் எழுந்தார் **ஆண்டவர் அற்புதமானவர்! அதிசயமானவர். அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டுச் செய்கிறார் இன்றைய செய்தி”: நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் கிருஷ்டிகரை நினை என்ற வசனத்தின் அடிப்படையில் இளவயதும், வாலிபமும் மாயையே”? என்பதை உங்களுடன் பறிமாறிக்கொள்ள வந்தேன். மாயையைப் ஒரு பாடல் பாடினால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். தேவன் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் பார்த்தீர்களா?” எனக் கூறிவிட்டு செய்தி கொடுத்தார் ஆவியானவர் அசைவாடினார். உல்லாச வாழ்வில் ஊறிப்போன உள்ளங்கள் உடைந்தன. மதிற்சுவர் பூனையென உலகுக்கும் :உன்னத வாழ்வுக்குமிடையே ஊஞ்சலாடிய நெஞ்சங்கள் தெளிந்தன. திசையறிந்தன. விசுவாச வாழ்வில் சோர்வுற்றவர். புதுபெலன்' அடைந்தனர், வாலிபர் சிறப்புக் கூட்டம் சிறப்பாக முடிந்தது.
வீடு நோக்கி நடந்தவளை, கவிதாக்கா” பழகியகுரல் அழைக்கவே நின்று திரும்பினாள். எளிய உடையில் கையில சூட்கேஸீடன் ரவி நின்றிருந்தான். கவிதாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
வா ரவி! எங்கே மலர்க்கொடி? அத்தை, மாமா எல்லாரும் சுகமா?
எல்லாரும் சுகம்தான், என்னைத்தவிர!” பேசிக்கொண்டே நடந்தனர்,
*உனக்கு சுகமில்லையா? என்ன செய்யுது ரவி:” பாசத்தோடு வினவினாள். ரவி மெலித்திருந்தான் முகத்தில் வாட்டம் தெரிந்தது.
உடம்புக்கு ஒன்றுமில்லை. மனசு தான் சரியில்லை!” சிறிது நேரம்! மெளனம்! நிலவியது, பின் தொடர்ந்தான், இந்த உலகத்திலே? தங்கைக்கு மேரேஜ் செய்த பிறகு தான் அண்ணன் மேரேஜ் பற்றி நினைப்பான். நானோ. ...... அக்கா நீயிருக்கும் போது, தம்பி மேரேஜ் பண்ணிகிட்டு உன்னை சம்பாதித்துப் போட வச்சிட்டுப் போனதுக்கும் படிக்க வைச்ச அப்பாவை உதறி விட்டுப் போனதுக்கும் நல்ல தண்டனை கிடைச்சிட்டுது. ... அக்கா ! மலர் என்னை மதிக்கிறதேயில்லை, நான் ஒரு ஆடம்பரப்பிரியானா இருக்கலாம். அதற்காக என் பணியின் பொறுப்பை விட்டிட முடியாது இரவு என்றும் பகலென்றும் பாராமல் உழைக்கணும் ஆண்டவர் எனக்கு மருத்துவ அறிவைக் கொடுத்திருக்கிறார். என்கைகளின் கிரியையைகளை ஆசீர்வதிக்கிறார் என்றால் நான் எவ்வளவு பொறுப்போடு மக்களுக்கு பயன்படனும் அதைப் பற்றியெல்லாம் மலர் நினைக்கவே மாட்டேங்கறா தினமும் சினிமா, டிராமா, வாக்கிங், ப்ரன்ஸ் வீடுகள் விஸிட் என்னைத் தொந்தரவு செய்கிறாள். அவள் இஷ்டத்துக்குத் தான் அவளுடைய அப்பா, அம்மா ஆடுறாங்க!!' பெருமூச்சோடு நிறுத்தினான்.
“நீ பொறுமையா அவளுக்குப் புத்தி சொல்லனும்:
“சொன்னேன். “நீங்கள் டாக்டராக இருக்கிறதுக்காக இந்த பங்களாவும் காரும் வரலை, என் ஹஸ்பெண்டா இருக்கிறதுக்கு தான் இந்த வசதி எல்லாம் எனவே என் ஹஸ்பெண்டா உங்க பொறுப்பை நிறைவேற்றுங்க. அதுபோதும்” என்று பட்டென்று பேசுறா. என்னை அவ அடிமை மாதிரி நினைக்கிறார், தன்னை விட உயர்ந்த இடத்தில் பெண் எடுக்கக் கூடாது”: பெருமூச்சோடு முடித்தான்.
சரி இப்ப சண்டை போட்டுக்கிட்டு வந்திட்டயா?' '
“இல்லை! எங்களுக்கு மனஸ்தாபம் முற்றவுமே நான் தனியா ரூம் எடுத்து போயிட்டேன். தனியாகத் தான் இரண்டு மாசமா இருக்கேன் உன்கிட்டேயும் அப்பா கிட்டேயும் மன்னிப்புக் கேட்கனும்ணு நினைச்சேன். அதோட இங்க நம் ஊரிலுள்ள ஹாஸ்பிடலில் ஒரு இடம் இருக்கிறதாம், அதற்கு ட்டிரை பண்ணப்போறேன் எனக்காக ஜெபம் பண்ணுக்கா!'
ஆச்சரியமாக அவனை பார்த்தாள். கவிதா
பணம் பணம்ன்னு பேசுறவன் ஜெபம்ன்னு பேசுறான்னே என்று நினைக்கிறாயா? ரவி இல்லை நான்!
*எப்படி ரவி?” ஆவலாக வினவினாள்.“ஏன் ? எப்படி? என்று கேட்காதே? ஒரு பெரியகதை! சாவகாசமாகப் பேசலாம். நான் இப்பொழுது இயேசுவின் மந்தையிலுள்ள ஆடு” என்று கூறவும், வீட்டிற்கு அருகில் வந்துவிட்டனர்.
தமக்கையும், தம்பியும் வீட்டினுள் அடியெடுத்து வைத்தனர்,
இதன் தொடர்ச்சி இலக்கை நோக்கி இலட்சியப் பயணம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.