பெஞ்சமின் பிராங்க்ளின் இவ்வாறாக கூறினார்: "நீங்கள் திட்டமிடத் தவறினால், நீங்கள் தோல்வியடையத் திட்டமிடுகிறீர்கள்." திட்டமிடல் மற்றும் ஆயத்தம் வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்கள். திட்டமிடாததால் அதிகமான மக்கள் தோல்வியடைகிறார்கள். பத்து கன்னிகளின் உவமையில், பாதி பேர் திட்டமிடுதலிலும் ஆயத்தத்திலும் தவறிவிட்டனர் (மத்தேயு 25:1-13).
1) சரியான இடம்:
பத்துக் கன்னிகைகளும் மணமகன் வரும் சரியான இடத்தில் இருந்தனர்.
2) சரியான நேரம்:
அவர்கள் அனைவரும் மணமகனைப் வரவேற்க சரியான நேரத்தில் இருந்தனர். உண்மையில், அவர்கள் சரியான நேரத்தில் அங்கிருந்தனர், தாமதிக்கவில்லை. அதுமாத்திரமல்ல, மணமகன் வருகை பற்றிய அறிவிப்பு வெளியானதும் அவர்கள் விழித்திருந்தனர்.
3) சரியான ஐக்கியம்:
பத்து கன்னிகள் ஒன்றாக இருந்தார்கள். நல்ல ஐக்கியம் இருந்தது. போதுமான எண்ணெய் வைத்திருந்த ஐவரிடமும் எண்ணை கேட்கும் துணிச்சல் அந்த ஐவருக்கும் இருந்தது; அந்தளவு அவர்களின் உறவு பலமாக இருந்தது.
4) சரியான சாதனங்கள்:
அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான சாதனம் அல்லது கருவி ஒரு விளக்கு. புத்தியில்லாத கன்னிகளிடமும் விளக்கு இருந்தது. அவற்றில் கொஞ்சமாக எண்ணெய் இருந்தது, அவற்றை வைத்து ஔியேற்ற முடிந்தது.
5) சரியான நோக்கம்:
அவர்கள் கூடியிருந்த நோக்கம் சிறப்பு வாய்ந்தது. மணமகனை வரவேற்பதற்கு பத்து கன்னிப்பெண்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆயத்தம் என்ற ஒன்று இல்லாததால் கன்னிகைகள் புத்தியில்லாதவர்கள் ஆனார்கள். புத்திசாலிகளுக்கும் முட்டாள்களுக்கும் உள்ள வித்தியாசமும் ஆயத்தம் என்பது தான். முதலாவதாக, மணமகன் வர தாமதமானால் இரவு முழுவதும் எண்ணெய் போதுமானதாக இருக்குமா என சோதிக்கத் தவறிவிட்டனர். இரண்டாவதாக, அவர்கள் கூடுதல் எண்ணெயை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டார்கள் அல்லது அலட்சியமானார்கள். மூன்றாவதாக, கூடுதல் எண்ணெய் குவளையை எடுத்துச் செல்வதற்கு வெட்கப்பட்டார்களா? நான்காவதாக, எண்ணெய் வாங்குவதற்கு அவர்களிடம் பணம் இருந்தது, ஆகையால் அவர்கள் நள்ளிரவில் வியாபாரிகளை அல்லது எண்ணெய் கடைக்காரர்களைத் தேடிச் சென்றனர். ஐந்தாவதாக, அவர்கள் வாங்கக்கூடிய இடங்களையும் அறிந்திருந்தனர். ஆனாலும், முன்கூட்டியே திட்டமிட்டு, ஆயத்தமாயிருக்க தவறிவிட்டனர். ஆறாவதாக, உண்மையில், அவர்கள் போதுமானளவு புத்தியுடன் இருந்தனர்; ஆம், தாமதமான நேரங்களில் எண்ணெயைப் பெற்றுத் திரும்பினர். ஏழாவதாக, கதவுகள் மூடப்பட்டன.
அவர்கள் தங்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறினார்களா அல்லது கதவுகளை தட்டினார்களா அல்லது இரண்டையுமே அடித்துக் கொண்டார்களா?
நான் புத்தியுள்ள நபரா அல்லது புத்தியற்ற சமர்த்தனா?
Author: Rev. Dr. J. N. Manokara