கண்ணியத்திற்கான தேடல்

கண்ணியத்திற்கான தேடல்

அஸ்வினி ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண், அவள் வேட்டையாடுதல், பாசி ஊசி மாலை மணிகள் போன்ற அணிகலன்கள் விற்பதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறாள். அப்பெண் தான் இருக்கும் ஊரில் விசுவாச இயக்கத்துடன் இணைந்து அரசாங்கம் நடத்தும் இலவச உணவை சாப்பிடச் சென்றார்.  அங்கு அவளுக்கு உணவும் மறுக்கப்பட்டது, அவளுக்கான கண்ணியமும் மறுக்கப்பட்டது. அதற்கு அவள் வெளிப்படுத்திய கோபமும்  ஆக்ரோஷமும் வீடியோவாக வெளியாகி அது பெரும் வைரலானது.  உடனடியாக தமிழக அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் அவருடனும் அச்சமூகத்துடனும் மதிய உணவு சாப்பிட்டார் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, அக்டோபர் 29, 2021). 

1) புறக்கணிக்கப்பட்ட சமூகம்:
மதங்களால் அங்கீகரிக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களாக அவர்கள் உள்ளனர்;  அவர்களை அசுத்தமானவர்கள், பழமையானவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தி, மனிதநேயமற்ற மனிதர்கள் போல நடத்துகிறார்கள்.  அவர்களின் கடந்த கால பாவங்கள் அவர்களை இந்த கீழ் நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் நம்ப வைக்கப்படுகின்றனர். மேலும் விசுவாசத்துடன் கீழ் நிலையில் இருக்கப்பட வேண்டும் என்றும் அதற்குமேல் ஆசைப்பட முயற்சிக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு சொல்லப்படுகிறது.

2) உயர்ந்த விருப்பமுள்ள சமூகம்:
இருப்பினும், இந்த மக்கள் கடந்தகால பாவங்கள் மற்றும் மத உயரடுக்கால் ஒதுக்கப்பட்டது பற்றியதான கருத்தை நிராகரிக்கின்றனர்.  சுவிசேஷத்தின் வரம் என்னவெனில் உயர்ந்ததை வாஞ்சிக்கும் திறனாகும்.  

3) கண்ணியத்தை விரும்பும் சமூகம்:
கிணற்றருகில் இருந்த சமாரியப் பெண்ணிடம் ஆண்டவர் இயேசு பேசியபோது, அவளுக்கான மரியாதையை வழங்கினார்.  உண்மையில், ஒரு ஆண், அதிலும் ஒரு யூதர், அதுமட்டுமா அவர் ஒரு ரபீ… இப்படியிருந்தும் இவ்வளவு கண்ணியமாய் நடத்துகிறாரே என்பதாக அவள் ஆச்சரியமடைந்தாள்

4) சமத்துவம் விரும்பும் சமூகம்:
யூதர்கள் சமாரியர்களை சமமாக நடத்தாததால், பல சாதிக் குழுக்கள் சமமாக நடத்தப்படவில்லை.  ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சிருஷ்டிப்பை பற்றியதில், எல்லா மனிதர்களும் முதல் ஜோடியான ஆதாம் ஏவாளிடமிருந்து வந்தவர்கள் என்ற உண்மையை நமக்கு வழங்குகிறது. 

5) நீதியை விரும்பும் சமூகம்:
அஸ்வினி நீதிக்காக ஆசைப்படலாம்.  மதம் மற்றும் சமூக சூழலில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியச் சட்டத்தின்படி அவளுக்கு நடந்தது சரியல்ல என்பதை அவள் புரிந்துகொண்டாள்.  அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் சந்ததியினரை விடுவிக்கும் செய்தியுடன் பார்வோனை சந்திக்க தேவன் மோசேயை அனுப்பினார். ஆம், என் ஜனங்களைப் போக விடுங்கள் என  யாத்திராகமம் 9:1ல் வாசிக்கிறோமே. 

6) ஊடக சமூகம்:
அஸ்வினி தனது குறைகளை சமூக ஊடகங்களில் தெரிவிக்க தைரியம் பெற்றிருந்தாள்.

7) ஆவி்க்குரிய உரிமைகள் உள்ள சமூகம்:
சமாரியன் பெண்ணுக்கு சத்தியத்திலும் ஆவியிலும் ஆராதிக்கும் ஆவிக்குரிய உரிமைகள் இருப்பதாக தேவன் உறுதியளித்தார் (யோவான் 4:24).   

ஆவிக்குரிய சுதந்திரம் சமூக சுதந்திரத்தை உறுதி செய்கிறது;  நிரந்தர அடிமைத்தனத்தில் இருக்கும் அனைவருக்கும் இதை அறிவிப்போமா.

கிறிஸ்துவின் சுதந்திரத்திற்கு நான் நன்றியுள்ள நபரா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download