சமாரியனின் அருட்பணி

அருட்பணியில் ஈடுபடுவதற்கான ஏழு படிநிலை செயல்முறையை சமாரியன் உவமை நமக்கு வழங்குகிறது (லூக்கா 10:29-37).

நிறுத்தினார்:
ஆசாரியர் மற்றும் லேவியரைப் போலல்லாமல், இறக்கும் தருவாயில் இருந்த மனிதன் இடத்திற்கு சமாரியன் வந்து நின்றார்.  எல்லாமே அவசரமாகி விட்டு காலக்கட்டத்தில், மக்கள் எல்லா கவனச்சிதறல்களையும் புறக்கணித்து, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மட்டும் தொடர்கின்றனர்.  நிற்க நேரமில்லை, நேரத்தை வீணடிக்க முடியாது. ஆனால் இந்த சமாரியன் உவமையில் அவர் தொழிலதிபதிராக இருந்தும், பணி செய்ய அநேகம் இருந்துமே உதவுவதற்காக நின்றார்.

இரங்கினார்:
யூத மதத் தலைவர்கள் புனித சுருள்களில் ‘உன்னை நேசிப்பது போல பிறனை நேசி’ என்று எழுதப்பட்ட கட்டளையை வைத்திருந்தனர். சமாரியன் காகிதத்தில் அல்ல தனது இருதயத்தில் எழுதியிருந்தார்; அதனால் தான் உடனடியாக இரக்கம் கொண்டார்.

கவனித்தார்:
சமாரியன் ஒதுங்கி தூரமாக செல்லவில்லை, ஆனால் துன்பத்தில் இருந்த மனிதனிடம் நெருங்கிச் சென்றார்.  அவர் தான் பயணம்  செய்த கழுதையிலிருந்து இறங்கி வந்து ரத்தம் கொட்டிய மனிதனைத் தொட்டார்.  வேலையாட்களோ, உதவியாளர்களோ இல்லை, அவரே அனைத்தையும் செய்தார்.

சுத்தமாக்கினார்:
காயம் திராட்சை இரசம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது, இது கிருமி நாசினி, மேலும் வலியை தணிவிக்கும் எண்ணெய் தடவி, காயங்களை கட்டினார்.  மதுவும் எண்ணெய்யும் விலையுயர்ந்த பொருட்கள், அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்தார், ஆனால் அவற்றை தேவைப்படுபவர்களுக்கு பயன்படுத்தினார்.  இது உண்மையில் ஒரு தனிப்பட்ட தியாகம்.

அரவணைத்தார்:
முதலுதவியை முடித்துவிட்டு, காயம்பட்டவரை கழுதையின் மீது ஏற்றினார்.  அந்த மனிதன் மிகவும் பலவீனமாக இருந்ததால் அவனால் தனியாக நடக்க முடியவில்லை.   கழுதையின் மேலிருந்து விழுந்துவிடாதபடி காயப்பட்ட மனிதனைப் பிடித்துக் கொண்டு சமாரியன் நடக்க வேண்டியிருந்தது.

காத்துக்கொண்டார்:
சமாரியன் காயமடைந்த மனிதனை பாதுகாப்பான இடமான, ஒரு சத்திரத்திற்கு கொண்டு வந்தார்.  இப்போது, ​​காயமடைந்த நபர் கொள்ளையர்களிடமிருந்தும், ரத்தம் வழியும் காயங்களிலிருந்தும் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார்.  பிஸியான தொழிலதிபர் காயமடைந்த நபருடன் ஒரு நாள் தங்கியிருந்து அவர் நலமடைவதை உறுதி செய்தார்.

கிரயம் செலுத்தினார்:
காயமடைந்தவரை சமாரியன் திரும்பி வரும் வரை கவனித்துக் கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகை விடுதிக் காப்பாளரிடம் கொடுக்கப்பட்டது.  அவர் காயத்தை ஏற்படுத்தவில்லை, அதைச் செய்ய எந்த வகையிலும் அவர் கடமைப்படவில்லை, ஆனாலும் அவர் செய்தார்.

 நான் அருட்பணியில் எவ்வாறு ஈடுபட்டுள்ளேன்?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download