ஓய்வுநாள் ஒரு பலம்

வயது மூத்த தொழிலதிபர் ஒருவர், இளம் தொழிலாளர்களைப் பார்த்து இவர்களைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது என்பதாக புலம்பினார். என்னவென்றால், அவர்கள் ஐந்து நாட்கள் வேலை பார்ப்பதும் பின்னர் வார இறுதியில் விடுமுறையைக் கோருவதும்; ஐந்து நாட்கள் கடினப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பொழுதுபோக்கிலும், உல்லாசத்திலும், சாப்பாட்டிலும் வீணடிக்கிறார்கள் என்றார். உழைப்பிலிருந்து வரும் பணத்தைச் சேமிப்பதில்லை, பின்பதாக ஒவ்வொரு வாரமும் முன்பணம் பெற அவரிடம் வந்து நிற்பதையும் தெரிவித்தார்.

சிருஷ்டிப்பு:
தேவன் ஆறு நாட்களில் உலகைப் படைத்து ஏழாவது நாளில் ஓய்வெடுத்து அதை பரிசுத்தமாக்கினார். மனிதர்களுக்கும் வாரத்தின் ஏழாவது நாளை ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். உலகம் முழுவதும் உள்ள அனைத்து கலாச்சாரங்களிலும், நாடுகளிலும் ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள். ஆக சிருஷ்டிப்பின் விவிலியக் கணக்கு உண்மை என்பதை இது குறிக்கிறது.  ஓய்வு நாள் என்பது ஓய்வுக்காகவும் மற்றும் நினைவூட்டுதலுக்காகவும் (பிரதிபலிப்பு) ஆகும். அதன் முக்கிய அம்சம் என்னவென்றால் மனிதர்கள் வேலைக்காகவோ அல்லது தொழிலுக்காகவோ படைக்கப்பட்டவர்கள் அல்ல, மாறாக தேவனுக்காக படைக்கப்பட்டவர்கள். ஆம், உலகம் முழுவதும், எல்லா மனிதர்களுக்குமான தேவக் கட்டளை ஓய்வுநாள் ஆகும், இது கர்த்தருக்குள் ஓய்வெடுப்பது மற்றும் தேவனை ஆராதிக்கும் ஒரு நாள்.

வார இறுதி:
சாத்தான் ஓய்வுநாளுக்கு எதிராக வார இறுதி என உருவாக்க கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தை உருவாக்கினான்.  வாரஇறுதி ஓய்வுக்காக என நூதனமான முறையில் மனிதகுலத்தை பலவீனப்படுத்தினான். அதாவது தேவனுக்கு பதிலாக சாத்தான் வெற்றிகரமாக 'தனக்கு' என மாற்றினான். ஆம், ஓய்வுநாள் தேவனை மையமாகக் கொண்டாலும், வார இறுதி நாட்கள் சுயத்தை மையமாகக் கொண்டது.

கொண்டாட்டமான சமூகம்:
ஆராதனை, வார்த்தை, சாட்சி மற்றும் தேவ விருப்பம் ஆகியவை கைவிடப்பட்டன. சபைக் கூட்டங்கள் எப்போதும் தேவ பிரசன்னம், வார்த்தை மற்றும் ஐக்கியம் ஆகியவற்றின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆனால், இந்த இன்பமான சமூக வாழ்க்கை புறக்கணிக்கப்படுகிறது. பல விசுவாசிகள் சபை ஆராதனை இரண்டு மணி நேரத்திற்குள் முடிந்து விட வேண்டும் என்பதாகவே விரும்புகிறார்கள், அப்போதுதானே மற்ற காரியங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும். ஆக ஓய்வுநாள் என்பது வெளியே சென்று சாப்பிட்டு ஜாலி பண்ணுவது, பொழுதுபோக்குவது, மகிழ்ச்சியாக இருப்பது மற்றும் உல்லாசப் பயணம் செல்வது என உலகத்தின் வழக்கமாகிவிட்டது.

மிகை அல்லது உண்மை:
ஊடகங்கள் அதாவது வெகுஜன மற்றும் சமூக ஊடகங்கள் ஆகிய இரண்டும் வாரயிறுதியின் மிகைப்படுத்தலைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றன. மிகை என்பது உண்மையானது (சத்தியம்) அல்ல, உண்மையாக இருக்கவும் முடியாது. வாழ்க்கையின் நோக்கமே சந்தோஷமாக இருப்பது என்ற கட்டுக்கதை மாயை. ஆனாலும் எதை தெரிந்து கொள்வது என்பது இன்னும் நம்முடையதே; ஆம், மிகைப்படுத்துதலையா அல்லது சத்தியத்தையா?.

பலப்படுத்தப்பட்டதா அல்லது பலவீனமானதா:
ஓய்வுநாளைக் கொண்டாடுபவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வலுப்பெற்று, நித்தியமான பரலோகத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். ஓய்வுநாளை புறக்கணித்து வார இறுதியை கொண்டாடுபவர்கள் படிப்படியாக பலவீனமடைந்து அழிந்து போவார்கள்.

 நான் ஓய்வுநாளை கொண்டாடுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download