கடைசி நாட்களின் முரட்டாட்டம்

தினந்தினம் நாம் நம்மை பயமுறுத்தும் செய்திகளை கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். ஆம், இன்றைய காலங்களில் ஒழுக்க விழுமியங்கள், பணிவு, சகிப்புத்தன்மை, இரக்கம், மன்னிப்பு, தயவு மற்றும் அன்பு என்பதான நற்குணங்கள் எல்லாம் மோசமாகிக் கொண்டே வருவது என்பது சோகமானதே. உத்தரப் பிரதேசம், புலந்த்ஷாஹர் பகுதியில் ஒரு மருத்துவரின் எட்டு வயது மகன், அவரது மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்கள் இருவரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். காரணம் என்னவென்றால், அவ்விருவரின்  குறைவான செயல்திறன் காரணமாக அந்த மருத்துவர் அவர்களை பணிநீக்கம் செய்திருந்தார், அவரை பழிவாங்குவதற்காக இப்படி ஒரு காரியத்தைச் செய்திருந்தார்கள் (என்டிடிவி செய்தி ஜனவரி 31,2022). ஆச்சரியமூட்டும் அல்லது நம்மை வியப்பிற்குள்ளாக்கும் விஷயம் என்னவெனில், இப்போதெல்லாம் குற்றம் செய்பவர்கள், அது முதல் முறை குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் கூட, எந்த வருத்தமும் வெட்கமும் அல்லது மனந்திரும்புதலும் அடைவதில்லை.  கடவுள் பயம், சமூக பயம், சட்ட பயம் அல்லது விளைவுகளைப் பற்றிய பயம் என எதுவுமே இல்லை. இப்படியாக கடைசி நாட்களில் எத்தகைய மனிதர்கள் இருப்பார்கள் என பவுல் ஒரு விரிவான பட்டியலுடன் விவரித்துள்ளார் (2 தீமோத்தேயு 3:1-7). 

1) பணப்பிரியர்கள்:
மருத்துவ வல்லுநர்களாக அல்லது மக்களாக அதாவது நோயாளிகள் மற்றும் மருத்துவமனையின் உரிமையாளர் உட்பட, மனிதகுலத்திற்குச் செய்யும் சேவையை விட இருவரும் பணத்தை தான் அதிகம்  நேசித்தனர்.

2) பெருமை மற்றும் ஆணவம்:
அவர்கள் சரியாக வேலை செய்யாததால் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.  அதில் காயப்பட்டனர் மற்றும் கோபமடைந்தனர்.  அவர்கள் செய்த வேலையைக் குறித்து தங்களைத் தாங்களே தற்பரிசோதனை செய்வதற்குப் பதிலாக, அவர்கள் பழிவாங்குவதற்கான ஒரு மோசமான சதித்திட்டத்தை தீட்டினார்கள்.

3) துஷ்பிரயோகம்:
இந்த இரண்டு பேரும் துஷ்பிரயோகம் செய்தனர்.  பொதுவாக, இது வாய்மொழி துஷ்பிரயோகத்தில் தொடங்குகிறது, பின்னர் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அது உடல் வன்முறையாகவும் மாறும்.  ஆனால் இவர்களுக்கோ அது இரக்கமற்ற கொலையில் முடிந்தது.

4) இதயமற்ற செயல்:
நிச்சயமாக, சரீரளவில் அவர்கள் நன்கு செயல்படும் இதயத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் மற்றவர்கள் மீது அன்பு, அக்கறை, இரக்கம், தயவு,  அனுதாபம் காட்டும் மனம் இல்லை.  எப்படி காட்டுமிருகங்கள் பலவீனமான ஆடுகளையோ மான்களையோ வேட்டையாடுகிறதோ, அதுபோல ஒரு சிறு பையனைக் கடத்திச் சென்று இரக்கமில்லாமல் கொன்றனர்.

5) நன்றியற்றவர்கள்:
இந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் பணி செய்து அதன்  பயனாளிகளாக இருந்தவர்கள்.  தொற்றுநோய் காலத்தில் கூட, அநேகர் வேலையிழந்த நிலையிலும் அவர்களுக்கு பணி இருந்திருக்கும். அதற்கு அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர்.

6) மிருகத்தனம்:
பிறரைக் காயப்படுத்துவது, பிறருக்குக் காயம் ஏற்படுத்துவது கூட மனிதனின் இயல்பான போக்கல்ல.  பெரும்பாலான மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழவே விரும்புகிறார்கள்.  இந்த மனிதர்கள் ஒரு சிறு பையனிடம் அளவுக்கதிகமாக கொடூரமாக நடந்து கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.

7) துரோகம்:
பொதுவாக மருத்துவத் தொழிலில் இருப்பவர்களை மக்கள் கடவுள்களாகவும் அல்லது தேவதூதர்களாகவும் எண்ணுவதுண்டு, ஏனென்றால் அவர்கள் குணப்படுத்துவதையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறார்கள்.  இருப்பினும், இந்த இரண்டு மனிதர்களும் மரணத்தின் வியாபாரிகளாக மாறினர்.

நான் தேவனை நேசிக்கிறேனா மற்றும் தீமையை வெறுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download