மார்ச் 6, 1901 அன்று ஒரு சிறிய பெண் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுவதிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள். அது ஒரு கொடுமையான பாலியல் அடிமைத்தனமும், துஷ்பிரயோகங்களும் மற்றும் துன்பமுமான வாழ்க்கை. அந்த சிறுமி ஓடி வந்து ஏமி கார்மைக்கேல் அம்மையாரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அவளிடமிருந்து பிரிய மறுத்து விட்டாள். சிறுமியை துரத்தி வந்தவர்கள் அவளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தனர். சிறுமி அழுது கொண்டே செல்ல மறுத்துள்ளார். ஏமி கார்மைக்கேல் அம்மையாரும் அனுப்ப மறுத்துவிட்டார். அந்த ஊர் ஜனங்களோ மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெய்வ கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் பயமுறுத்தினார்கள். ஆனால் ஏமி கார்மைக்கேல் அம்மையாரோ ஒரு சிங்கத்தைப் போல தைரியமாக இருந்து சிறுமியைப் பாதுகாத்தது மட்டுமன்றி அதுபோன்ற நூற்றுக்கணக்கான சிறுமிகளைக் காப்பாற்றினார். தேவனின் நீதியுள்ள, தெய்வீக ஊழியராக, அவள் ஒரு சிங்கத்தைப் போல தைரியமாக இருந்தாள். "ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்" (நீதிமொழிகள் 28:1). நீதிமான்கள் பாக்கியவான்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (சங்கீதம் 32:1, ரோமர் 5:1). நீதிமான்கள் சமூகத்திலும் சமுதாயத்திலும் உள்ள தீமையையும் அக்கிரமத்தையும் எதிர்கொள்வதற்கு சிங்கங்களைப் போல தைரியமாக இருக்கிறார்கள்.
யூதாவின் சிங்கம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘யூதா கோத்திரத்தின் சிங்கம்’ (வெளி 5:5) என்று அழைக்கப்படுகிறார். சீஷர்கள் அவரின் பிள்ளைகளைப் போல தேவனின் பண்புகளைக் கொண்டுள்ளனர்.
சிங்கத்தின் குகை:
தானியேல் சிங்கங்களுக்கு பயப்படவில்லை. தானியேலை அப்படி தண்டிக்க தரியு ராஜா பயந்தார். ஆனால் தானியேலின் நம்பிக்கை என்னவென்றால், நான் தேவனுக்குள் பாதுகாப்பாக இருக்கிறேன், இதிலிருந்து விடுவிக்கவோ அல்லது அவரது நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லவோ தேவனால் கூடும் (தானியேல் 6).
தேவ பயம்:
கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதாகமம் போதிக்கிறது (நீதிமொழிகள் 1:7; 2:6). "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்" (நீதிமொழிகள் 14:26-27).
மரண கண்ணி:
நீதிமான்களை மரண கண்ணிகள் இறுக சுற்றிக் கொண்டாலும், தேவன் பாதுகாப்பார் என்ற விசுவாசம் அவர்களுக்கு உண்டு (சங்கீதம் 91:3; 116:3). தாவீது எப்படி கோலியாத்துக்கு பயப்படவில்லையோ அதுபோல, ஏமி கார்மைக்கேல் அம்மையார் அந்த கும்பலுக்கு பயப்படவில்லை.
சத்தியம்:
நீதிமான்கள் சத்தியத்திற்கு சாட்சிகள். அவர்கள் பொய், தவறான காரியங்கள், துன்மார்க்கம், தீமைக்கு பயப்படுவதில்லை. தைரியத்துடனும் துணிவுடனும், அவர்கள் எல்லா இடங்களிலும் தீமையை எதிர்கொள்கிறார்கள்.
ஏமி கார்மைக்கேல் பாரம்பரியத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், சமூக அவலம் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு கல்வியறிவையும் ஏற்படுத்தினார், இதன் விளைவாக அமைப்புகளிலும் சட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது.
நான் சிங்கம் போல் தைரியமான நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்