உபாகமம் 33:27 (26-39) அநாதி தேவன் உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்
சங்கீதம் 46:7,11 சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.
சங்கீதம் 90:1 தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
சங்கீதம் 94:22 கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் கன்மலையுமாயிருக்கிறார்.
சங்கீதம் 18:2; சங்கீதம் 59:9,16,17; சங்கீதம் 62:2,6; சங்கீதம் 144:2
1. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம்
சங்கீதம் 9:9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
சங்கீதம் 69:29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக
சங்கீதம் 14:6 சிறுமைபட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதால்... அலட்சியம்பண்ணினீர்கள்.
2. எளியவனுக்கு அடைக்கலம்
ஏசாயா 25:4 நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்கு தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
சங்கீதம் 107:41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார்.
சங்கீதம் 72:12,13; யோபு 5:15; சங்கீதம் 113:7;எரேமியா 20:13
3. அபிஷேகம்பண்ணினவனுக்கு அடைக்கலம்
சங்கீதம் 28:8 கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
1சாமுவேல் 26:23 கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். (தாவீது- சவுல்)
Author: Rev. M. Arul Doss