வைய விரிவலை (WWW) நவீன வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியுள்ளது. வைய விரிவலை (WWW) இணைப்பு, தகவல் தொடர்பு மற்றும் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு அற்புதமான கருவியாக இருக்கலாம். நாம் ஞானமாக இல்லாவிட்டால், மரணத்திற்கு ஒத்த காயங்களாக நம்மை நாமே காயப்படுத்தும்படியாகி விடும். “எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்" (நீதிமொழிகள் 1:17-18).
1) வைய விரிவலை (World Wide Web):
உலகத்தின் கொள்கைகளுக்கு அதாவது உலகத்தினாலுண்டானவைகளான கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை (1 யோவான் 2:15-16) என்பதற்கு எதிராக யோவான் எச்சரிக்கிறார். மத்தேயு 7: 13 &14 ல் கூறப்பட்டது போல விரிவும் விசாலமுமான வழி மரணத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்; இடுக்கமும் நெருக்கமுமான வழி ஜீவனுக்கு வழிவகுக்கிறது. அறியாமையில் இருப்போரை, கவனக்குறைவானோரை, அலட்சியமான மக்களைப் பிடிக்க போடப்பட்ட வலையல்லவா இந்த வைய விரிவலை (WWW).
2) உலகம், துன்மார்க்கம், வனாந்தரம் (Worldliness, Wickedness, Wilderness):
டிஜிட்டல் மீடியா இளைய தலைமுறையினரை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதித்துள்ளது. உலகளாவிய வலை (WWW) சரியாக கையாளப்படாவிட்டால், அது மற்றொரு WWW க்கு வழிவகுக்கும். உலக ஈர்ப்பு ஒரு நபரை துன்மார்க்கத்தில் சிக்க வைக்கும். சமூக ஊடகங்களில் பங்கேற்கும் பெரும்பாலானவர்கள் உண்மையைப் புறக்கணிக்கின்றனர், ஏனெனில் இந்த ஊடகம் உண்மைக்குப் பிந்தைய ஊடகம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிகளவில் அல்லது உயர் இணைப்பு இருந்தாலும், பலர் தனிமை மற்றும் பிற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சூனியம் உட்பட பொல்லாத (சாத்தானின்) நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம்.
3) அழுகை, புலம்பல் மற்றும் அலறல் (Weeping, Wailing and Wallowing):
நன்மை தீமை பற்றிய அறிவை அளிக்கும் 'ஆப்பிள்' என்று கூறப்பட்டது அழிவு, பேரழிவு மற்றும் மரணத்தின் பாதையில் செல்கிறது. ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட எளிய அல்லது முட்டாள்களின் விளைவு அழுகையையும் புலம்பலையும் அனுபவமாக்கி விடும். அவர்கள் தங்கள் பாவம், நம்பிக்கையின்மை, மாயை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் மூழ்குவார்கள். இறுதியில், அக்கினி கடலில் முடிவடைகிறது.
கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்காக ஜெபித்தது போல் நமக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறார். "நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்" (யோவான் 17:15). தேவனின் கிருபையும் பாதுகாப்பும் இல்லாவிட்டால், எவரையும் சமூக ஊடகங்களின் கருந்துளைக்குள் மூழ்கடித்து விடும். கர்த்தர் நம்மை வழுவாமல் காக்கும்படி, நாம் மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் (யூதா 24-25).
சாத்தானின் புத்திசாலித்தனமான தந்திரத்தை முறியடிக்கும் அளவுக்கு நான் ஞானவானா?
Author : Rev. Dr. J. N. Manokaran