சித்தத்தைச் செய்யும் கர்த்தர்

சங்கீதம் 135:6 (1-8) வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார். 
சங்கீதம் 115:3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். 

1. தமக்குச் சித்தமானவனை அழைக்கிறார்
மாற்கு 3:13 (13-19)  இயேசு: ஒரு மலையின்மேல்ஏறி, தமக்குச் சித்தமான வர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். (சீடர்களை அழைத்தல்)
1தெசலோனிக்கேயர் 5:24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர் அவர் அப்படியே செய்வார்
ஏசாயா 45:3 உன்னைப் பேர்சொல்லி அழைக்கிற தேவன்

2. தமக்குச் சித்தமானவனை சுத்தமாக்குகிறார்
மத்தேயு 8:3;  மாற்கு 1:40,41; லூக்கா 5:12,13  இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

3. தமக்குச் சித்தமானவனை உயர்த்துகிறார்
தானியேல் 5:19,21 அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார்; தமக்குச் சித்தமான வனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.
தானியேல் 4:17,25,32 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார். 
யாக்கோபு 4:10; சங்கீதம் 27:5; 37:34; அப்போஸ்தலர் 13:22 (தாவீது)

4. தமக்குச் சித்தமானவனை உயிர்ப்பிக்கிறார்
யோவான் 5:21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். யோவான் 11:11-45 லாசருவை எழுப்புதல்
ரோமர் 8:11; யோவான் 6:39,40; எபேசியர் 2:1,5

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download