1. நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
லேவயராகமம் 19:2 (1-18) உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
1பேதுரு 1:15-16 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
லேவியராகமம் 11:44-45; லேவியராகமம் 20:7,8,26; சங்கீதம் 22:3
2. நீங்களும் இரக்கமாயிருங்கள்
லூக்கா 6:36 (20-38) உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள்.
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்...
யாத்திராகமம் 33:19; ரோமர் 9:15,18; உபாகமம் 4:31; சங்கீதம் 78:38; சங்கீதம் 103:8; சங்கீதம் 145:8
3. நீங்களும் அன்பாயிருங்கள்
யோவான் 13:34-35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயி ருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
யோவான் 15:9,12,19; 1பேதுரு 4:8; 1யோவான் 3:23; 1யோவான் 4:7
4. நீங்களும் சற்குணராயிருங்கள்
மத்தேயு 5:48 (37-48) பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குண ராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
மத்தேயு 19:21 நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு.
5. நீங்களும் மன்னியுங்கள்
எபேசியர் 4:32 ஒருவொருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். மத்தேயு 18:35
6. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்
ரோமர் 15:7 (1-7) தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
Author: Rev. M. Arul Doss