கர்த்தரே நமக்கு நிழல்

சங்கீதம் 121:1-8   கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார் 
ஏசாயா 25:4 நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும்...வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.  
சங்கீதம் 91:1 உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்.

1. செட்டைகளின் நிழல்
சங்கீதம் 36:7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்
சங்கீதம் 17:9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும்... பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும் 
சங்கீதம் 57:1; சங்கீதம் 63:7; ரூத் 2:12; மத்தேயு 23:37

2. கன்மலையின் நிழல்
ஏசாயா 32:1-5  அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்
சங்கீதம் 27:5; ஏசாயா 26:4 
3. கரத்தின் நிழல்
ஏசாயா 49:2 அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடி வைத்தார்
ஏசாயா 51:16 நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன். யாத்திராகமம் 33:22 

4. மரத்தின் நிழல்
உன்னதப்பாட்டு 2:3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக் கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், 
5. மேகத்தின் நிழல்
மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download