சங்கீதம் 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 73:1; சங்கீதம் 100:5; சங்கீதம் 106:1; சங்கீதம் 107:1; சங்கீதம் 118:1; சங்கீதம் 118:29; சங்கீதம் 135:3; சங்கீதம் 136:1; புலம்பல் 3:25
1. கர்த்தர் நல்லவர் (பாவிக்கு வழியைத் தெரிவிக்கிறார்)
சங்கீதம் 25:8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
லூக்கா 5:32 நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்
2. கர்த்தர் நல்லவர் (கிருபை மிகுந்தவருமாயிருக்கிறார்)
சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 103:8; சங்கீதம் 145:8; யோவேல் 2:13; யோனா 4:2 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்
3. கர்த்தர் நல்லவர் (நன்மை செய்கிறவராயிருக்கிறார்)
சங்கீதம் 119:68 தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர் உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்
அப்போஸ்தலர் 10:38 நன்மை செய்கிறவராயும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
லூக்கா 6:35 அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே
சங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்
4. கர்த்தர் நல்லவர் (நம்புகிறவர்களை அறிகிறார்)
நாகூம் 1:7 கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 18:30 தம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிறார்
சங்கீதம் 31:19; சங்கீதம் 34:22; சங்கீதம் 125:1; நீதிமொழிகள் 16:20; நீதிமொழிகள் 28:25; நீதிமொழிகள் 29:25
Author: Rev. M. Arul Doss