தொடர் - 12
தனராஜின் வீட்டு மாடி கலகலத்தது, கவிதாவைத் தவிர மற்றவர்கள் கூடியிருந்தனர்.
என்ன தனராஜ், இன்னும் யோசனை? நம்ம கவிதாவிற்கு ஏற்ற பையன். ஒரே பையன். இரண்டு வீட்டிற்கும் பிடிச்சுப் போச்சு. ஆண்டவரே இணைத்த உறவு, என்பது போல மேரேஜ்க்கு முன்பே அவள் பாட, அவன் செய்தி கொடுக்க எம்பெருமான் அருள் பொழிந்து விட்டார். பின்னே என்ன தயக்கம்? மேரேஜ் முடிக்க வேண்டியது தானே! கவிதா சம்மதிக்கலையா? மூச்சு விடாமல் பேசினார் டேவிட்.
மாமா! கவிதாக்கா முதலில் சம்மதிக்கத்தான் இல்லை நாங்கள் சம்மதிக்க வச்சிட்டோம்'? ரவி மகிழ்ச்சியாகக் கூறினான்.
டேவிட் இப்ப நான் கெளரவம் தேடுகிற தனராஜ் இல்லை. உனக்கு என் நிலை தெரியாது. நீயும் அவரும் பெண்கேட்டு வரவுமே நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கவிதா மேரேஜை நடத்தத் துடிக்கிறேன் ஆனால் பணம் இல்லையேப்பா! வீட்டை விற்று மேரேஜ் முடிக்கத் தீர்மானிச்சுட்டேன். இரண்டு மாதம் பொறுத்துக் கொள்ளச் சொல்லப்பா!” தனராஜ் வார்த்தைகள் கெஞ்சின.
“பையன் மிஷனரியா வட இந்தியா போகத் துடிக்கிறான் பெற்றோர் திருமணம் பண்ணி அனுப்பனும்னு துடிக்கிறாங்க நான் சொல்றதைக் கேளு அவ செயின் கம்மல் போட்டிருக்கா.”
செயினைக் கழட்டி சுதா குழந்தைக்குப் போட்டிட்டாளே டேவிட்'' வேதனையோடு கூறியவரை இடைமறித் தான் சுதாவின் கணவன் ராஜன்.
என்ன மாமா சொல்றீங்க? அண்ணி செயினை என் குழந்தைக்குப் போட்டு எடுத்திட்டுப் போக, அவ்வள கல்நெஞ்சனா என்னை நினைச்சிட்டீங்களா, மாமா? செயின் அண்ணியுடையது தான்,
என் மைனர் செயினை நான் தரேம்பா. என்னிடம் பேங்கில் கொஞ்சம் பணம் இருக்குப்பா! அதையும் எடுத்துக்கலாம்'” என்றபடி தன் செயினைக் கழட்டிக் கொடுத்தான் ரவி;
டேவிட்,” என் மகள் ஜாய்ஸி வேறு! கவிதா வேறு இல்லை. எங்கள் பூர்வீகச் சொத்து விற்றதில் என் பங்கு ரூ. 5000/ வந்திருக்கு அதை நான் கவிதாவிற்குத் தரேன். சிக்கனமா கல்யாணத்தை முடித்திடு. இந்த சம்பந்தத்தை விட்டுவிடாதே!”' தீர்க்கமாகச் சொன்னார்:
நான் ஒன்னும் என் மகளுக்குச் செய்ய வேண்டாமா? என் மகளை ஒதுக்கினதற்கு எனக்கு தண்டனையா டேவிட்?” அவர் கண்கள் கலங்கின. கண்ணீர் முத்துக்கள் அவர் கரத்திலிருந்த மோதிரங்கள் மீது விழுந்தன. .
நான் என் மோதிரங்களை மணமக்களுக்குக் கொடுத்து விடுகிறேன்” ஏதோ ஒரு நிம்மதியாகப் பேசினார். மேரி கண்கள் கண்ணீரில் நீந்தின. இது ஆனந்தக் கண்ணீர்
சரி! தனராஜ் சாமுவேலை எல்லா ஏற்பாடும் செய்யச்சொல்றேன். நான் வரட்டுமா?'' விடைபெற்றார் டேவிட்
கூடத்திலே டெலிபோன் மணி ஒலித்தது. தொலை பேசியைக் கையில் எடுத்த ரவியின் முகம் கலவரமடைந்தது.
“*மலர்க்கொடிக்கு சீரியஸாம்! நான் உடனே புறப்படுகிறேன். ரவி அவசரமாகக் கூறினான், ரவி புறப்பட்டான். தொடர்ந்து ஓரிரு மணி நேரத்தில் அனைவரும் புறப்பட்டனர்.
மல்லிகை நர்ஸிங் ஹோம்.
“என்னை மன்னிச்சிடுங்கத்தான். எனக்கு புத்திவந்திடுச்சு. டாக்டர் வேலை எப்படிப்பட்டதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்பாவும், அம்மாவும் சித்தி மகளுடைய குழந்தைக்கு ஞானஸ்நானத்திற்குப் பக்கத்து ஊருக்குப் போயிட்டாங்க. நான் ப்ரன்ஸ்களோடு டிராமாவிற்கு போயிட்டு வந்தேன். நடு ராத்திரி நல்ல வயிற்றுவலி தாங்க முடியலை. அழுதேன். வேலைக்காரி மீனா என் ரூம் வாசலிலேயே படுத்திருந்தா. என் அழுகைக் குரல் கட்டதுமே, உடனே எழுந்திருந்து பக்கத்துத் தெரு டாக்டருக்குப் போன் பண்ணினாள். அவர் தன் குடும்பத் துடன் சினிமாவிற்குப் போய் விட்டாராம். மற்றொரு டாக்டர் ஊரிலேயே இல்லை மீனா பக்கத்து பங்களா கதவுகளைத் தட்டியிருக்கிறாள். ஒருவரும் திறக்கவில்லை. தெய்வாதீனமாக ஒரு சைக்கின் ரிக்ஷா வந்திருக்கு அதை நிறுத்தி, என்னை ரிக்ஷாவில் ஏற்றி இந்த நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தாள். டாக்டரம்மா வீட்டிற்குப் போய் அவர்களை அழைத்துக் கொண்டு வந்தாள், அவ இல்லாட்டி உங்க. கிட்ட மன்னிப்பு கேட்காமலே இந்த உலகை விட்டுப் போயிருப்பேன். அவளது வாயை தன் கரத்தால் பொத்தியபடி “அப்படியெல்லாம். சொல்லாதே மலர்! நீ அமைதியா ரெஸ்ட் எடுக்கணும்”? ஆதரவாகச் சொன்னான் ரவி.
“நான் பேசினாத்தான் என் துக்கம் ஆறும். டாக்டர் வேலை எல்லாம், நேரம் பாராமல் உழைக்கிற சேவைங்கறதை நான் புரிஞ்சிக்கிட்டேன். முன்பெல்லாம் உங்களைக் குறை சொன்னேன். இனிமேல் உங்களுக்கு உறுதுணையா இருப்பேன். தடை சொல்லவே மாட்டேன். பணம் தான் எல்லாம்ன்னு நினைத்திருந்தேன். வேலைக்காரின்னு கேவலமாக நினைப்பேன். அவ நான் பெர்கனட்டா இருக்கிறதை எண்ணி என் அறை கிட்டேயேபடுத்திருக்கா. எவ்வளவு பாசம் அவளுக்கு? மனம்... மனம் தான் முக்கியம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். இனி ஒருவர் மனதையும் புண்படுத்தமாட்டேன். முள் கொடியா இருந்த நான் உண்மையிலேயே பெயருக் கேற்ற. மலர்க் கொடியா இருப்பேன்”? அவள் அகமும் முகமும் மலர்ந்தது. ரவியின் மனம் ஆனந்தக் கடலில். திக்குத் தெரியாமல் தவித்தது.
தாதர் விரைவு வண்டி தன்னுள் புதுமணத் தம்பதிகளைச் சுமந்தபடி புறப்பட்டது. தனராஜ் டேவிட், சாமுவேல் குடும்பங்களும், நண்பர்களும் கண் கலங்க விடை கொடுத்தனர். சென்னையைக் கடந்து ஆந்திர மாநிலத்தை ஊடுருவியது, தொடர்வண்டி. பசுமை நிறைந்த சோலைகள் பாங்குடன் காட்சியளித்தன. நீலவானம் நீண்டு கொண்டே சென்றது. இயற்கையில் தன் விழிகளைப் பதித்தவளை
கவிதா! தெரியாத இடம், புரியாத மொழி, பழகாத மக்கள் இவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற பயமா?” ஜெபக் குமாரின் வினா திரும்ப வைத்தது.
வேகமாகத் தலையை ஆட்டியவள், இல்லை பாவப்படுகுழியில் கிடந்த என்னை பாசத்துடன் தூக்கியெடுத்து எவர் கைவிடினும், எந்நிலைவரினும் இதுவரை என்னை விட்டு விலகாத என் அன்புத் தந்தை யேசு கூட வரும் போது நான் எதற்குப் பயப்பட வேண்டும்?”” புன்முறுவல் பூத்தாள் கவிதா
*கவிதா! எங்கோ பிறந்து: எப்படியோ வாழ வேண்டியவர்கள் தங்கள் செல்வத்தைத் துறந்து, பட்டம் பதவிகளை எறிந்து நம் நாட்டிற்கு மிஷனரிகளாக வந்து படாதபாடுகளைப் பட்டு, மரித்தார்கள் என்றால் நான் எந்நாட்டு மக்களைப் பற்றிக் கவலையின்றி வாழ்ந்தால்... நான் எவ்வளவு சுயநலக்காரன்! என்ற இந்த எண்ணம் தான் என் உள்ளத்திலே ஆத்ம தாகத்தை, தீராத தாகத்தைத் தோற்றுவித்தது. என் இலக்கு இந்தியா இயேசுவுக்கு! என் திருமணத்தைப் பற்றி நினைக்கவில்லை. ஏனென்றால் மிஷனரிப் பணி என்பது வசதிமிக்க வளமான வாழ்வு அன்று ஏற்றமிகு, எளிமையான தியாக வாழ்வு. எனவே அந்த வாழ்க்கைக்கு ஏற்ற மனைவி கிடைக்க வேண்டுமே என எண்ணிய நான் தனிமையாகவே காலத்தை ஓட்ட நினைத்தேன். கடவுளின் மிகப் பெரிய கிருபை! எனக்கேற்ற மனைவியாக உன்னைக் கொடுத்துள்ளார்!” அவன் வார்த்தைகள் உணர்ச்சிப் பிழம்பாக வெளி வந்தது.
“உன்னத இலட்சியத்தை உள்ளத்தில் பதித்த உத்தமரைக் கணவராக, கடவுள் தருவார் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. உங்களுடைய இலட்சியப் பயணத்திற்கேற்ற நல்ல துணையாக நான் வாழவும் நாம் இலக்கை அடையவும் எம்பெருமான் அருள் புரிவாராக!* அவள் வார்த்தைகள் இறைஞ்சின.
நிச்சயம் அருள்புரிவார்!” அவன் வார்த்தைகள் தீர்க்கமாக ஒலித்தன.
குஜராத்தின் சோன்காட்டில் உள்ள கமித் இனமக்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கிய இலட்சியப் பயணம் தொடர்ந்தது. இயேசு பிரான் இன்முகம் மலரக்காயம் தோய்ந்த தன் கரங்களை உயர்த்தி அவர்களை ஆசிர்வதித்தார்.
நன்றி!
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.