ஏசாயா 30:18 உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்
ஏசாயா 54:10(7-10) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும்... இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 55:7(6-13) துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக் காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்.
மத்தேயு 20:34 (29-34) குருடர்மீது மனதுருகினார்
மாற்கு 1:41 (40-42) குஷ்டரோகியின்மீது மனதுருகினார்
லூக்கா 7:13 (11-15) நாயீன் ஊர் விதவையின்மீது மனதுருகினார்
1. மனதுருகும் மேய்ப்பனாய் இருக்கிறார்
மத்தேயு 9:36,37 (அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர் களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலை ஆட்களோ கொஞ்சம்
மாற்கு 6:34 (34-44) இயேசு கரையிலே வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி...
2. மனதுருகும் தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:20 (11-24) இளையகுமாரன் எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
3. மனதுருகும் சமாரியனாய் இருக்கிறார்
லூக்கா 10:33 (30-37) பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
Author: Rev. M. Arul Doss